பள்ளி அருகே திறந்தவெளி கழிப்பிடத்தால்...துர்நாற்றம்! சுகாதார சீர்கேட்டால் தவிக்கும் மாணவர்கள்

Added : நவ 14, 2013 | |
Advertisement
துறையூர்: நகராட்சி பள்ளியைச் சுற்றி திறந்தவெளி கழிப்பிடம் மற்றும் ஆடுவதை கூடத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால், அந்த பகுதியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், மக்கள் முகம் சுளித்தபடி செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால் மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சி பகுதியில் வேங்கடத்தானூர் சாலையில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி

துறையூர்: நகராட்சி பள்ளியைச் சுற்றி திறந்தவெளி கழிப்பிடம் மற்றும் ஆடுவதை கூடத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால், அந்த பகுதியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், மக்கள் முகம் சுளித்தபடி செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால் மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சி பகுதியில் வேங்கடத்தானூர் சாலையில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி உள்ளது. பெரிய ஏரிக்கரையையொட்டி உள்ள இந்த சாலையில், ஆதரவற்ற மாணவர்கள் தங்கி பயிலும் விவேகானந்தா வித்யாசதன் மற்றும் பெண்கள் தையல் பயிற்சி பெறும் விவேகானந்தா சேவாசதன் உள்ளது.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், வட்டார வள மையத்துக்கும் தினமும் ஆயிரக்கணக்கான மாணவிகளும், ஆசிரியர்களும், வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களும் வந்து செல்கின்றனர்.
வேங்கடத்தானூர் சாலையில் காய்கறி சந்தை இயங்கி வந்தது. தற்போது இல்லை. அந்த இடத்தில் ஆட்டு இறைச்சி விற்பனைக்கடைகள் மற்றும் ஆடு வதைகூடம் நகராட்சியால் கட்டப்பட்டு, தற்போது செயல்பாட்டில் உள்ளது.
இந்த சாலையொட்டியுள்ள நகராட்சி, 5, 6, 7, 9 ஆகிய வார்டு மக்கள், பெரிய ஏரி மற்றும் வேங்கடத்தானூர் சாலையில் திறந்தவெளியில் மலம் கழிப்பதால், அங்கு துர்நாற்றும் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் மக்கள், முகம் சுளித்து, மூக்கை மூடியபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆடுவதை கூடத்தில், ஆடுகளை அறுத்து சுத்தம் செய்யும் போது, அங்கிருந்து வெளியேறும் கழிவு நீரும் வெளியேற வழியின்றி, ரோட்டில் ஆறு போல் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் செல்வோர் பலரும் நோய் தொற்று ஏற்படுமோ? என்று பீதியிலேயே செல்கின்றனர்.
திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்க சுகாதார வளாகம் அமைக்கப்பட்டும், அது முறையாக திறந்து பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் சுகாதார வளாகம், ஆடுவதை கூடம் ஆகிய பகுதிகளில், மர்ம நபர்கள் தொடர்ந்து மது அருந்துவது, தகாத செயல்களில் ஈடுபடுவது ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதற்கென தெரு விளக்குகளை கூட எரியவிடாமல் அடித்து உடைத்து விடுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அனுப்பியும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்பகுதி, ஆறாவது வார்டு கவுன்சிலர் சுதாகர், பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதுகுறித்து சுகாதார பிரிவு அலுவலகத்தில் கேட்டபோது, ""துப்புரவு பணியாளர்களை கொண்டு நாள்தோறும் சுண்ணாம்பு பவுடர் தெளித்து சுத்தம் செய்து வருகிறோம். சுகாதார வளாகம் திறக்கப்படாதது, ஆடுவதை கூடம் குறித்து இன்ஜினியரிங் பிரிவில் கூறியுள்ளோம். அவர்கள் தான் அந்த பணியை செய்ய வேண்டும்,'' என்று கூறினர்.
டெங்கு காய்ச்சல் பரவும் மழைக்காலத்தில், அதுகுறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் துறையூர் நகராட்சி நிர்வாகம், நகராட்சி பள்ளியை சுற்றியுள்ள திறந்தவெளி கழிப்பிடம் மற்றும் ஆடுவதை கூடத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டையும், துர்நாற்றத்தையும் உடனே தீர்க்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X