தவறுகளின் ஒட்டுமொத்த உருவமே காங்., கூட்டணி : அரசியல் விவாத மதிப்பீட்டில் தகவல்

Updated : நவ 15, 2013 | Added : நவ 15, 2013 | கருத்துகள் (35)
Share
Advertisement
புதுடில்லி : சில நன்மைகளும், ஏராளமான தவறுகளும் சேர்ந்தது தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு அரசியல் விவாதத்தில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு ஊழல்களுக்கு துணை நிற்பதாக இந்த விவாதத்தில் பங்கேற்ற பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.அரசியல் விவாதம் : லோக்சபா தேர்தல் மற்றும் 5 மாநில சட்டமன்ற
Some rights, many wrongs: At Express Adda, an assessment, of UPA,சில நன்மைகளும், பல தவறுகளும், சேர்ந்தது தான், காங்., கூட்டணி, அரசியல், விவாத, மதிப்பீட்டில், தகவல்

புதுடில்லி : சில நன்மைகளும், ஏராளமான தவறுகளும் சேர்ந்தது தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு அரசியல் விவாதத்தில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு ஊழல்களுக்கு துணை நிற்பதாக இந்த விவாதத்தில் பங்கேற்ற பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.


அரசியல் விவாதம் :

லோக்சபா தேர்தல் மற்றும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்தும், தற்போது நாட்டில் சமூக மற்றும் அரசியலில் ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்னைகள் குறித்தும் தனியார் டிவி ஒன்றில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய், தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் மெக்கின்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் அடில் ஜெயினுல்பாய், கொள்கை ஆராய்ச்சி மைய தலைவர் பிரதாப் பானு மேத்தா, பத்திரிக்கையாளர் சேகர் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தற்போதைய அரசியல் மற்றும் சமூக நிலை குறித்து விவாதம் செய்யப்பட்டது.


பிரபலங்கள் குற்றச்சாட்டு :

நிகழ்ச்சியில் பேசிய மல்லிகா சாராபாய், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் மத்திய அரசு ஊழல்களை அனுமதித்துள்ளது எனவும், இது ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்கும் நம்பிக்கை துரோகம் எனவும் தெரிவித்துள்ளார். மேத்தா கூறுகையில், அரசின் அடிப்படை கட்டமைப்பு நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என தெரிவித்துள்ளார். அடுத்த வரும் அரசாவது பிரதமர் அலுவலகம் இழந்த மதிப்பை மீட்டு தர வேண்டும் என்றார்.இந்த கருத்தை ஏற்றுக் கொண்ட குப்தா, இந்திய வரலாற்றில் எந்தவொரு அரசும் பிரதமர் அலுவலகத்தை இவ்வளவு மோசமாக நடத்தியது இல்லை என தெரிவித்தார். அரசு என்பது தனி நிறுவனம் அல்ல எனவும், பல்வேறு அரசுகளின் ஒன்றிணைந்த செயல்பாடு தேவை எனவும், இது இல்லாமல் போனது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவு எனவும் ஜெயினுல்பாய் தெரிவித்துள்ளார்.


தொழில்துறை பின்னடைவு :

ஜெயிலுல்பாய் பேசுகையில் தொழில்துறை வளர்ச்சி குறித்து வேதனை தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறுயதாவது : கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் ஐடி, பார்மா மற்றும் ஆட்டோ துறைகள் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளன; இது அரசின் நன்மை செயல் எனலாம்; அதே சமயம் இந்த நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை அதிகம் அனுமதித்தது அரசின் மிகப் பெரிய தவறு; இது இந்தியாவின் வளர்ச்சி என்று கருத முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


பிரச்னைகளுக்கு தீர்வு :

