தவறான வழியில் சமூக வலைதளங்கள் ; உள்துறை அமைச்சர் ஷிண்டே வேதனை

Updated : நவ 21, 2013 | Added : நவ 21, 2013 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி: நாட்டில் உள்ள சமூகவலைத்தளங்கள் தவறான பாதைக்கு பயன்படுத்தப்படுவதாகவும், சைபர்கிரைம் குற்றங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் டில்லியில் நடந்த டி.ஜி.பி., மாநாட்டில் உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே ஆலோசனை வழங்கினார். 2 நாள் நடக்கும் டி.ஜி.பி., மாநாட்டை ஷிண்டே துவக்கி வைத்தார், மாநாட்டில் பல்வேறு மாநில டி.ஜி.பி., க்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில்
தவறான வழியில் சமூக வலைதளங்கள் ; உள்துறை அமைச்சர் ஷிண்டே வேதனை

புதுடில்லி: நாட்டில் உள்ள சமூகவலைத்தளங்கள் தவறான பாதைக்கு பயன்படுத்தப்படுவதாகவும், சைபர்கிரைம் குற்றங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் டில்லியில் நடந்த டி.ஜி.பி., மாநாட்டில் உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே ஆலோசனை வழங்கினார். 2 நாள் நடக்கும் டி.ஜி.பி., மாநாட்டை ஷிண்டே துவக்கி வைத்தார், மாநாட்டில் பல்வேறு மாநில டி.ஜி.பி., க்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் நாளை உரையாற்றுகிறார்.


இன்றைய முதல் நாள் மாநாட்டில் அமைச்சர் ஷிண்டே பேசுகையில்; பலமுன்னேற்றங்கள் கண்டு வரும் இந்நாளில் சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான செயல்கள் , நாட்டிற்கு எதிரான குற்றங்கள் பரப்பி விடப்படுகிறது. இதற்கான சுதந்திரம் தவறான வழியில் செல்கிறது. இது கவலை தரும விஷயம் ஆகும். இவைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். சிலரை அச்சுறுத்தும் விதமாக வதந்தியும் பரப்பப்படுகிறது. முஷாபர்நகர் கலவரத்தில், சமூக வலைத்தளம் மூலம் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது.


இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
22-நவ-201308:11:40 IST Report Abuse
JALRA JAYRAMAN குற்றவாளிகளுக்கு நமது சட்டத்தின் மேல் பயம் இல்லை. எது செய்தாலும் அது அரசியல் ஆக்கப்படும். சுலபமாக தப்பிக்கலாம்
Rate this:
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
22-நவ-201306:27:15 IST Report Abuse
naagai jagathratchagan உண்மைதான்.... இதை சொல்லுவது யார் ...ஏன்...சொல்லுகிறார் . ஷிண்டே...யாருடனோ சிண்டு முடிய பார்க்கிறார் சிந்திக்கும் திறன் உள்ளவர்களுக்கு நல்லது கெட்டது தெரியும் ...சுதந்திரம் பெற்ற பின்னால் தானே ...ஊழல் கொலை கற்பழிப்பு ... வன்முறை .. பயங்கரவாதம் தலைவிரித்து தாண்டவமாடுகிறது ..இது மக்களுக்குத் தெரியாதா ...இதை வலை தளங்கள் காட்டுகிறது ...அசிங்கத்தையும் ஆபாசத்தையும் காட்டும் வலை தளங்களை தடுங்கள் நடவடிக்கை ஏன் இதுவரை எடுக்கவில்லை இதற்கு யார் பொறுப்பு .எல்லாமே சரியாக .. உண்மையாக இருந்து விட்டால் ஏன் சட்டம் ...நீதி மன்றம் ...எல்லா சட்டமும் அரசின் கையில் உள்ளது ...இப்போது நீங்கள் பாதிக்கப்படுவீர்களோ என்ற அச்சம் உங்களை ஆட்டுகிறது.
Rate this:
Cancel
A. Sivakumar. - Chennai,இந்தியா
21-நவ-201319:50:22 IST Report Abuse
A. Sivakumar. ரோம் மாநகரம் தீப்பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல், பாட்னாவில் குண்டுவெடிப்புக் களேபரத்தில் போதிய கவனம் செலுத்தாமல் மும்பையில் ஒரு சினிமாவின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட “பொறுப்புணர்வு” உள்ளவருக்கு, சமூகவலைத்தளங்களின் பொறுப்புணர்வு பற்றிய கவலை எதற்கு? இவங்க ஆட்சிக்கு ஆப்பு வைத்து வருபவை இந்த சமூக வலைத்தளங்கள் என்ற எரிச்சல்தான் காரணமே தவிர வெறொன்றுமில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X