கோர்ட் அவமதிப்பு வழக்கு பள்ளிக்கல்வி செயலாளர் ஆஜர்

Added : நவ 12, 2013 | |
Advertisement
மதுரை : ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்குவதை தாமதப்படுத்துவதாக தாக்கலான அவமதிப்பு வழக்கில், பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா, மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜரானார். புதுக்கோட்டை ரங்கராஜன் தாக்கல் செய்த மனு: இடைநிலை ஆசிரியராக 1986 ல் பணியில் சேர்ந்தேன். பி.எட்., முடித்ததால், 2000 ல் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக, அரசு பதவி உயர்வு வழங்கியது. தேர்வுநிலை ஆசிரியர்கள் கீழ்நிலை பணியில்

மதுரை : ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்குவதை தாமதப்படுத்துவதாக தாக்கலான அவமதிப்பு வழக்கில், பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா, மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜரானார்.
புதுக்கோட்டை ரங்கராஜன் தாக்கல் செய்த மனு: இடைநிலை ஆசிரியராக 1986 ல் பணியில் சேர்ந்தேன். பி.எட்., முடித்ததால், 2000 ல் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக, அரசு
பதவி உயர்வு வழங்கியது. தேர்வுநிலை ஆசிரியர்கள் கீழ்நிலை பணியில்
இருந்தால், அவர்களுக்கு சிறப்பு நிலை பதவி உயர்வு வழங்கலாம் என அரசு
உத்தரவிட்டது. அதன்படி, 2009 ல் 65 பேருக்கு சிறப்புநிலை பதவி உயர்வு வழங்கி, அரசு உத்தரவிட்டது. அப்பட்டியலில் என் பெயர் இல்லை. எனக்கு பதவி உயர்வு வழங்க கோரி, ஐகோர்ட்டில் மனு செய்தேன். மனுவை பள்ளிக் கல்வி செயலாளர் பரிசீலித்து, 8 வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, 2011ல் ஐகோர்ட் உத்தரவிட்டது. பள்ளிக்கல்வி செயலாளர் சபீதா, நடவடிக்கை எடுக்கவில்லை. கோர்ட் உத்தரவை அவமதித்ததாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிட்டார்.நீதிபதி எஸ்.நாகமுத்து முன், விசாரணைக்கு மனு வந்தது. பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா மற்றும் மனுதாரர் தரப்பில் வக்கீல் ஐசக்மோகன்லால்
ஆஜராயினர். அரசுத் தரப்பில், "கோர்ட் உத்தரவை அமல்படுத்தி விட்டோம்,' என தெரிவிக்கப்பட்டதால், மனுவை முடிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X