தலைமை பதவிக்கு சிறந்தவர் யார் என பேசுகையில், இந்தியாவின் தற்போது நிலை சீராக தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரே தேவை எனவும், நாட்டை பற்றி யோசிக்காத தலைவரால் நாட்டின் தலைமை பொறுப்பை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியாது எனவும் மல்லிகா தெரிவித்துள்ளார். நாட்டின் அடுத்த தலைவர் ராகுலா, மோடியா என மிகப் பெரிய அரசியல் விளையாட்டு நடைபெற்று வருவதாகவும், இருப்பினும் இருவரும் வரலாற்றுக்கு எதிராக உண்மைகளை கூறி வருவதாகவும் மேத்தா தெரிவித்துள்ளார். அரசிலுக்கு புதுவரவான அரவிந்த கெஜ்ரிவால் பற்றி பேசுகையில், டில்லி தேர்தலில் காங்கிரசிற்கு மிகப் பெரிய சவாலாக அரவிந்த் கெஜ்ரிவால் இருப்பார் என குப்தா தெரிவித்துள்ளார். சுதந்திர பெற்ற 60 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் நம்மால் பட்டினி சாவுகளை தடுக்க முடியாமல் உள்ளது என ஜெயினுல்பாய் தெரிவித்துள்ளார்.

