(மோடியின்) அதிரடி வளர்ச்சியா? (ராகுலின்) தோற்றுப்போன சோசலிசமா? மக்கள் விரும்புவது என்ன?

Updated : நவ 09, 2013 | Added : நவ 09, 2013 | கருத்துகள் (101)
Share
Advertisement
புதுடில்லி : பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் நாட்டை அதிரடியாக முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல மோடி விரும்புகிறார். ராகுலோ தொடர்ந்து ஏற்கனவே பலவழிகளில் இந்தியாவில் தோல்வியடைந்த சோசலிச கொள்கையை அமல்படுத்த விரும்புகிறார். ஆனால் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளதாக "தி பயோனியர்" பத்திரிக்கை 31ம் தேதி இதழில்,
Clear-cut, choice, this time ,Modi,Rahul, Who is, people's, choice? மோடியின், அதிரடி, வளர்ச்சி,ராகுலின், சோசலிசம், மக்கள், விரும்புவது என்ன?

புதுடில்லி : பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் நாட்டை அதிரடியாக முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல மோடி விரும்புகிறார். ராகுலோ தொடர்ந்து ஏற்கனவே பலவழிகளில் இந்தியாவில் தோல்வியடைந்த சோசலிச கொள்கையை அமல்படுத்த விரும்புகிறார். ஆனால் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளதாக "தி பயோனியர்" பத்திரிக்கை 31ம் தேதி இதழில், கட்டுரையாளர் கவுதம் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் பிரச்சார பணியில் தீவிரம் காட்டத் துவங்கி உள்ளனர். கட்சிகள் தங்களின் நம்பகத்தன்மையை மக்களிடம் காட்டுவதற்காக மொபைல் போன், டிவி, போஸ்டர், செய்தியாளர்கள் சந்திப்பு என சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் நாட்டின் சமீபத்திய பயங்கரவாத தாக்குதல்களால் பொதுக் கூட்டங்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளன. முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் தாக்குதல் நடத்தி தலைவர்களை கொலை செய்வது இந்தியாவை பொறுத்தவரை வழக்கமான ஒன்றாகி விட்டது. சமீபத்தில் மோடியை குறிவைத்து பாட்னாவில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் நடத்திய தாக்குதல் வரை இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இது போன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு தற்போது ஆளும் சோனியா குடும்பத்திலேயே 2 தலைவர்கள் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது போன்ற பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து ராகுல் இதுவரை வாய்திறக்கவில்லை. ஆதாரமில்லாத பல கடந்த கால அரசியல் நிகழ்வுகளையும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறிவரும் ராகுல், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை கூறவில்லை. எதிர்க்கட்சிகளை தாக்குவதையே குறியாக வைத்து பேசி வருகிறார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தொலைப்பேசி பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக விக்கிலீக்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்ட உடன் அமெரிக்காவின் ஏராளமான மக்கள் அதை தடுப்பதற்கான முறை, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அரசு பல யோசனைகளை தெரிவித்தனர். இது போன்று உலகின் பல நாடுகளில் சோசலிசம் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டு, அது தொடர்ந்து வெற்றிகரமாக கையாளப்பட்டும் வருகிறது. ஆனால் இந்தியாவில் மதங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிளவு ஏற்பட்டுள்ளது. கடந்த கால நிகழ்வுகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் அமைதியை மட்டுமே விரும்புகின்றனர். இதனாலேயே பயங்கரவாதத்திற்கு எதிராக அமைதி காக்கும் மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இதன் காரணமாக அமைதியை கொண்டு வரும் நடவடிக்கைகளை கொண்டு வர நினைக்கும் மோடி தலைமையிலான அரசு உருவாக வேண்டும் என பெரும்பாலானர்கள் விரும்புகின்றனர்.

ஏழைகளை வைத்து அரசியல்:

ஏழைகளை வைத்து அரசியல் செய்து வரும் காங்கிரஸ் கட்சி, கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற ஊழல்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ராகுலை அடுத்த பிரதமாக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் ராகுலோ, சோனியாவை பின்பற்றி வருகிறார். இவர்கள் வெளிநாட்டினர் என்ற பிரச்னையும் ராகுலுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வருகிறது. பொறுப்பு மற்றும் செயல்பாடுகள் பெரிய விஷயமாக இல்லாவிட்டாலும் இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு வர்த்தகம், தொழில்துறை, உள்நாட்டு உற்பத்தி, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, சீர்திருத்தம், சூழ்நிலைக்கு ஏற்ற நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் செயலிழந்து உள்ளது. ராகுல் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சோசலிச கொள்கை அடிப்படையிலான அரசும் அவர் மீதான நம்பத்தன்மையை பாதித்து வருகிறது. இத்தகைய பிரச்னைகளே தற்போது மோடியா? ராகுலா? என்ற கேள்வியை மக்கள் மனதில் எழுப்பி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-நவ-201310:07:25 IST Report Abuse
தமிழ்நாடு காங்கிரஸ் (நக்மா கோஷ்டி) அண்ணனுக்கு வளர்ச்சியும், எழுச்சியும் தேவை.....அதனால தமிழ் நாடு காங்கிரஸ் சார்பா கோஷ்டிக்கு ஒன்னு வீதம் "வயாக்ரா" மாத்திரை அண்ணனுக்கு வழங்கப்படும் என்று தீர்மானம் போடுறோம்- இவன் தமிழ்நாடு காங்கிரஸ் (நக்மா கோஷ்டி)
Rate this:
Cancel
peter jose - chennai,இந்தியா
11-நவ-201319:30:24 IST Report Abuse
peter jose பிஜேபி ஜால்ரா : அடிகொடுத்த கைபுல்லைகே (மோடி) இந்த நெலமை ந ,,,, அடிவாங்கின (ராகுல்) கட்டதுரை ... ன்லமி ? மோடி : இன்னுமாட இந்த உலகம்(பிஜேபி ஜால்ரா) நம்மை நம்புது .... பிஜேபி ஜால்ரா : அவங்க விதி. மோடி: இப்படி உசுபெதி உசுபெதி உடம்ப ரணகளம் அகிடிங்க
Rate this:
Cancel
moorthy - madurai,இந்தியா
11-நவ-201316:24:45 IST Report Abuse
moorthy மன்மோகன் தான் ராகுல் அரசியல் குரு ? எவரும் வாயை தொரக்கமட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X