போதும் இத்துடன் நிறுத்துங்க: காங்.,குக்கு பா.ஜ., எச்சரிக்கை

Updated : நவ 21, 2013 | Added : நவ 21, 2013 | கருத்துகள் (64)
Share
Advertisement
புதுடில்லி:'குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, இளம்பெண் ஒருவருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து, போலீஸ் அதிகாரியுடன் ஆலோசனை செய்ததை, பெரிய விவகார மாக காங்கிரஸ் தொடர்ந்து பேசி வந்தால், காங்கிரஸ் மேலிடம் மற்றும் அக்கட்சியின் தலைவர்களின் லீலைகளை, நாங்கள் வெளிப்படுத்துவோம்' என, பா.ஜ., மிரட்டல் விடுத்துள்ளது.குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, அம்மாநில உள்துறை அமைச்சராக
it's stop bjp demand

புதுடில்லி:'குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, இளம்பெண் ஒருவருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து, போலீஸ் அதிகாரியுடன் ஆலோசனை செய்ததை, பெரிய விவகார மாக காங்கிரஸ் தொடர்ந்து பேசி வந்தால், காங்கிரஸ் மேலிடம் மற்றும் அக்கட்சியின் தலைவர்களின் லீலைகளை, நாங்கள் வெளிப்படுத்துவோம்' என, பா.ஜ., மிரட்டல் விடுத்துள்ளது.
குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, அம்மாநில உள்துறை அமைச்சராக இருந்த, அமித் ஷா மற்றும் போலீஸ் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தும் போது, 'இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது போன்ற, ரகசிய ஆடியோ பதிவுகள் சமீபத்தில் வெளியாயின.


விமர்சனம்:

பா.ஜ.,வுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வரும் மோடியை, தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக, அந்த கேசட்டில் உள்ள விவகாரங்கள் குறித்து, காங்., மூத்த அமைச்சர்கள் முதற்கொண்டு, காங்கிரஸ் தலைவர்கள் பலரும், விமர்சித்து வருகின்றனர்.இதனால் கோபம் கொண்டுள்ள, பா.ஜ., காங்கிரசுக்கு நேற்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்தது.
பா.ஜ., செய்தித் தொடர்பாளர், பிரகாஷ் ஜாவேடகர் கூறும் போது, ''ஒன்றுக்கும் உதவாத இந்த விவகாரத்தை இத்துடன் விட்டு விட வேண்டும். மோடியின் தனிப்பட்ட விவகாரம் குறித்த இந்த பிரசாரத்தை காங்கிரஸ் கைவிட வேண்டும். இல்லையேல், காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களின், இது போன்ற விவகாரங்களை நாங்கள் பட்டியலிடுவோம்,'' என்றார்.


பாதுகாப்பு கிடைத்தது:

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தொடர்புடைய இளம் பெண்ணின் தந்தை, தேசிய பெண்கள் கமிஷனுக்கு தெரிவித்துள்ள தகவலில், 'நாங்கள் கேட்டுக் கொண்ட படியே, மோடி அரசு, எங்கள் பெண்ணுக்கு பாதுகாப்பு அளித்துள்ளது. அது குறித்து தான், மோடி, அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிகாரியுடன் பேசியுள்ளார்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohankumar - Trichy,இந்தியா
21-நவ-201322:24:17 IST Report Abuse
mohankumar கோத்ரா சம்பவத்தில் மோடியின் மேல் எந்த குற்றமில்லை என உயர் நீதிமன்றம் கூறி விட்டது அதற்குப்பின்னரும் மீடியாக்களும் அரசியல்வாதிகளும் தங்கள் தவறாக சித்தரித்தோம் என தவறுக்கு வருந்தாமல் மறுபடியும் மறுபடியும் அவரை எதாவது வழியில் அவருக்கு தீங்கு செய்ய காத்து கொண்டு இருக்கிறார்கள் காரணம் ஒருமுறை பிரதமர் ஆகி விட்டால் நல்லா ஆட்சி தந்து மறுபடியும் மறுபடியும் எங்கே அவரே ஆட்சியில் தொடர்ந்து விடுவாரோ என கலக்கத்தில் தான் காங்கிரஸ் ஏதாவது வழியில் அவருக்கு இடையூறுகள் கொடுத்த வண்ணம் உள்ளது . கேரளாவில் முதல் கம்யூனிஸ்ட் அரசு வந்த பொது நல்ல ஆட்சி தந்து கொண்டிருந்தார்கள் நம்புதிரிபாத் தலைமையில் . அவரின் மந்த்ரி சபை போன்று இன்றுவரை அப்படி ஒரு அறிவாளிகள் நிறைந்த மந்த்ரி சபையை இந்திய இதுவரை கண்டதில்லை அந்த அந்த துறைக்கு அந்த அந்த துறையில் அனுபவம் நிறைந்தவர்கள் இருந்தார்கள் .உதாரணத்திற்கு சட்டதுறைக்கு வீ ஆர் கிருஷ்ண அய்யர் . அந்த மாநில அரசு நல்லபடியாக ஆட்சி செய்வதை அறிந்து மத்தியில் இருந்த நேரு இந்திராகாந்தியின் நெருக்குதலால் வேண்டும் என்றே அந்த மாநிலத்தில் சில கலவரங்கள் உண்டாகும்படி செய்து அந்த மாநில அரசை சட்டம் ஒழுங்கு கேட்டு விட்டது என்று கூறி டிஸ்மிஸ் செய்தது பழைய ஆட்களுக்கும் கேரள மக்களுக்கும் இது தெரியும் ஆனால் அவர்களே எல்லாம் மறந்து சில காங்கிரீஸ் உடன் குலவுவார்கள் .இது தான் காங்கிரஸ் 356ஐ பயன்படுத்தி லைத்த முதல் அரசு கம்யூனிஸ்ட் அரசு. காங்கிரெஸ் காரனுக்கு தான் மட்டும் தான் அட்டை ஆண்டு கொண்டே இருக்க வேண்டும் .
Rate this:
Cancel
manu putthiran - chennai ,இந்தியா
21-நவ-201321:44:52 IST Report Abuse
manu putthiran கோத்ரா கலவரம் மக்களிடம் எடுபடவில்லை என்பது மெல்ல காங்கிரசுக்கு புரிய ஆரம்பிதுள்ளதையே இது காட்டுகிறது..மோடி கையை ஆட்டி மிரட்டினார் ,கோபமாக முறைத்தார்.., இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் இனிமேல் வரும்..காங்கிரசுக்கு வேறு வழி இல்லை..மானம்கெட்ட பிழைப்பு..
Rate this:
Cancel
mohankumar - Trichy,இந்தியா
21-நவ-201321:38:28 IST Report Abuse
mohankumar பெற்ற THANTHAI யை மிரட்டி சிபிஐ வைத்து காங்கிரஸின் குறுக்கு புத்திக்கு தக்கபடி அவரை மோடிக்கு எதிராக பேச வைப்பார்கள். மோடியின் IMAGAI கெடுக்க காங்கிரஸ் என்ன விளையும் கொடுத்து இத்தாலி குடும்பத்தை அரியணையில் ஏற்ற்ற அந்த குடும்பத்தை சந்திக்கு இழுக்கிறார்கள் .அவ்வளவுதான் .நாட்டையே சீனாவிற்கும்.பக்கிற்கும் விட்டு கொடுத்தவர்கள் அல்லவா CONGRESS .மற்றவர்கள் குடும்பம் பற்றி என்ன கவலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X