சோனியா-மோடி : பகுத்தறியும் திறன் கொண்ட தலைவர் யார்?

Updated : நவ 18, 2013 | Added : நவ 18, 2013 | கருத்துகள் (87)
Share
Advertisement
புதுடில்லி : சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலின் இறுதிகட்ட பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த காரசார பிரச்சாரங்கள், உண்மையான நாட்டிற்கு எந்த நன்மை தரக் கூடியது என்பதை பகுத்தறியும் திறன் கொண்ட தலைவர் யார்? இந்திய அரசியல் தலைவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதற்கு என்ன காரணம்? என்ற கேள்விகளையே அனைவர்
Sonia, Vs Modi, Who is the real, divisive leader,சோனியா,மோடி, பகுத்தறியும், திறன் கொண்ட, தலைவர், யார்

புதுடில்லி : சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலின் இறுதிகட்ட பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த காரசார பிரச்சாரங்கள், உண்மையான நாட்டிற்கு எந்த நன்மை தரக் கூடியது என்பதை பகுத்தறியும் திறன் கொண்ட தலைவர் யார்? இந்திய அரசியல் தலைவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதற்கு என்ன காரணம்? என்ற கேள்விகளையே அனைவர் மனதிலும் ஏற்படுத்தி உள்ளது.


சோனியாவின் பேச்சு :

சோனியாவின் பேச்சுக்கள், தனது கனவு திட்டமான உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்தியதை மிகைப்படுத்தியும், பா.ஜ., மற்றும் மோடிக்கு எதிரான கருத்துக்களை கொண்டதாகவும் இருந்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருப்பது சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும், பா.ஜ., பதவி பேராசை கொண்டுள்ளதாக சோனியா கூறி வருகிறார். தங்களை மதசார்பற்றவர்கள் என காட்டிக் கொள்வதிலேயே சோனியாவின் பேச்சின் நோக்கமாக இருந்து வருகிறது. காங்கிரசின் முக்கிய தலைவர்களும் காங்கிரஸ் தங்களின் பதவிகளை காப்பாற்றிக் கொள்வதற்காக கட்சி தலைமையை புகழ்ந்து பேசி வருகின்றனர். சங்பரிவார் விவகாரம் காரணமாக சரத் பவார் கட்சியில் இருந்து விலகினார். அதே காரணத்திற்காக 1999ல் சோனியாவை பிரதமர் ஆக்குவதற்கு முலாயம் சிங் தடையாக இருந்தார். 2009ம் தேர்தலின் போது ஜெயலலிதாவும் சோனியா மீது இதே விவகாரத்தை கிளப்பினார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வளர விடாமல் சோனியா தடுத்ததன் காரணமாக மம்தா பானர்ஜியும் கூட்டணியில் இருந்து விலகி உள்ளார். சோனியா பரிந்துரைக்காவிட்டால் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி ஆகி இருக்க முடியாது. மம்தாவும், முலாயமும் அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க பெரிதும் முயற்சித்தும் அது முடியாமல் போனது. தேசியவாதத்தை பரப்பி காலனி ஆதிக்கத்தை கொண்டு வர சோனியா நினைப்பதாகவே பெரும்பாலான இந்தியர்களும் இந்திய அரசியல்வாதிகளும் கருதுகின்றனர். கட்சியில் தனது அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொள்வதற்காகவே 2004ம் ஆண்டு முதல் பிரதமர் பதவி ஏற்பதில் இருந்து விலகி இருந்ததுடன், தனது உத்தரவின்படி நடப்பவரே பிரதமர் பதவியில் இருக்க வேண்டும் எனவும் சோனியா விரும்பினார். இன்று அதே பாணியை அவரது மகனும் பின்பற்றி வருவதுடன் மோடியை தாக்கி பேசுவதையே முக்கிய பணியாக கொண்டுள்ளார்.


மோடிக்கு எதிரான சூழ்ச்சிகள்:

2004ல் வாஜ்பாய் பிரதமராகி இருந்தாலோ, 2009ல் அத்வானி பிரதமராகி இருந்தாலோ சோனியாவின் எண்ணங்கள் நிறைவேறி இருக்காது. தற்போது மோடிக்கு எதிராக காங்கிரசால் கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களும் அவரை பிரிவினைவாத தலைவராக சித்தரிக்கப்பட்டு வருகின்றன. டில்லி தேர்தலை மையப்படுத்தி சில பிராந்திய கட்சிகளும் மோடி எதிரான காங்கிரசின் பாணியை தொடர்ந்து வருகின்றன. பதவியில் இருக்கும் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பெரிதாக்கி அவரை பதவியில் இருந்து விலக்க அனைத்து அரசியல் தலைவர்களும் காத்துக் கொண்டுள்ளனர். அந்த வகையில் 1960களிலும், 1970களிலும் எதிர்க்கட்சிகளின் பெரும் நெருக்கடிக்கு ஆளானவர் இந்திரா. ஆனால் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு பொருத்தமானவரைப் போன்று மோடி ஆரம்ப காலத்தில் தோன்றினாலும், பின்னர் இந்திய அரசியலில் தன்னை ஒரு வெற்றியாளராகவும், மிகச் சிறந்த தலைவராகவும் மோடி நிலைநாட்டிக் கொண்டுள்ளார். நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு தேவையானவற்றை பிரிந்தறிந்து செயலாற்றுவதிலும் மோடியை தன்னை திறமைசாலி என்றே நிரூபித்துக் கொண்டுள்ளார்.


