அன்று... கூலி தொழிலாளி, கிளார்க், மேஜிக் மேன்: இன்று... நாட்டின் தலைவர்கள்| Hawker, clerk, magician: humble roots of top politicians | Dinamalar

அன்று... கூலி தொழிலாளி, கிளார்க், மேஜிக் மேன்: இன்று... நாட்டின் தலைவர்கள்

Updated : நவ 24, 2013 | Added : நவ 24, 2013 | கருத்துகள் (65)
Share
புதுடில்லி : கடந்த சில நாட்களுக்கு முன் சமாஜ்வாதி கட்சி தலைவர் நரேஷ் அகர்வால், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை டீ விற்றவர் இந்தியாவின் பிரதமராக முடியாது என விமர்சனம் செய்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையை ஆராய்ந்தால் இன்று நாட்டின் பெரும் அரசியல் தலைவர்களாக இருக்கும் பலர் தங்களின் இளம் வயதில் கூலி தொழிலாளியாகவும்,
Hawker, clerk, magician, humble roots, of top, politicians,இளம் வயதில், கூலி தொழிலாளி,கிளார்க்,மேஜிக் மேன், இன்று, நாட்டின், தலைவர்கள்

புதுடில்லி : கடந்த சில நாட்களுக்கு முன் சமாஜ்வாதி கட்சி தலைவர் நரேஷ் அகர்வால், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை டீ விற்றவர் இந்தியாவின் பிரதமராக முடியாது என விமர்சனம் செய்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையை ஆராய்ந்தால் இன்று நாட்டின் பெரும் அரசியல் தலைவர்களாக இருக்கும் பலர் தங்களின் இளம் வயதில் கூலி தொழிலாளியாகவும், தெருவில் விற்பனை செய்யும் வியாபாரியாகவும், மேஜிக்மேனாகவும் இருந்துள்ளனர்.


மோடி மீதான கோபம் :

மோடிக்கு மக்களிடையே இருக்கும் மதிப்பை குறைப்பதற்காகவும், அவரை தரம் தாழ்த்தி பேச வேண்டும் என்பதற்காகவும் நரேஷ் அகர்வால் அத்தகையதொரு கருத்தை தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் மோடி மீதான அரசியல் தாக்கு, மக்களிடையே அவருக்கு இருக்கும் செல்வாக்கை குறைக்கும் என்ற நோக்கில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அதே சமயம், இந்தியா போன்றதொரு மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் உயர் பதவிக்கு வரலாம் என்ற மற்றொரு கருத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இன்று புகழின் உச்சியில் இருக்கும் பல அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை பின்நோக்கி பார்த்தால் இந்த உண்மை நன்றாக புரியும்.


தலைவர்களின் இளமை காலங்கள் :

மத்தியில் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் உள்ள பெரிய அரசியல் தலைவர்கள் தங்களின் ஆரம்ப காலத்தில் மிக சாதாரண நிலையில் இருந்தே மிகப் பெரிய தலைவர்களாக வளர்ந்துள்ளனர். மோடி அவரது சிறுவயதில் டீ விற்றார் என்றால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் ஜெலட் தனது கல்லூரி படிப்பின் போது மோஜிக்மேனாக பணியாற்றி உள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கர்நாடக பொதுப் பணித்துறையில் சாதாரண கிளார்க்காக தனது வாழ்க்கையை துவங்கி உள்ளார். இதே போன்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, சோலாப்பூர் நீதிமன்றத்தில் ப்யூனாக இருந்துள்ளார். பின்னர் காவல்துறை ஆள்சேர்ப்பின் மூலம் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி, தான் படித்துக் கொண்டிருந்த போது கல்வி கட்டணம் செலுத்துவதற்காக எல்.ஐ.சி., ஏஜென்டாக பணியாற்றி உள்ளார். கேரள முதல்வர் அச்சுதானந்தன், குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு 12 வயதில் விவசாய கூலி தொழிலாளியாக பணியாற்றி உள்ளார். மறைந்த காங்கிரஸ் தலைவர் பஜன்லால், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சைக்கிளில் தெருத்தெருவாக சென்று போர்வை, சால்வைகள் விற்பனை செய்து வந்துள்ளார். பின் நாளில் அவர் காங்கிரசில் சேர்ந்து அரியானா மாநிலத்தின் முதல்வராக ஆனார்.


ஜனநாயக வளர்ச்சி :

குடிசையில் இருந்து கோபுரத்திற்கு சென்ற இந்த தலைவர்களின் வாழ்க்கை, இந்திய ஜனநாயகத்தை பிரதிபலிக்கிறது. இதுகுறித்து முன்னாள் அரசியல் ஆய்வாளர் சி.பி.பம்ப்ரி கூறுகையில், ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரின் வாழ்க்கை பின்னணி குறித்து விமர்சிப்பவர்களுக்கு இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையை அறியாதவர்; ஒருவர் எங்கிருந்து வந்தார் என்பது முக்கியமல்ல; அவர் எந்த வகையிலான அரசியல் கொள்கையை கடைபிடிக்கிறார் என்பதே முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும், மோடி குறித்து கடுமையாக விமர்சித்து பேசிய சமாஜ்வாதி கட்சியின் நரேஷ் அகர்வால், அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் தனது மாணவ பருவத்தில் மல்யுத்த வீரராக இருந்து பின் கடுமையான முயற்சியால் அரசியலில் முன்னேறியதை அறியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சமூக அறிவியலாளர் டாக்டர் தீபன்கர் குப்தா கூறுகையில், பல்வேறு வாழ்க்கை தரத்தில் இருந்து வந்தவர்கள் இன்று அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர்; மக்களின் ஆதரவு காரணமாக அவர்களுக்கு இந்த உயர்ந்த நிலை கிடைத்துள்ளது; இது கொண்டாடப்பட வேண்டிய விஷயம்; ஒரு மனிதனின் ஆரம்ப காலத்தை சுட்டிக் காட்டி அவரை ஒதுக்க நினைப்பது சரியல்ல; இது இந்திய ஜனநாயகத்தின் வளர்ச்சியை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறிய உள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X