பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம்

Added : நவ 16, 2013
Advertisement

புதூர் : தூத்துக்குடி அருகே உள்ள வாகைக்குளம் ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தில் தென்னை மரத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் மரம் ஏறும் கருவி கொண்டு மரம் ஏறும் பயிற்சியின் முதல் கட்ட 6 நாட்கள் இலவச பயிற்சி முகாம் நடந்தது.
முகாமை வாகைக்குளம் ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் அழகுகண்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்து பேசினார். தொழில் நுட்ப வல்லுநர் சீனிவாசன் வரவேற்றார். சென்னை தென்னை வளர்ச்சி வாரிய தொழில் நுட்ப வல்லுநர் செல்வக்குமார் கலந்து கொண்டு தென்னை மரம் ஏறும் கருவியின் பயன்பாடுகள் குறித்து விரிவுரை செய்து இயக்கி காட்டி பயிற்சி அளித்தார். பூச்சியல் துறை வல்லுனர் அசோக் குமார் தென்னையில் பூச்சி நோய் கட்டுப்பாடு பற்றிய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு செயல் விளக்கம் செய்து கலந்து கொண்ட விவசாயிகளின் சந்தேகங்களுக்கு கலந்துரையாடல் செய்து விளக்கம் அளித்து பேசினார். தொடர்ந்து தென்னை சாகுபடியில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் பற்றிய நேரடி விளக்கங்களை உழவியல்துறை தொழில் நுட்ப வல்லுநர் முருகன் கலந்து கொண்டு விளக்கினார். விழா ஏற்பாடுகளை தொழில் நுட்ப வல்லுனர்கள் அசோக்குமார், வெங்கடேஷ் இணைந்து செய்தனர்.
மேலும் வாகைக்குளம் ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அழகுகண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது : நமது தூத்துக்குடி மாவட்டத்தில் தென்னையில் பூச்சி நோய் தாக்குதல் மற்றும் அறுவடைக்கு ஆள் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் வாகைக்குளம் ஸ்காட் வேளாண் அறிவியல் மையம், மற்றும் சென்னை தென்னை வளர்ச்சி வாரியம், இணைந்து மேலும் 2 கட்ட இலவச பயிற்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் 18 யிலிருந்து 45 வயதுடைய விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொள்ளலாம், மேலும் வரும் வாரத்தில் 2ம் கட்ட பயிற்சி (நவம்பர்) 18 முதல் 23ம் தேதி வரை 6 நாட்கள், மற்றும் 3ம் கட்ட பயிற்சி 25ம் தேதி முதல் 30ம் தேதி 6 நாட்கள் வரை இலவச பயிற்சியாக நடைபெற உள்ளது. எனவே கிராமப்புற இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். கலந்து கொண்டு பயிற்சி பெறும் அனைவருக்கும் ரூ4500 மதிப்புள்ள தென்னை மரம் ஏறும் கருவி இலவசமாக வழங்கப்படும். மேலும் விரிவான தொடர்புக்கு 9942978580 மற்றும் 7598869175 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X