புதுடில்லி: வெள்ளைக்காரர்கள் சொல்லிக்கொடுத்த ' குட்மார்னிங் ' இனி சொல்ல வேண்டாம், இதற்கு பதிலாக அனைவரும் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும் என ராணுவத்திற்கு தளபதி பைக்ராம்சிங் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. ராணுவத்தில் சிப்பாய் முதல் தளபதிகள் உள்பட அனைத்து ஊழியர்களும் குட்மார்னிங்குக்கு குட்பை சொல்லி, ஜெய்ஹிந்த் என ஒருவரை ஒருவர் மரியாதை செலுத்திக்கொண்டனர்.
சுதந்திர போராட்டக்காலத்தின் போது முழங்கிய முழக்கம் இந்தியர்களை உணர்ச்சி பொங்க வைத்த வாசகம்தான் ' ஜெய் ஹிந்த் '. உள்ளத்தின் ஆழ்மனதில் இருந்து வெள்ளையர்கள் எதிர்ப்பு குரலாக இந்த கோஷம் எழுப்பியபோது அனைவருக்கும் ஒரு உற்றசாகமும், அதேநேரத்தில் ஆங்கிலேயரை கிலியடைய செய்யவும் ' ஜெய் ஹிந்த் '-ஒலித்தது.
இந்த வாசகம் மீண்டும் உயிர்பெறுகிறது ராணுவத்தின் மூலம், அதாவது ராணுவ தளபதி பைக்ராம்சிங் பிறப்பித்துள்ள உத்தரவில்; ராணுவ ஊழியர்கள் அனைவரும் குட்மார்னிங், குட்ஆப்டர்னூன், போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். இதற்கு பதிலியாக ' ஜெய் ஹிந்த் '- என்றே மரியாதை செலுத்த வேண்டும்.
எந்த வொரு பணி துவங்கும் போதும் ' ஜெய் ஹிந்த் '-என்று சொல்லிக்கொள்ள வேண்டும், இதே போல் எந்தவொரு பணி முடியும் போது பாரத் மாதாக்கி ஜெ என்று சொல்லிக்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது போன்று நாம் உச்சரிக்கும்போது ஒருவருக்கொருவர் இடைய உள்ள கருத்து வேறுபாடுகள், மற்றும் மதச்சார்பின்மை உருவாகும். மேலும் இது தேசப்பற்றை வளர்க்கும் என தளபதி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்தது.
வேறுபாடு இல்லாமல்:
நட்சத்திர அந்தஸ்து கொண்டவர்கள் தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும், மேலும் துறை ரீதியாக ராணுவ உயர் அதிகாரிகள், ஊழியர்கள் என்ற வேறுபாட்டை களையப்பட வேண்டும். இதற்கென துறை சார்பில் நடக்கும் விழாக்கள், நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பினரும் பங்குபெறுமாறு நடத்த வேண்டும். ராணுவ துறையினரின் குழந்தைகள் அதிகாரிகள், சாதாரண சிப்பாய்கள் என்ற வேறுபாடு இல்லாமல் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும். இவ்வாறும் தளபதி கேட்டு கொண்டுள்ளார்.
இந்த தகவல் பாதுகாப்பு துறை அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது.
அப்போ., மக்களாகிய நாமும் இன்று முதல் குட்மார்னிங்க்கு குட்பை சொல்வோமே ! ' ஜெய் ஹிந்த் '-