பொது செய்தி

தமிழ்நாடு

இலங்கை கடல் எல்லையை இனி தாண்ட முடியுமா? பிப்ரவரியில் செயல்பாட்டிற்கு வரும் 'நவ்டெக்ஸ்'

Updated : நவ 25, 2013 | Added : நவ 24, 2013 | கருத்துகள் (24)
Share
Advertisement
எல்லை பாதுகாப்பு மற்றும் மீனவர்கள் நலனை கருத்தில் கொண்டு, மத்திய கப்பல் போக்கு வரத்து அமைச்சகம் மூலம், 'நேவிகேஷனல் டெலக்ஸ்' என்ற 'நவ்டெக்ஸ்' திட்டம், பிப்ரவரியில் செயல்பாட்டிற்கு வருகிறது. இதனால், எல்லை தெரியாமல், சென்று, இலங்கை கடற்படையிடம் தமிழக மீனவர் சிக்குவது தவிர்க்கப்படும்.தமிழகத்தில், 13 கடலோர மாவட்டங்களில், 15 ஆயிரம் விசைப்படகுகள், 25 ஆயிரம் பைபர்
 இலங்கை கடல் எல்லையை இனி தாண்ட முடியுமா? பிப்ரவரியில் செயல்பாட்டிற்கு வரும் 'நவ்டெக்ஸ்'

எல்லை பாதுகாப்பு மற்றும் மீனவர்கள் நலனை கருத்தில் கொண்டு, மத்திய கப்பல் போக்கு வரத்து அமைச்சகம் மூலம், 'நேவிகேஷனல் டெலக்ஸ்' என்ற 'நவ்டெக்ஸ்' திட்டம், பிப்ரவரியில் செயல்பாட்டிற்கு வருகிறது. இதனால், எல்லை தெரியாமல், சென்று, இலங்கை கடற்படையிடம் தமிழக மீனவர் சிக்குவது தவிர்க்கப்படும்.

தமிழகத்தில், 13 கடலோர மாவட்டங்களில், 15 ஆயிரம் விசைப்படகுகள், 25 ஆயிரம் பைபர் படகுகள், நுாற்றுக்கணக்கான கட்டுமரங்கள் மூலம், மீன்பிடி தொழில் நடக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் துவங்கி, கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி வரை, 1,078 கி.மீ., வரை, தமிழக கடற்கரை அமைந்துள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும் மீன்பிடி தொழிலை சார்ந்து, 50 லட்சம் பேர் உள்ளனர்.தற்போது, நவீன யுகத்திற்கு தகுந்தபடி, அனைத்து விசைப்படகுகளிலும், ரேடார், ஜி.பி.எஸ்., உள்ளிட்ட கருவிகள் உள்ளன. ரேடார் மூலம், கடலின் மீன்கள் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய முடியும். ஜி.பி.எஸ்., கருவி மூலம், கடலில் பயணம் செய்த தொலைவை மீனவர்களால் தெரிந்துக் கொள்ள முடியும்.ஒவ்வொரு மீன்பிடி துறைமுகத்தில் இருந்தும், 12 கடல் மைல் வரை, அந்த நாட்டின் கடல் எல்லையாக வரைமுறை செய்யப்பட்டு உள்ளது. ஒரு கடல் மைல் என்பது, 1.85 கி.மீட்டர்.அதன்படி, 12 கடல் மைல் என்ற நிலையை படகு கடந்தாலே, ஜி.பி.எஸ்., கருவி, 'பீப்' ஒலியை எழுப்பி, மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்யும். இதன் மூலம், விசைப் படகுகளில், ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும்.


கலங்கரை விளக்கங்கள்:

மேலும், இயற்கை சீற்றங்களில் சிக்கும்போது, மற்ற விசைப்படகு மீனவர்களிடம், தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும். இதுபோன்ற வசதிகள் இருந்தும்,தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடித்து, இலங்கை கடற்படையிடம் சிக்குவதுஅதிகரித்து வருகிறது.எனவே, எல்லை பாதுகாப்பு மற்றும் மீனவர் நலனை கருத்தில் கொண்டு, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கலங்கரை விளக்கங்கள் இயக்ககம் மூலம், 'நேவிகேஷனல் டெலக்ஸ் நவ்டெக்ஸ்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக, பிரதான கட்டுப்பாட்டு மையம் மும்பையிலும், அதன் துணை கட்டுப்பாட்டு மையம், விசாகப்பட்டினத்திலும் அமைக்கப்படுகின்றன.மேலும், நாடு முழுவதும், ஏழு இடங்களில், அலைபரப்பு மற்றும் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் மற்றும் கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை பகுதிகளில், அலைபரப்பு மற்றும் கண்காணிப்பு மையம் அமைகின்றன.இந்த ஏழு கண்காணிப்பு மையங்களின் செயல்பாடு, 250 கடல் மைல் வரை இருக்கும். 'நவ்டெக்ஸ்' திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, தமிழகத்தில் உள்ள, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களுக்கு மொபைல் போன் வடிவிலான, 'மெசேஜ் ரிசீவர்' வழங்கப்படும்.இதன்மூலம், எஸ்.எம்.எஸ்., மாநில மொழிகளிலேயே அனுப்பப்படும். தமிழக மீனவர் வசதிக்காக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தகவல்கள் வந்து சேரும். கண்காணிப்பு மையங்களில் பணியில் உள்ள ஊழியர்கள், தகவல்களை அனுப்புவர்.