இந்திராவும் மோடியும் :

இந்திரா, மோடி இருவரையும் ஒப்பிடுகையில் இந்திராவுக்கு எதிராக வங்கதேச பிரச்னையும், மோடிக்கு எதிராக பொருளாதார வளர்ச்சியும் மிகப் பெரிய சவாலாக அமைந்தன. இருவருக்குமே ஆதரவுகளும், எதிர்ப்புக்களும் சம அளவிலேயே இருந்துள்ளன. 2002 குஜராத் கலவரம் நீங்கலாக பார்த்தால் மோடியை விட காங்கிரசே அதிகவிலான வகுப்புவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது. மோடி மீது 2002 கலவர குற்றச்சாட்டு மட்டுமே கூறப்படுகிறது. ஆனால் காங்கிரசோ நேருவிற்கு பிறகு பல வகுப்புவாத பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. நமது இந்திய அரசியலில் சிறுபான்மையினரின் ஓட்டுக் கொண்டு பல வெற்றிகள் பெறப்பட்டுள்ளது. இந்த வெற்றியே அரசியல்வாதிகள் தங்களின் சுயலாபத்திற்காக பிரிவினையை ஏற்படுத்துவதை ஊக்குவித்தன. இயற்கையாக நாட்டிற்குள் எழுந்த ஜாதி, மத பிரிவினைகள் ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி செய்ய வழிவகுத்தது. ஆனால் சுதந்திரம் பெற்ற பின்னரும் ஆட்சி அமைத்த காங்கிரஸ், அதனை தூண்டி விட்டு தமத ஆட்சியை தொடர்ந்துள்ளது. தற்போதுள்ள சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் உள்ளிட்ட பிராந்திய கட்சிகளும் சிறுபான்மை-பெரும்பான்மை என்ற கோட்பாட்டையே கடைபிடித்து வருகின்றன. ஓட்டுக்களுக்காக மக்களை பிரித்து ஆண்டதிலேயே காங்கிரசின் தொடர் வெற்றி அமைந்துள்ளது. நேரு காலத்திலும் இந்த வகுப்பு வாதங்கள் இருந்துள்ளன. ஆனால் சுதந்திரதிற்காக போராடிய தலைவர் என்பதால் அவரின் புகழும், வளர்ச்சியும், கொள்கைகளும் இந்த பிரிவினைவாத அரசியலால் நெருங்க முடியாமல் போனது.


மதவாத பிரிவினைகள் :

பிரிவினைகளை அதிகரித்து அதன் மூலம் தனது பதவியை காப்பற்றிக் கொண்ட முதல் தலைவர் இந்திரா. இரண்டாவது அவரது மகன் ராஜீவ். 1984ல் இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் இடையே ஏற்ற பிரிவினையை பயன்படுத்தியே ராஜீவ் வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து பிரிவினையை கையாண்ட தலைவர் வி.பி.சிங். போபர்ஸ் விவகாரம் மட்டுமின்றி ஜாதி அடிப்படையிலான கொள்கைகளையும் தேர்தலில் வெற்றி பெற அவர் கையில் எடுத்தார். இதனாலேயே பெரும்பான்மையினரின் ஓட்டுக்களை பெற பா.ஜ., களமிறங்கியது. இயற்கையாக எழுந்த மத மற்றும் ஜாதி பிரிவினைகளை தேசிய கட்சிகளும், பிராந்திய கட்சிகளும் பயன்படுத்தி தங்களின் வெற்றிகளை நிலைநிறுத்திக் கொண்டன. காங்கிரஸ் சிறுபான்மையினரின் ஓட்டுக்களைக் கொண்டு வெற்றி பெறவும், பா.ஜ., பெரும்பான்மையினரின் ஓட்டுக்களைக் கொண்டு வெற்றி பெறவும் இன்று வரை முயற்சி செய்து வருகின்றன. 2014 தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக சோனியா தனது அனுதாப அலைகளை பரப்பி வருகிறார். பா.ஜ., வோ காங்கிரசிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறது. இரண்டில் வெற்றி பெறப் போவது எது என மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சார்லஸ் லாசர் - Coonoor,இந்தியா
20-நவ-201311:11:15 IST Report Abuse
சார்லஸ் லாசர் தினமலர் மாநிலத்தில் அம்மாவுக்கு ஜால்ரா மத்தியில் மோடிக்கு ஜால்ரா
Rate this:
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
19-நவ-201315:58:06 IST Report Abuse
villupuram jeevithan பகுத்தறிவுக்கும்அரசியல்லுக்கும்என்னதொடர்புஇருக்கு?
Rate this:
Cancel
Skv - Bangalore,இந்தியா
19-நவ-201305:25:49 IST Report Abuse
Skv இந்திராவின் உபாயமே இன்றைய நம்ம நாட்டின் கதி கலங்கிட்டுருக்கு , போராததுக்கு நாட்டை தூக்கி சொனியாவுக்கு தானம் செய்தாச்சு. எப்படிங்க இந்திராவும் மோடியும் கம்பேர் பண்ணலாம். இவ்ளோ தூரம் நாடு ஐயாவே காரணம் நெருகுடும்பம்தான் கத்தின்னு இருக்கோம் , இப்போ கம்பேர் பண்ணிட்டு எரிச்சலை கிளப்பாதிங்க புண்ணியமா போவட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X