ம. பிரதேச தேர்தல் களம் சூடு பிடிக்கிறது ; மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்

Updated : நவ 17, 2013 | Added : நவ 17, 2013 | கருத்துகள் (21)
Advertisement
ம. பிரதேச தேர்தல் களம் சூடு பிடிக்கிறது ; மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்

போபால்: மத்திய பிரதேசம் தேர்தலில் 2 முறை ஆட்சி செய்து வரும் பா.ஜ.,வுக்கு 3 வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற முயற்சிக்கும் விதமாக கவர்ச்சியான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த கட்சி வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் இது வரை எந்த கட்சியினரும் சொல்லாத, மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் இலவசமாக வழங்கப்படும் என்பது ஹைலைட். டில்லி, மிசோராம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ( நவ 25 ம் தேதி ) , சட்டீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பர் மற்றும் டிசம்பரில் தேர்தல் நடக்கிறது. இங்கு அரசியல் கட்சியினர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.


மத்திய பிரதேசத்தில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. இந்த கட்சி தேர்தல் குழுவினர் நேற்று போபாலில் நடந்த ஒரு விழாவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநில தேர்தல் குழு தலைவர் விக்ரம் வர்மா மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். குறிப்பாக இளம் வாக்காளர்களை கவரும் விதமாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு :


இதில் அடங்கியிருக்கும் வாக்குறுதிகள் வருமாறு:

* அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் இலவச ஸ்மார்ட் போன்


*தகுதி உடைய மாணவ, மாணவிகளுக்கு, இலவச லேப்டாப்


*5 லட்சம் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு


*வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடுகள் கட்டி தரப்படும்


* அனைத்து கிராமங்களும் நகர் பகுதியில் இணைக்கும்படி 100 சத போக்குவரத்துக்கு உறுதி


*விவசாயிகளுக்கு கவர்ச்சிகர இன்சூரன்ஸ் திட்டம்


* விவசாயகிகளுக்கு காப்புறுதி திட்டம்


*வேளாண்பயிர்கள் அழிவை சந்தித்தால் அதற்கு அதிக பட்ச நிவாரணம்


இது குறித்து மாநில முதல்வர் சிவராஜ்சில் சவுகான் கூறுகையில், எங்களது மாநிலத்தில் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களது நலனுக்கும், வளர்ச்சிக்கும் உதவும் வகையில் நாங்கள் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளோம். இதற்கு எங்களுக்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என்றார்.

இது பொய்களின் மூட்டை :

இந்த தேர்தல் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த காங்., மூத்த தலைவர் திக்விஜயசிங் கூறுகையில்; இது மக்களை ஏமாற்றும் செயல் என்றும், இது அனைத்தும் பொய்யான வாக்குறுதிகள் என்றும் தெரிவித்தார்.
இது பொய்களின் மூட்டை என்று ம.பி., காங்., தேர்தல் குழு தலைவரும், மத்திய அமைச்சருமான ஜோதிராத்தியா சிந்தியா சாடியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
common man - seoul,தென் கொரியா
18-நவ-201308:14:47 IST Report Abuse
common man மன் மோகன் கைeல் அதிகாரம் இல்லை ஆனால் மோடி பிரதமர் வேட்பாளர் என்ற அதிகாரம் இருந்தும் அவரது கட்சியல் இலவசங்களை அறிவிக்காமல் சாதனைகளை கூறி வோட்டு கேட்க முடியவில்லை . மக்களின் மனவோட்டத்தை புரிந்துகொள்ளுங்கள் நாங்கள் கேட்பது இலவசம் அல்ல ....
Rate this:
Share this comment
Cancel
Nanban - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-நவ-201319:35:11 IST Report Abuse
Nanban அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் இலவச ஸ்மார்ட் போன்.... இது எங்கு போயி முடியுமோ? .. இள ரத்தம் இனி ஸ்மார்ட் போனில் ..ஐயகோ.. என் இனிய எதிர்கால இளைய தலைமுறை என்ன முடிவு எடுக்குமோ? தெரியவில்லையே? அட வீணாய்ப்போன அரசியல் வியாதிகளே.. உங்கள் ஆட்சி அதிகாரப் பசிக்கு எதிகால இளைய தலைமுறைனரை பலி கொடுக்காதீர்..
Rate this:
Share this comment
Cancel
Siva - Muscat,ஓமன்
17-நவ-201317:28:15 IST Report Abuse
Siva இனி இந்தியா முன்னேறிவிடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X