அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏற்காட்டில் பிரசாரம் செய்வோர் யார்? பெயர் தெரிவிக்க தேர்தல் கமிஷன் கெடு

Added : நவ 09, 2013
Advertisement

சென்னை: "ஏற்காடு இடைத் தேர்தலில், பிரசாரம் செய்யப் போகும் நபர்கள் யார் என்ற விவரத்தை, இம்மாதம், 16ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இல்லையேல், அவர்களின் பிரசார செலவு, வேட்பாளர் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏற்காடு இடைத் தேர்தலில், விமானம் மற்றும் பிற வாகனங்கள் மூலம் பயணம் செய்து, பிரசாரம் செய்பவர்களின் பெயரை, தேர்தல் கமிஷனில், இம்மாதம் 16ம் தேதிக்குள் பதிவு செய்து, அனுமதி பெற வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில், 40 பேரும், அங்கீகாரம் பெறாத கட்சிகளின் சார்பில், 20 பேரும் செய்யும் பிரசார செலவு, வேட்பாளர் செலவில் சேர்க்கப்படாது. இதற்கு மேல், பிரசாரம் செய்பவர்களின் செலவு, வேட்பாளர் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும். ஏற்காடு தேர்தல் செலவுகளை கண்காணிக்க, மத்திய வருவாய் துறை அதிகாரி, பங்கஜ் குமார் பன்சாலும், பொது கண்காணிப்பாளராக, உத்தரபிரதேச, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவி பிரகாஷ் அரோராவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X