யாழ்ப்பாணத்தில் டேவிட் கேமரூன்: தமிழ் மக்களையும், தலைவர்களையும் சந்தித்தார்

Updated : நவ 15, 2013 | Added : நவ 15, 2013 | கருத்துகள் (74)
Share
Advertisement
கொழும்பு: காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை சென்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், யாழப்பாணம் சென்று தமிழ் மக்களையும், தமிழ் தலைவர்களையும் சந்தித்து பேசினார்.இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாட்டு தலைவர்களும் தலைநகர் கொழும்புவில் குவிந்துள்ளனர். அவர்களுக்கு சிறப்பு கம்பள வரவேற்புடன், வாத்திய, நடன
Cameron meets Tamil leaders in Lanka's northern province

கொழும்பு: காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை சென்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், யாழப்பாணம் சென்று தமிழ் மக்களையும், தமிழ் தலைவர்களையும் சந்தித்து பேசினார்.
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாட்டு தலைவர்களும் தலைநகர் கொழும்புவில் குவிந்துள்ளனர். அவர்களுக்கு சிறப்பு கம்பள வரவேற்புடன், வாத்திய, நடன வரவேற்புகளும் அரங்கேறிவருகின்றன. இந்நிலையில், இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கொழும்பு வந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், அங்கிருந்து ராணுவ விமானத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்திற்கு சென்றார். இலங்கை சுதந்திரம் அடைந்த பின், அதாவது 1948ம் ஆண்டுக்குப்பின், யாழ்ப்பாணம் செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் கேமரூன் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, கேமரூன் தனது பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில், அவரது யாழப்பாணம் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கேமரூனை வரவேற்ற தமிழ் மக்கள் குறிப்பாக பெண்கள், போரின் போது காணாமல் போன தங்களது உறவினர்களை மீட்கும்படி அவரிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர். பின்னர் அவர்களிடம் பேசிய கேமரூன், தனது யாழ் பயணம் மிகவும் அழுத்தமான பதிவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், தமிழ் மக்களின் துயரத்தையும் வேதனையையும் தனக்கு வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார். பின்னர் சமீபத்தில் தீக்கிரையாக்கப்பட்ட உதயன் பத்திரிக்கை அலுவலகத்திற்கும் சென்ற கேமரூன், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனையும் சந்தித்து பேசினார்.
இதனிடையே கேமரூன் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை அரசுக்கு ஆதரவானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காமன்வெல்த் மாநாடு துவங்கிய சில மணி நேரத்தில் நடந்துள்ள கேமரூனின் யாழ்ப்பாணம் பயணம், இலங்கை அரசையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா
16-நவ-201316:07:19 IST Report Abuse
தங்கவேல்  இங்கிலாந்து பிரதமர் எதற்காக வந்தாரோ அந்த வேலையை ஒழுங்காகவே செய்துள்ளார்..
Rate this:
Cancel
தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா
16-நவ-201316:06:38 IST Report Abuse
தங்கவேல்  அவர் சட்டை போட்டுள்ளார் ... இவர் கோட் போட்டுள்ளார்...
Rate this:
Cancel
Thiyagarajan Elaiyaraja - tirunelveli,இந்தியா
16-நவ-201310:41:36 IST Report Abuse
Thiyagarajan Elaiyaraja இலங்கை தமிழர்களின் நிலையை பொறுத்தவரை இரண்டு விதமான நிலைப்பாடுகளை எடுக்கலாம். ஓன்று போரில் இறந்தவர்களுக்கு நீதி வேண்டும் இரண்டாவதாக இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு மறுவாழ்வு வேண்டும். இந்தியா காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் தமிழர்களின் சாவுக்கு நீதி வேண்டும் என்று சர்வதேச சமுதாயம் திரும்பி பார்க்கலாம் ஆனால் இப்பொழுது இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும் என்றால் இந்தியா இலங்கையுடன் நட்பாக இருப்பதே நல்லது. ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கொடு வந்த தீர்மானத்தை ரஷ்யா , சீனா, மற்றும் பல கம்யூனிச நாடுகள் ஆதரிக்கவில்லை இன்னும் சொல்ல வேண்டுமானால் தமிழக சட்ட மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கட்சி கூட ஆதரிக்கவில்லை. இந்தியா இலங்கைக்கு சென்றால் தான் தமிழ் மக்கள் நிம்மதியுடன் வாழ முடியும் . இது ஜெயலலிதாவிற்கும் தெரியும், கலைஞருக்கும் தெரியும் , வைகோவிற்கு தெரியும். முதல நாள் தீர்மானத்தை கொண்டு வந்தவர் மறுநாள் முல்லிவக்கள் முற்றத்தை இடித்து விடுகிறார், முதல்நாள் காங்ரஸ் கட்சியை மிரட்டும் கலைஞர் இரண்டாம் நாள் விவாதத்திற்கு உரியது என்கிறார், ஆனால் வைகோ மட்டும் அரசியல் செய்ய எந்த காரணமும் இல்லாததால் இப்படியே அலைகின்றார். ஆனாலும் இலங்கை தமிழருக்காக போராடுபவர் மீது அடக்குமுறையை அவிழ்த்துவிடும் ஜெயலலிதாதான் தமிழின துரோகி. நெடுமாறன் , வைகோ போன்றவர்கள் இபிரபாகரனை பற்றி பேசியதால் தான் போடா சட்டத்தில் கைது ஆனார்கள். கலைஞர் அவர்களை வெளியே கொண்டு வந்தார். அந்த ன்றி இல்லாமல் ஜெயாவை புகழ்ந்த நெடுமாறனின் நிலைமை இன்று பரிதாபம். கலைஞர் ஆட்சியில் காவல்துறை மக்களுக்கு பதில் சொல்லியது சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தது. இன்றைக்கு காவல்துறை கண்டு மக்கள் அலற வேண்டி யுள்ளது.
Rate this:

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 394