தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி உட்பட 144 பேர் மீது சி.வி.சி., நடவடிக்கை

Updated : நவ 23, 2013 | Added : நவ 22, 2013 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: தமிழகத்தை சேர்ந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி உட்பட, ஊழல் புகாரில் சிக்கிய, 144 அரசு அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையமான, சி.வி.சி., தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில், தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பான அறிக்கையை, சி.வி.சி., வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: செப்டம்பரில், அரசுத் துறையின்
தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி உட்பட 144 பேர் மீது சி.வி.சி., நடவடிக்கை

புதுடில்லி: தமிழகத்தை சேர்ந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி உட்பட, ஊழல் புகாரில் சிக்கிய, 144 அரசு அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையமான, சி.வி.சி., தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பரில், தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பான அறிக்கையை, சி.வி.சி., வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: செப்டம்பரில், அரசுத் துறையின் பல்வேறு அதிகாரிகளுக்கு எதிராக, 2,940 ஊழல் புகார்கள் வந்தன. இந்த புகார்களை, முறையாக விசாரித்து, நடவடிக்கை எடுத்துள்ளோம். இது தொடர்பாக, 144 அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்களில், அதிகபட்சமாக, 55 பேர், மத்திய கலால் மற்றும் சுங்கத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள். 11 பேர், ரயில்வே துறையைச் சேர்ந்தவர்கள். ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள அதிகாரிகளில், 79 அதிகாரிகளுக்கு, அதிகபட்ச அபராதம் விதிக்க, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த, 79 பேரில், வருமான வரித் துறை தலைமை கமிஷனரும் அடக்கம். மேலும், 14 அதிகாரிகள் மீது, துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர், தமிழகத்தை சேர்ந்த, கூடுதல் டி.ஜி.பி., இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (6)

V.R.N - Tiruchy,இந்தியா
23-நவ-201314:44:14 IST Report Abuse
V.R.N நாட்டை சுரண்டிய அரசியல்வாதிகள் அனைவரும் நாட்டில் சுதந்திரமா திருஞ்சுகிட்டு இருக்காங்க. என்னைக்கு இதுக்கு விடிவு காலம்? ஒன்னு இரண்டு என்றால் விளக்கமா சொல்லலாம். அவர்கள் மீது தயங்காமல் யாரால் நடவடிக்கை எடுக்கபடுகிறதோ அவர் தான் இந்த மக்களை ஆள தகுதி படைத்தவர்கள்
Rate this:
Cancel
Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-நவ-201310:21:01 IST Report Abuse
Sundar Is it only investigating agency as pronounced by Guwahati High court against CBI? Weather it can initiate charge sheet in the Court?
Rate this:
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
23-நவ-201310:11:27 IST Report Abuse
Divaharan நல்ல ஆரம்பம். சி வி சி இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X