கல்வி உரிமை, தகவல் பெறும் உரிமை, சுகாதார திட்டங்கள் உள்ளிட்டவைகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிக முக்கியமான திட்டங்களாக இருந்தாலும், நாட்டின் வளர்ச்சியில் தொலைநோக்கு பார்வையை கொண்டு வரத் தவறியது இந்த அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாக உள்ளதாகவும் இந்த விவாத நிகழ்ச்சியில் பேசப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan Thamotharan - Chennai,இந்தியா
23-நவ-201317:00:00 IST Report Abuse
Nagarajan Thamotharan கடந்த 65 ஆண்டுகளாக இந்திய மக்களை மொழி வாரியாகவும் ஜாதிவாரியகவும் மத ரீதியாகவும் பிரித்து ஆட்சி நடத்தி மதசார்பின்மை கொள்கையில் தோல்வியுற்று வகுப்பு வாதத்தையும் மதவாதத்தையும் உருவாக்கிய பெருமை காங்கிரஸ் கட்சிக்கே சேரும் ( உதாரணமாக மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தன்னுடைய தனிப்பட்ட சுயநலத்துக்காக 1969 மற்றும் 1985ல், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது, குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2002 கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை விட அதிகம்.கடந்த, 1984ல், இந்திரா படுகொலை செய்யப்பட்ட போது, சீக்கிய மக்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை, இன்னும் சரியாக தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், 16 பேர் மீதும் காவல் துறை அதிகாரிகள், 13 பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. யார் மீதும், பெரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. "பலம் வாய்ந்த மரம் சாயும் போது, மண்ணையும் சிறிது பெயர்த்து எடுத்துவிடும்' என்று ராஜிவ் கூறியதை, யாரும் பெரிதுப்படுத்தவில்லை). வகுப்பு வாதத்தை தூண்டி கலவரத்தை ஏற்படுத்திவிட்டு தனிப்பட்ட அரசியல் சுயலாபத்திற்காக எதிர்க்கட்சி பிரமுகரின் மீது பழியை போட்டு வழக்கை திசைதிருப்பும் முயற்சியிலும் காங்கிரஸ் கட்சி தற்போது தோல்வி கண்டுள்ளதை உ .பி., மாநிலம் முஷாபர்நகர் கலவரத்தை கொண்டு இந்திய மக்களுக்கு தெளிவாகிறது. வரவிருக்கும் சட்டசபை மற்றும் பார்லி., தேர்தலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி சீர்குலைக்க கூடும் என்று பிரதமரே பேசியிருப்பது சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாத செயல்களை செய்யும் அரசியல் வாதிகள் கிரிமினல்கள் காங்கிரஸ் கட்சியில் இருப்பதாய் ஒத்துக்கொண்டுள்ளார்.
Rate this:
Cancel
Skv - Bangalore,இந்தியா
16-நவ-201310:37:50 IST Report Abuse
Skv உஷ் வாயே தொரக்கப்படாது சொநியம்மாகு கோவம் வந்துரும் 1947லெந்து அவதான் நம்மனாட்டுக்கே ப்ளான் போட்டுதந்துண்டுருக்கா . அவளுக்குத்தான் நம்பால் நாட்டின் எல்லா விவரமும் உள்ளங்கை நெல்லிக்கனி கூட்டனியொ கேக்கவே வேண்டாம் நாடு குட்டிச்சுவராபோனதுக்கே நெருஅண்ட் பரம்பரையே 100%காரணம்
Rate this:
Cancel
N SHANMUGA SUNDARAM - chennai,இந்தியா
15-நவ-201317:33:46 IST Report Abuse
N SHANMUGA SUNDARAM மஞ்சள் துண்டுடன் கூட்டணி வைத்தவுடனேயே தெரியும் இது ஊழல் அரசாகத்தான் இருக்கும் என்று
Rate this:
sethu - Chennai,இந்தியா
16-நவ-201313:51:20 IST Report Abuse
sethuதவறாக சொல்லாதீர்கள் ,முத்தமிழ் வித்தகருக்கு ரோசம் வந்துடப்போகுது ,முன்பெல்லாம் எப்போ ,கட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் இல்லையோ அப்போதெல்லாம் ஒரு அறிக்கை விடும் இந்த மஞ்சள் ,நான் எனது தலைமப்படவி என்ற சுமைஏய் இறக்கி வைக்கிறேன் ,அதன் பின் இரவு 2 மணிக்கு ,தொடர்களின் வர்ப்புரதினாலும்,கழக கண்மணிகளின் ,தீக்குளிப்பை தடுக்கும் பொருட்டும் ,நான் மறுபடியும் எனது சுமையெஇத்தூக்கி சுமக்கிறேன் என நா கூசாமல் ,நெஞ்சம் பதறாமல் அறிக்கை விட்டுவார்,இதை பலமுறை நான் படித்துள்ளேன் ,மேலும் தமிழனுக்கும் இலங்கா,தமிழனுக்கும் தனது உயிரை துச்சமென மதித்து ,பலமுறை தீக்குளிக்க முயற்சியும் செய்வதாக சொல்லுவார், அதையும் நடு இரவில் அறிக்கையாக விட்டு தொண்டர்கள் அனாதையாக மரிவிடுவார்களோ என்ற நெஞ்சம் பதிப்பால் தனது சாகும் என்னத்தை மாற்றியாதாக ,ஒரு கண்ணம்மாபேட்டை குப்பைபொறுக்கும் சிறுவனின் மன ஓட்டத்தின்மூலம் அறிந்து கொண்டு உடனே நிறுத்திவிட்டதாக ஒரு அறிக்கை இடுவார் இர=தும் பலமுறை நடத்திக்காட்டியதுதான்.தமிழகம் மட்டும் தொழில் செய்தால் போதாது என இந்திய முழுக்க தனது தொழில் சாம்ராஜ்யத்தை மத்திய அரசின் கொள்கையோடும் ,உருதுனையோடும் விரிவாக்கினார்,அதற்காக எத்தனை நாடகங்கள் ,நடிப்புகள்,வசனங்கள் ,தீர்மானங்கள் ,கொள்கைமுலக்கங்கள்,கொலைகள்,விசாரணைகள் என்ற பெயரில் கூத்துக்கள் ,இதற்க்கு மேலும் இவர் தன்னை முத்தமிழுக்கும் வித்தகர் என தனது குடும்ப தொலை காட்ச்சியால் ஒரு நாளைக்கு 1000 முறைகள் சொல்லி மக்களின் மனதில் தான் ஒரு திருவல்லுவராகவூம்,கம்பனாகவூம்,ஒரு இளங்கோவடிகள் போலவும் சொல்லி திரிவது ,தமிழனுக்கு இழுக்கோ இல்லையோ தமிழுக்கு கேடு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X