மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு: பஞ்சாப் மாநில அரசு முடிவு

Updated : நவ 10, 2013 | Added : நவ 09, 2013 | கருத்துகள் (19)
Share
Advertisement
சண்டிகார்: பஞ்சாப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு, சிறப்பு பாதுகாப்பு அளிக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, கடந்த மாதம், பீகார் மாநிலம் பாட்னாவில் பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வெடித்தது. மோடிக்கு, போதிய பாதுகாப்பு அளிக்க, பீகார் மாநில அரசு தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு: பஞ்சாப் மாநில அரசு முடிவு

சண்டிகார்: பஞ்சாப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு, சிறப்பு பாதுகாப்பு அளிக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.



பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, கடந்த மாதம், பீகார் மாநிலம் பாட்னாவில் பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வெடித்தது. மோடிக்கு, போதிய பாதுகாப்பு அளிக்க, பீகார் மாநில அரசு தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு பாதுகாப்பை பலப்படுத்தும்படியும், அவர் பங்கேற்கும் பொதுகூட்டங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பை தீவிரப்படுத்தும்படியும், உளவுத் துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதையடுத்து, அடுத்த மாதம், பஞ்சாபில், பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும், நரேந்திர மோடிக்கு, சிறப்பு பாதுகாப்பு அளிக்க, அகாலிதளம் கட்சி தலைமை வகிக்கும் கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இதில், பா.ஜ.,வும் அங்கம் வகிக்கிறது. இதன்படி, பஞ்சாபில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பு பிரிவு, மோடிக்கு தீவிர பாதுகாப்பு அளிக்கும். இந்த பிரிவில், இரண்டு அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள், மோடியை சுற்றி அரண் போல் வருவர். மேலும், எட்டு மாவட்டங்களில், எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி., அந்தஸ்தில் உள்ள, 22 அதிகாரிகள், 130 இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., - உதவி எஸ்.ஐ., உட்பட 7,000 போலீசார், மோடி பங்கேற்கும் பொது கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.





மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, பஞ்சாப் அரசு, சிறப்பு பாதுகாப்பு படை பிரிவை அமைத்தது. இதில், அனைத்து வகையான தற்காப்பு கலை கற்ற வீரர்கள், பாதுகாப்பு கருவிகள் அடங்கிய வாகனங்கள், எவ்வித சதியையும் கண்டுபிடிக்கும் கருவிகள் என, அனைத்து வசதிகளும் சிறப்பு பாதுகாப்பு பிரிவில் உண்டு. இந்த சிறப்பு பாதுகாப்பு பிரிவு தான், மோடியின் பாதுகாப்பை கவனிக்க இருப்பதாக, பஞ்சாப் மாநில, ஏ.டி.ஜி.பி., தினகர் குப்தா தெரிவித்தார்.


Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Marappan - London,யுனைடெட் கிங்டம்
11-நவ-201304:12:20 IST Report Abuse
Siva Marappan காங்கிரெஸ் ஆளும் வரை இந்திய நாடு உருப்படாது
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-நவ-201321:46:24 IST Report Abuse
Pugazh V மத்திய அரசின் 34 என் எஸ் ஜி கமாண்ட்க்கள், 22 உள்ளூர் காவல் அதிகாரிகள் 7000 காவலர்கள், இவர்களின் செலவு பா ஜ க தருமா அல்லது மக்களின் வரிப் பணமா? சொன்னால் கோபம் மட்டும் வரும். ஒரு மானில் அமுதல்வர் தமது அலுவல்களைக் கவனிக்காமல் இப்படி லீவும் போடாமல் ஆபீசுக்கும் போகாமல் எத்தனை நாட்கள், மாதங்களாக கட்சிப் பணியில் இருக்கிறார். இது எந்த விதத்தில் சரி? 2 மாதம் ஜெயா கொட நாடு சென்றாலே கூவுகிறார்களே, இவர் மட்டும் மாநிலத்தை விட்டு இப்படி கட்சிப் பணிக்காக ஊர் சுற்றலாமா? தேர்தல் வரட்டும், தமிழகம் பா ஜ க விற்கு பாடம் புகட்டும்.
Rate this:
Cancel
Nanban - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10-நவ-201318:22:05 IST Report Abuse
Nanban நல்லது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X