ஒவ்வொரு, 20 நிமிடத்திற்கு ஒருமுறை, கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு, தகவல்கள் சென்று சேரும். இதன்மூலம், கடலின் நீர்பரப்பு ஏற்ற, இறக்கம், சுனாமி, புயல், சூறாவளி எச்சரிக்கை, எல்லை தாண்டி செல்வது குறித்த தகவல்கள், மீனவர்களுக்கு கிடைக்கும்.இதனால், எல்லை தெரியாமல், சென்று மீன்பிடித்து, இலங்கை கடற்படையிடம் தமிழக மீனவர்கள் சிக்கிக் கொள்வது இனி தவிர்க்கப்படும். இந்த தகவல் தெரிந்தும், எல்லை தாண்டி சென்று மீன்பிடிப்பதால், உள்நாட்டிலும், அபராதம் செலுத்துவது போன்ற தண்டனைகளும், பிற்காலத்தில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது.பேராசையில் சில மீனவர்கள் எல்லைதாண்ட நினைத்தாலும், அபராதம் காரணமாக, அத்திட்டத்தை அவர்கள் கைவிட வாய்ப்பு ஏற்படும். இது மட்டுமின்றி, நம் நாட்டு எல்லைக்குள் வரும் வெளிநாட்டு கப்பல்கள், விசைப்படகுகளும் கண்காணிக்கப்படும்.இதன்மூலம், எல்லை பாதுகாப்பும் உறுதியாகும். எனவே, 'நவ்டெக்ஸ்' திட்டம் மூலம், இந்திய கடல்பரப்பில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது சாத்தியமாகும்.


அடிக்கல்:

இந்த திட்டத்திற்கான பணி, நாடு முழுவதும் ஏற்கனவே துவங்கி சத்தமின்றி நடந்து வருகிறது. ஆனால், மீனவர்களிடம் விளம்பரப்படுத்தும் நோக்கில், கடந்த 14ம் தேதி தான், இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா, சென்னையில், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் வாசன் தலைமையில் நடந்தது. தமிழகத்தை பொறுத்தவரை முட்டம் மற்றும் பரங்கிப்பேட்டையில், கண்காணிப்பு மைய கட்டடங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.சென்னை கலங்கரை விளக்கத்தை அருங்காட்சியகம் ஆக்கும் பணி நடந்ததால், கண்காணிப்பு மையங்களில் எலக்ட்ரானிக் உபகரணங்கள் பொருத்துவது உள்ளிட்ட பணிகள் தாமதம் ஆனது.தற்போது, சென்னை கலங்கரை விளக்கம் பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், முட்டம் மற்றும் பரங்கிப்பேட்டையில், 'நவ்டெக்ஸ்' கண்காணிப்பு மையப்பணி விரைவில் வேகமெடுக்கும் என தெரிகிறது. லோக்சபா தேர்த லுக்கு முன், பிப்., மாதம் அமைச்சர் வாசனால், இந்த திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, தெரிகிறது.


தகவல் சேவை


இதுகுறித்து, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:முட்டம் மையம் மூலம், கேரள எல்லையை கடந்தும், பரங்கிப்பேட்டை மையம் மூலம், ஆந்திர எல்லையை கடக்கும், மீனவர்களுக்கு தகவல் சேவை கிடைக்கும்.ஏழு கண்காணிப்பு மையங்களும், வலையமைப்பின்படி உருவாக்கப்படுவதால், நாடு முழுவதும் உள்ள மீனவர்கள், இதன் மூலம் பலனடைவர். ஒரு கண்காணிப்பு மையத்திற்கு, 16 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது.தமிழகத்தில் மீன்வளத் துறையால் வழங்கப்பட்ட, 'லைசென்ஸ்' வைத்துள்ள அனைத்து மீனவர்களுக்கும், 'மெசேஜ் ரிசீவர்' வழங்கப்படும். கண்காணிப்பு மைய கட்டுப்பாட்டு கருவிகள், 720 கி.மீ., வரை தகவல்களை தரும் என்ப தால், ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்பவர்களுக்கு, மிகப்பெரியஉதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Alani Adana - hanilton,கனடா
24-நவ-201323:46:06 IST Report Abuse
Alani Adana எல்லை தெரியாமல் தாண்டுகிறார்கள் என்பது அதிகமில்லை .10 % இருக்கலாம் .அந்த குறிப்பிட்ட இடத்தில இலங்கை /இன்டர்நேஷனல் போர்டேரில் அதிக பணம் கிடைக்கும் மீன்,இறா கிடைக்கிறது .அதில் நமக்கும் இலங்கையினற்கும் பிரச்சினை . உங்களுக்கு தெரியுமா ,ஜப்பான் ,கொரியா அதிக விசை படகுகள் இங்கு வந்து மீன் பிடிகிறார்கள் .
Rate this:
Cancel
Jailani ஜெய்லானி - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
24-நவ-201322:10:35 IST Report Abuse
Jailani ஜெய்லானி தானமா குடுத்த கட்ச தீவை திரும்ப வாங்குங்க 90 % பிரச்சனை தானா தீரும் .
Rate this:
Cancel
Parthiban S - arumuganeri,இந்தியா
24-நவ-201320:10:37 IST Report Abuse
Parthiban S "இப்ப இருக்குற இடத்துலேருந்து இலங்கையை இன்னும் இருபது கி.மீ. தூரத்துக்கு பின்னால 'நவுட்ட' முடியுமான்னு பாக்கணும்... இந்த எல்லை இல்லாத தொல்லைக்கு வேற வழி இருக்குறதா தெரியல..."
Rate this:
man - chennai,இந்தியா
24-நவ-201323:25:21 IST Report Abuse
manநல்ல யோசனை. சேது சமுத்திர வருமானத்தில் சொத்து சேர்த்தவர்கள் இந்த யோசனையை செயல்படுத்த முயற்சிக்கலாம் மேலும் பத்து தலைமுறைகளுக்கு சொத்து சேர்க்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X