வெள்ளை, மஞ்சள் நிற ரேஷன்கார்டு புதுப்பிக்க வாய்ப்பு

Added : நவ 19, 2013 | |
Advertisement
கோவை:வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்திலுள்ள அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படும் ரேஷன் கார்டு தாரர்கள், ரேஷன் கார்டுகளை புதுப்பித்துக்கொள்ள அரசு இணையதள த்தில் வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை : http:/210.212.62.90:8080/newfco/cardvalidity.do என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடைய ரேஷன்கார்டு தாரர்கள்; ரேஷன்கார்டுகளை

கோவை:வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்திலுள்ள அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படும் ரேஷன் கார்டு தாரர்கள், ரேஷன் கார்டுகளை புதுப்பித்துக்கொள்ள அரசு இணையதள த்தில் வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை : http:/210.212.62.90:8080/newfco/cardvalidity.do என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடைய ரேஷன்கார்டு தாரர்கள்; ரேஷன்கார்டுகளை புதுப்பித்துக்கொள்ளலாம் . மேற்சொன்ன இணையதள முகவரியில் சென்று குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்தால் அதில் ரேஷன்கார்டுக்கான காலநீட்டிப்பு பதிவுச்சீட்டு வரும். அதை அப்படியே பதிவிறக்கம் செய்து ரேஷன்கார்டில் ஒட்டிக்கொள்ளலாம். இத்தகைய காலநீட்டிப்பு பதிவுச்சீட்டு ஒட்டப்பட்டுள்ள "N' ரேஷன்கார்டுகள் புழக்கத்திலுள்ள ரேஷன்கார்டுகளாகவே கருதப்படும்.
இணையதள வசதியை பயன்படுத்த இயலாத ரேஷன்கார்டு தாரர்கள் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையால் மாதந்தோறும் நடத்தப்படும், பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டத்தில் ரேஷன்கார்டுகளை புதுப்பித்துக்கொள்ளலாம். இன்டர்நெட் முகவரியில் புதுப்பிக்கும் வசதி 31.01.2014 வரை செயல்பாட்டில் இருக்கும் இதை ரேஷன்கார்டு தாரர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X