'நான் மலாலா' புத்தகம்:பாக்., தனியார் பள்ளிகளில் தடை

Updated : நவ 11, 2013 | Added : நவ 11, 2013 | கருத்துகள் (35)
Share
Advertisement
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் நாட்டில், பெண் கல்வியை மேம்படுத்த பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்து உதவியது.தற்போது அவர், இங்கிலாந்து பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்.மேலும் மலாலாவின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு
 'நான் மலாலா' புத்தகம்:பாக்., தனியார் பள்ளிகளில் தடை

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் நாட்டில், பெண் கல்வியை மேம்படுத்த பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்து உதவியது.தற்போது அவர், இங்கிலாந்து பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்.மேலும் மலாலாவின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் மலாலாவின் பெயரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.


புத்தகம் வெளியிட விருப்பம்:


தலிபான்களிடம் சிக்கி அனுபவ வேதனைகளை 'நான் மலாலா' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட மலாலா விருப்பமாக இருந்தார்.இந்த நிலையில்,இதற்கான உரிமையைப் பெற இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது.இங்கிலாந்து ஆசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதியுள்ள 'நான் மலாலா' என்ற 276 பக்க புத்தகம் உலக நாடுகளில் கடந்த மாதம் விற்பனைக்கு வந்தது.பாகிஸ்தானில்,இப் புத்தகம் ரூ.595க்கு விற்கப்படுகிறது.


தனியார் பள்ளி, நூலகங்களில் தடை:


இந்த புத்தகத்தில், மேற்கத்திய சக்திகளின் தூண்டுதலால் சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம் பெற்றிருப்பதால் 'நான் மலாலா' புத்தகத்தை பள்ளி பாடதிட்டம் மற்றும் நூலகங்களில் தடை விதித்துள்ளோம் என அந்நாட்டு அனைத்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் மிர்சா காஷிப் அலி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,பாகிஸ்தானில் உள்ள பள்ளிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.கோடிக்கணக்கான மாணவிகளுக்கு சுமார் 7 லட்சம் ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பகுதியினர் பெண் ஆசிரியைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மலாலா எழுதிய புத்தகத்தில் சல்மான் ருஷ்டியின் கருத்துகளுக்கு வலுசேர்க்கும் வகையிலான சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன.ஆகவே, பாகிஸ்தானில் உள்ள சுமார் 1.5 லட்சம் பள்ளிகளின் பாடதிட்டமாகவோ, கட்டுரை தொடர்பான போட்டிகளிலோ, பள்ளி நூலகங்களிலோ அந்த புத்தகத்தை பயன்படுத்த கூடாது என்று நாங்கள் தடை விதித்துள்ளோம்.


மேற்கத்திய சக்திகளின் துாண்டுதல்:


பெண்களும் கல்வி கற்று அதிகாரம் பெறுவதை உறுதிபடுத்துவதற்காக நாங்கள் முழு மூச்சுடன் பாடுபட்டு வருகிறோம். அதற்காக, மேற்கத்திய சக்திகளின் துாண்டுதலின்படி எங்கள் மத நம்பிக்கையின் மீது கடுமையான தாக்குதல் தொடுத்துள்ள மலாலாவின் புத்தகத்தை எங்கள் பள்ளிகளில் அனுமதிக்க முடியாது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
maravan - dublin,அயர்லாந்து
11-நவ-201320:43:42 IST Report Abuse
maravan ஆணும் பெண்ணும் சமம். பெண்ணுக்கு கல்வியை மறுக்கும் பழக்கம் ஆதி காலத்தில் எல்லா மதத்திலும் இருந்ததுதான்...ஆனால் காலபோக்கில் தவறுகள் திருத்தப்பட்டு பெண்கள் அனைவரும் கல்வி முதல் கார், விமானம் ஓட்டுகின்றனர்..ஆனால் இன்னும் கற்காலம் போல் பெண்கள் இப்படிதான் இருக்கவேண்டும் என்று அடிமை படுத்துவது ஆணாதிக்கத்தின் உச்ச கட்டம்.. அதுவும் தாலிபான்கள் மதத்தின் பெயரால் இதனை அமுல்படுத்த நினைகின்றனர்..இதை அனைவரும் எதிர்க்கவேண்டும்.
Rate this:
Cancel
kadayanallur Abu haani - kadayanallur,Tirunelveli,இந்தியா
11-நவ-201317:49:11 IST Report Abuse
kadayanallur Abu haani பாகிஸ்தான் நாட்டில், பெண் கல்வியை மேம்படுத்த பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை ( இவருக்கு என்ன தெரியும் இவரே மாணவி இவர் எப்படி பெண் கல்வியை மேம்படுத்த பிரச்சாரம் செய்திருப்பார் )தலிபான்கள் சுட்டதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்து உதவியது.தற்போது அவர், இங்கிலாந்து பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்.மேலும் மலாலாவின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் மலாலாவின் பெயரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது ..நோபெல் பரிசுக்கு சிபாரிசு செய்யும் அளவுக்கு இந்த பெண் என்னப்பா சேவை செய்தது .எல்லாம் மேற்க்கத்திய (இஸ்லாம் எதிர்ப்பு) சித்தாந்தத்தின் விளைவு.இதற்க்கு ஊடகமும் துணை போவது தான் கொடுமைஇதிலிருந்தே தெரிய வேண்டாமா இதில் எவ்வளவு அரசியல் உள்ளது என்று .வாழ்க ஜனநாயகம் .
Rate this:
Cancel
Khan Sahib - Tiruchirappalli,இந்தியா
11-நவ-201317:43:06 IST Report Abuse
Khan Sahib இஸ்லாமும், தாலிபான்களும் பெண்கள் கல்வி கற்க கூடது என்ற கொள்கை உடையவர்கள் என்று தவறாக சித்தரிக்க மாலா வை அயோக்கிய அமெரிக்கா ஒரு கருவியாக பயன் படுத்துகிறது. ஏன் பாகிஸ்தானில் முஸ்லிம் பெண்கள் யாரும் படிக்க வில்லையா? பெநேசிர் புட்டோ முஸ்லிம் பெண்தானே? அவர் என்ன படிக்காதவரா? இந்தியாவிலேயே நிறைய முஸ்லிம் பெண்கள் கல்வி கற்க செல்கிறார்களே..... முஸ்லிம்கள் நாடான சவுதி அரேபியாவில் உலகின் மிக பெரிய பெண்கள் பல்கலை கழகம் கடந்த மாதம் திறக்கப்பட்டதே...... இஸ்லாம் பெண்கள் கல்வி கற்க கூடது என்று சொன்னால், இதுவெல்லாம் எதற்கு? சீன தேசம் சென்றேனும் சீர்கல்வி பெறு என்பது முகமது (ஸல்) நபி அவர்களின் அறிவுரை.... உண்மை தெரியாமல், புரியாமல் பேசுவது, எழதுவது, குருடன்கள் யானையை தடவி பார்த்து யானை உலக்கை போல இருக்கிறது என்று சொல்வது போன்றது.. மாலா கிருத்துவ பெற்றொருக்கு பிறந்து, முஸ்லிம் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டவள். ஆகவே அவள் இஸ்லாத்தை பற்றி அவதூறு சொல்வதில் வியப்பில்லை.
Rate this:

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 394