பட்டத்தை பறிகொடுத்தார் ஆனந்த்: கார்ல்சன் புதிய உலக சாம்பியன்

Updated : நவ 22, 2013 | Added : நவ 22, 2013 | கருத்துகள் (58) | |
Advertisement
சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 10வது சுற்று டிரா ஆனது. இதன் மூலம், நார்வேயின் கார்ல்சன் உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். சொந்த மண்ணில் ஆனந்த் ஏமாற்றம் அடைந்தார். சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. "நடப்பு சாம்பியன்' இந்தியாவின் ஆனந்த், 43, நார்வேயின் இளம் வீரர் கார்ல்சன், 22, இதில் பலப்பரீட்சை நடத்தினர். மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட
பட்டத்தை பறிகொடுத்தார் ஆனந்த்: கார்ல்சன் புதிய உலக சாம்பியன்

சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 10வது சுற்று டிரா ஆனது. இதன் மூலம், நார்வேயின் கார்ல்சன் உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். சொந்த மண்ணில் ஆனந்த் ஏமாற்றம் அடைந்தார்.

சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. "நடப்பு சாம்பியன்' இந்தியாவின் ஆனந்த், 43, நார்வேயின் இளம் வீரர் கார்ல்சன், 22, இதில் பலப்பரீட்சை நடத்தினர். மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியின், ஒன்பது சுற்று முடிவில் கார்ல்சன் 6 புள்ளிகள், ஆனந்த் 3 புள்ளிகள் பெற்று இருந்தனர். இன்று 10வது சுற்று நடந்தது. இதில் ஆனந்த் கறுப்பு காய்களுடன் விளையாடினார். வெள்ளைக் காய்களுடன் களம் கண்ட கார்ல்சன் தனது ராஜாவுக்கு முன்னால் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தினார்.

ஆனந்த் தனது மந்திரிக்கு முன்னால் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தினார். 14வது நகர்த்தலில் கார்ல்சன் தனது குதிரையை வைத்து, ஆனந்த் மந்திரியை காலி செய்தார். இதற்கு பதிலடியாக, ஆனந்த் தனது ராணியால், கார்ல்சன் குதிரையை வெளியேற்றினார். 34வது நகர்த்தலில் கார்ல்சன் தனது ராணியை வைத்து, ஆனந்த் ராணியை வெட்டினார். பதிலடியாக, ஆனந்த் தனது குதிரையால், கார்ல்சனின் ராணியை வெளியேற்றினார். 65வது நகர்த்தலில் போட்டியை "டிரா' செய்ய இரு வீரர்களும் சம்மதித்தனர்.

இதன் மூலம், 10வது சுற்று முடிவில், கார்ல்சன் 6.5 புள்ளிகள் பெற்று உலக சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றார். ஆனந்த் 3.5 புள்ளிகள் மட்டும் பெற்றார். இதனால் மீதமுள்ள 2 சுற்று போட்டிகள் நடக்காது. இதன் மூலம் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் நார்வே வீரர் என்ற பெருமையை கார்ல்சன் பெற்றார்.

சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு ரூ.8.40 கோடி பரிசாக வழங்கப்படும்.ஆனந்துக்கு ரூ.5.60 கோடி வழங்கப்படும்.

ஓய்வெடுக்க முடிவு- ஆன்ந்த்: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை கார்ல்சனிடம் பறிகொடுத்த இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், கார்ல்சனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதன் பின்னர் ஆனந்த் கூறுகையில், 5வது சுற்று ஆட்டம் திருப்புமுனையாக அமைந்தது. 5வது சுற்று ஆட்டம் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பாக அமைந்தது. நகர்த்தல்களில் தவறுகள் செய்ததால் வெற்றி பறிபோனது. இந்த தொடரில் எனது ஆட்டம் திருப்தியளிக்கவில்லை. இந்த தோல்வி ஏமாற்றமளிக்கிறது. சிறிது காலம் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளேன். தோல்விக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என கூறினார்.

