துவரை சாகுபடியில் ஏக்கருக்கு 800 கிலோ எடுக்க ஆலோசனை| Dinamalar

துவரை சாகுபடியில் ஏக்கருக்கு 800 கிலோ எடுக்க ஆலோசனை

Added : நவ 12, 2013 | |
சிவகங்கை : ""மாவட்டத்தில்,துவரை சாகுபடி செய்து, ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் எடுக்கலாம்,'' என, விவசாயத்துறை இணை இயக்குனர் செல்லத்துரை கூறினார். அவர் கூறியதாவது: மாவட்டத்தில்,பயறு வகை சாகுபடியை அதிகரிக்கும் நோக்கில்,துவரை சாகுபடியில் விதைகளை நேரடியாக நிலத்தில் விதைப்பதை விட நாற்றுகளாக வளர்த்து நடவு செய்யும் புதிய தொழில் நுட்பம் செயல்படுத்தபடுகிறது.எக்டேருக்கு

சிவகங்கை : ""மாவட்டத்தில்,துவரை சாகுபடி செய்து, ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் எடுக்கலாம்,'' என, விவசாயத்துறை இணை இயக்குனர் செல்லத்துரை கூறினார். அவர் கூறியதாவது: மாவட்டத்தில்,பயறு வகை சாகுபடியை அதிகரிக்கும் நோக்கில்,துவரை சாகுபடியில் விதைகளை நேரடியாக நிலத்தில் விதைப்பதை விட நாற்றுகளாக வளர்த்து நடவு செய்யும் புதிய தொழில் நுட்பம் செயல்படுத்தபடுகிறது.எக்டேருக்கு ரூ.7,500 மானியம் வீதம் 270 எக்டேரில்,துவரை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதிக நாட்கள் வயதுடைய உயர் விளைச்சல் தரும் மலட்டு தேமல் நோய்க்கு எதிர்ப்பு சக்தியுடைய கோ-7, எல்.ஆர்.ஜி.,41, ரகங்களை சாகுபடி செய்யவேண்டும்.ஏக்கருக்கு ஒரு கிலோ விதை போதும். பாலிதீன் பைகளில் தொழுஉரம் மணல் கலந்த கலவையை நிரப்பி,பூஞ்சாண மருந்து மற்றும் ரைசோபியம் விதை நேர்த்தி செய்த விதைகளை பாலிதீன் பைகளில் ஒரு பைக்கு 2 விதை வீதம் விதைக்க வேண்டும்.ஒரு ஏக்கருக்கு 2,500 பைகள் தேவைப்படும்.விதைத்த 25 - 30 நாட்களுக்கு பூவாளியால் நீர் பாய்ச்சி நாற்றுகளை வளர்க்க வேண்டும். நடவு வயலினை நன்கு உழவு செய்து மண் மாதிரி ஆய்வின்படி, அடியுரம், நுண்ணூட்ட உரங்கள் இட்டு,6 அடி இடைவெளியில் ஆழச்சால் எடுக்க வேண்டும். ஆழச்சால் வரிசையில் 2 அடி இடைவெளியில் பாலிதீன் பை நாற்றினை,அரை அடி குழி எடுத்து நடவு செய்து, 15 - 20 நாட்களில் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். நல்ல வாளிப்பான ஒரு நாற்றினை மட்டும் வைத்துவிட்டு, 2வது நாற்றினை அகற்றி விட
வேண்டும். நடவு செய்த 20 -30 நாளில் நுனிக்குருத்தினை கிள்ளி விடுவதன் மூலமாக பக்க கிளைகள் அதிகமாக தோன்றி பூங்கொத்து அதிகமாகும். பூ பூக்கும் நேரம் 2 சத டி.ஏ.பி., கரைசலை தெளிக்க வேண்டும். பூக்கும் பருவம் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் நீர் பாய்ச்ச வேண்டும். விவசாயத்துறை மூலம், துவரை நடவிற்கு சொட்டு நீரில் பாசனம் மானியத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. துவரை பூக்கும் பருவத்தில் காய்புழுவினை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும்.நடவு முறையில் துவரை சாகுபடி செய்வதன் மூலம் ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் பெறலாம். தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி, துவரை நடவு செய்ய, அந்தந்த விவசாய உதவி இயக்குனர்களை அணுகலாம்,என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X