சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சினிமா டைரக்டர் அலுவலகத்தில் திருட்டு

Added : நவ 15, 2013
Advertisement

வளசரவாக்கம்:சினிமா இயக்குனர் திருமுருகன் அலுவலகத் தில், 30 ஆயிரம் ரூபாய் திருடு போனது.'எம் மகன்' திரைப்படம், 'மெட்டி ஒலி' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களை இயக்கியவர் திருமுருகன். தற்போது 'நாதஸ்வரம்' என்ற தொடரை இயக்கி வருகிறார்.
அவருக்கு சொந்தமான அலுவலகம் வளசரவாக்கம், ஜானகி நகர் பிரகாசம் சாலையில் உள்ளது. இந்த அலுவலகத்தில் இரவு நேரங்களில் ஊழியர்கள் தங்குவர். நேற்று பிற்பகல் அலுவலகத்தில் இருந்தவர்கள், அருகில் உள்ள ஓட்டலுக்குச் சென்று திரும்பினர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு, அங்கு இருந்த, 30 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. வளசரவாக்கம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X