போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை| UK PM calls for an investigation into alleged war crimes in Sri Lanka | Dinamalar

போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை

Updated : நவ 16, 2013 | Added : நவ 16, 2013 | கருத்துகள் (235) | |
கொழும்பு: இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறி்த்து, ஒளிவு, மறைவற்ற, நேர்மையான விசாரணையை இலங்கை அரசு நடத்த வேண்டும் என்றும், வரும் மார்ச் மாதத்திற்குள் இதை செய்யாவிட்டால், இலங்கை போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு இங்கிலாந்து ஏற்பாடு செய்யும் என்றும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை

கொழும்பு: இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறி்த்து, ஒளிவு, மறைவற்ற, நேர்மையான விசாரணையை இலங்கை அரசு நடத்த வேண்டும் என்றும், வரும் மார்ச் மாதத்திற்குள் இதை செய்யாவிட்டால், இலங்கை போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு இங்கிலாந்து ஏற்பாடு செய்யும் என்றும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தார்.

காமன்வெலத் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை சென்ற இங்கிலாந்து நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன், வழியில் டில்லி வந்தார். பின், கோல்கட்டா பயணத்தை முடித்துக் கொண்டு, யாழ்ப்பாணம் சென்றார். அங்குள்ள மீள்குடியேற்ற முகாமில் தங்கி உள்ளவர்களை அவர் சந்தித்து பேசினார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'வடபகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும், மிக விரைவில் தமிழர்களை மீள் குடியமர்த்த வேண்டும்,' என்று கூறினார்.

இதையடுத்து, காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட, டேவிட் கேமரூன் பேசியதாவது:
பத்திரிகை சுதந்திரம் வேண்டும் :

இலங்கை ராணுவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் குறித்து உடனடியாக வெளிப்படையான விசாரணை நடத்த இலங்கை அரசு முன் வர வேண்டும். இதை வரும் மார்ச் மாதத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், பிரிட்டன் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிடும். இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு இங்கிலாந்து ஏற்பாடு செய்யும். நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என பிரிட்டன் எதிர்பார்க்கிறது. இங்கு பத்திரிகை சுதந்திரம் காக்கப்பட வேண்டும்.

இலங்கையில், மனித உரிமைகளை கடைப்பிடிப்பதிலும், அவற்றை புனரமைப்பதிலும் அந்நாட்டு அரசு வேகமாக பணியாற்ற வேண்டும். இதற்கு எவ்வளவு காலமாகும் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் சரியான வகையில் , உரிய நேரத்தில் அதை நிறைவேற்ற வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு டேவிட் கேமரூன் பேசினார்.
முன்னதாக இங்கிலாந்து பத்திரிகை பிரிவு செயலரும் இங்கு பத்திரிகை சுதந்திரம் இல்லை என்று இலங்கையை குறை கூறியிருந்தார்.

இலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்து வந்த, விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டு போர், கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த போர், சர்வதேச சமுதாயத்தின் பல்வேறு கண்டனங்களுக்கு உள்ளாகி உள்ளது. போரின் போது அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டது குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணை நடத்த இலங்கை அரசு இதுவரை முன்வராததே இதற்கு காரணம்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X