கடுமையான போராட்டத்துக்கு பலன்- கார்ல்சன்: பட்டம் வென்ற கார்ல்சன் கூறுகையில், பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. நீண்ட கால உலக செஸ் சாம்பியன் கனவு தற்போது நினைவானது. தனது கடுமையான போராட்டத்துக்கு பலன் கிடைத்துள்ளது. இந்தியாவில் செஸ் ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருந்தது என கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAIRAJ - CHENNAI,இந்தியா
24-நவ-201320:07:26 IST Report Abuse
JAIRAJ எல்லோருக்கும்சில நினைவுகள் என்றும் அழியாது. அதேபோன்று தான் விளையாட்டும்.நான் மிகச் சிறுவனாக இருந்தபொழுது நாங்கள் குடி இருந்த இடத்தில் பக்கத்துவீட்டில் அண்ணன் தம்பிகள் இருவர் செஸ் விளையாடுவார்கள். அவர்கள் விளையாடுவதைப் பார்த்துப் பார்த்து அவர்கள் பேசுவதை ஆடுவதை உன்னிப்பாக கவனித்து எங்களில் பலர் செஸ் கற்றுக்கொண்டோம். செஸ் மட்டுமல்ல ..........ஆண்கள், பெண்கள் கலந்து விளையாடுவதால் பெண்கள் விளையாட்டு, ஆண்கள் விளையாட்டு எட்ன்று பாகுபாடில்லாமல் எல்லாவற்றிலும் எல்லோரும் கலந்து கொள்வோம்.எல்லோருமே சிறப்பாக உச்சம் தொட முயற்சிப்பார்கள்.அந்த உச்சத்திலும் உச்சமாக ( லோக்கல் மாஸ்டர் ) ஆவதற்கு போட்டியும் உண்டு. செஸ் பற்றி சிறுது சிறிதாக கற்று, பத்திரிகைகளில் வரும் டூ மூவர்ஸ் பகுதியை கத்தரித்து வைத்துக் கொண்டு செஸ்போர்ட் காயின் இல்லாமலேயே கற்பனையில் வெற்றி பெறுவோம். பத்திரிகைகளின் வாயிலாக உலகசாம்பியன் களைப்பற்றி தெரிந்துகொண்டு அதுபோன்று ஆடமுடியுமா என்று கற்பனையும் செய்வோம். அதே இடத்தில் ஆர்வலர் ஒரு வீட்டின் வெளித்திண்ணையில் யார்வேண்டுமானாலும் செஸ் விளையாடலாம்.பெரிய திண்ணைகள் இரணடில் பத்துபோர்ட் இருபது பேர்கள் சண்டை சச்சரவு இன்றி அமைதியாக விளையாடுவோம். வெற்றியோ தோல்வியோ,அதிரடி ஆட்டம் தான் எனக்குப் பிடிக்கும். இன்று பழைய நினைப்புடன் சென்றால், ஆக்கிரமிப்பால் விழி பிதுங்குகிறது. ஆனால், நினைவுகள் உயிர் நீங்கும்வரை அழிவதில்லை.
Rate this:
Cancel
தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா
24-நவ-201303:42:07 IST Report Abuse
தங்கவேல்  இருவரையும் வாழ்த்துகின்றேன்..
Rate this:
Cancel
Muga Kannadi - chennai,இந்தியா
23-நவ-201316:35:13 IST Report Abuse
Muga Kannadi செஸ் ஒரு மன விளையாட்டு. சாம்பியன் களுக்கு தங்கள் பட்டம் பறிபோய்விடுமோ என்ற நெருக்கடி இருக்கத்தான் செய்யும். அது மன அளவில் செயல்பட்டு தோல்விக்கான காரணமாக அமையும். அதே சமயம் challengerruk (carlsen) அம்மாதிரி இழப்தர்க்கு ஒன்றும் எல்லை. இதன் தாக்கம் இப்போட்டியில் நன்றாகவே தெரிந்தது. அதன் விளைவே ஆனந்த் தோல்வி கார்ல்சென் வெற்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X