கறவை மாடு வளர்ப்போருக்கு மானியத்தில்நீர்த்தெளிப்பான் :அரசு உத்தரவு

Added : நவ 12, 2013 | |
Advertisement
சிவகங்கை : ""கால்நடைத்துறை மூலம், கறவை மாடுகள் வளர்ப்போருக்கு, மானிய விலையில் நீர்த்தெளிப்பான், புல்வெட்டும் கருவி வழங்க,'' அரசு உத்தரவிட்டுள்ளது. வெண்மை புரட்சியை உருவாக்கும் நோக்கில், மாநில அரசு, பால் உற்பத்தியை பெருக்க, இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டம், தீவன புல் வளர்ப்பு திட்டம் உட்பட பால் உற்பத்திக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஒரு கட்டமாக, கறவை

சிவகங்கை : ""கால்நடைத்துறை மூலம், கறவை மாடுகள் வளர்ப்போருக்கு, மானிய விலையில் நீர்த்தெளிப்பான், புல்வெட்டும் கருவி வழங்க,'' அரசு உத்தரவிட்டுள்ளது. வெண்மை புரட்சியை உருவாக்கும் நோக்கில், மாநில அரசு, பால் உற்பத்தியை பெருக்க, இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டம், தீவன புல் வளர்ப்பு திட்டம் உட்பட பால் உற்பத்திக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஒரு கட்டமாக, கறவை மாடுகளுக்கு, வளர்க்கப்படும் புல்களை, நீர் சிக்கன முறையில் தண்ணீர் பாய்ச்ச ஏதுவாக, நீர்த்தெளிப்பான் கருவி,தீவன புற்களை, மாடுகள் சாப்பிடும் போது, செரிமான பிரச்னை ஏற்படாமல் இருக்க, புற்களை வெட்டும் கருவிகள் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்விரு, கருவிகளும் கால்நடைத்துறை மூலம், மாடு வளர்ப்போருக்கு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 75 சதவீத மானியம்: இதற்காக, மாடு வளர்ப்போருக்கு, தேவைப்படும் நீர்த்தெளிப்பான், புல்வெட்டும் கருவிகள், 75 சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள நீர்த்தெளிப்பான் கருவிக்கு, பயனாளிகள் ரூ.6,250 கட்டினால் போதும். அதே போன்று, ரூ.17,550 மதிப்புள்ள, புல்வெட்டும் கருவிக்கு, பயனாளிகள் ரூ.4,388 கட்டினால் போதும், கருவிகளை பயனாளிகள் இடத்திற்கே கொண்டுவந்து, கால்நடைத்துறையினர் பொருத்தி விடுவர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தலா 80 முதல் 120 கருவிகள் வரை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. மானிய விலையில், கருவிகள் பெற விரும்புவோர், அந்தந்த பகுதி கால்நடை மருத்துவ நிலையங்களை, அணுகலாம், என, உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X