பொது செய்தி

இந்தியா

பேஸ்புக்- டுவிட்டர் மூலம் அவதூறு ; கட்டுப்படுத்த சட்டம்: ஐ.பி., யோசனை

Updated : நவ 24, 2013 | Added : நவ 24, 2013 | கருத்துகள் (20)
Share
Advertisement
பேஸ்புக்- டுவிட்டர் மூலம் அவதூறு ; கட்டுப்படுத்த சட்டம்: ஐ.பி., யோசனை

புதுடில்லி : நாட்டில் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு ஒரு காரணமாக இருந்து வருவதும், அவதூறு பரப்புவதும், தேவையற்ற சர்ச்சையை கிளப்புவதுமாக நாட்டிற்கு ஒரு அச்சுறுத்தலாக வளர்ந்து வரும் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றை , இந்திய சட்ட வரைமுறைக்குள் கொண்டு வரவேண்டும் என உளவுத்துறை பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக உளவுத்துறை ( ஐ.பி.) பிரதமருக்கு அனுப்பியுள்ள யோசனை குறிப்பில் பிறநாடுகளில் பின்பற்றப்படும் விதிகள் வகுத்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
டில்லியில் நடந்த டி.ஜி.பி.,க்கள் மாநாட்டில் பங்கேற்ற ஐ.பி,. டைரக்டர் ஆசீப் இப்ராகீம் தனது நிறைவு உரையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டால் தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க முடியும் என்றார்.


இவர் மேலும் கூறுகையில், சமீப காலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வேகம் காரணமாக வீட்டில் இருந்த படியே பல சமூக விரோத செயல்கள் பரப்பப்படுகிறது. இது போன்ற சைபர் குற்றங்கள் தடுப்பது, சவால்களை எதிர்கொள்வது குறித்து அனைவரும் கலந்து பேசி ஆராய வேண்டிய நிலையில் உள்ளோம். சமீபத்திய கலவரம் சமூக வலைத்தளங்கள் மூலம் பரவியதை பார்த்து இந்திய பாதுகாப்பு துறையினர் ஒன்றும் செய்ய முடியாதவர்களாக இருந்தனர்.


இதற்கு வெளிநாட்டு சட்டவிதிமுறைகள் தங்குதடையின்றி பெறும் வகையில் உள்ளது.இது தொடர்பாக இந்தியாவில் இன்னும் சட்டம் உரிய முறையில் வகுக்கப்படவில்லை. இத்தகைய சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்யும் வெளிநாட்டிவரையும் இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவராக கொண்டு வந்தால் மட்டுமே இந்தியாவில் சைபர் குற்றங்கள் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இந்த யோசனை குறித்து கம்ப்யூட்டர் எமர்ஜன்ஸி ரெஸ்பான்ஸ் டீம் இந்தியா டைரக்டர் ஜெனரல் குல்சன் ராய் கூறியதாவது: உளவுத்துறை அதிகாரி கூறுவது போல் , சட்டம் நடைமுறைக்கு கொண்டு வந்தால், சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவீட்டர் மூலம் கருத்துக்கள் சொல்லும் வெளிநாட்டவர்கள் முதல் அனைத்து வெப்சைட்டுகளும் இந்திய சட்டத்திற்கு பதில் சொல்பவராகவும், பணிய வேண்டியவர்களாகவும் இருப்பர். இவ்வாறு ராய் தெரிவித்தார்.

56 வது இடத்தில் இந்தியா :

உலக அளவில் இணையதள பங்களிப்பு , சமூக பாதிப்பை ஏற்படுத்துதல் மற்றும் மனித உரிமை பாதுகாப்பில் நாடுகளின் நிலை குறித்து சர்வே எடுக்கும் வெப் இண்டெக்ஸ் சமீபத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில் 81 நாடுகள் அடிப்படையில் கணக்கெடுக்கப்பட்டதில் இந்தியா 56 வது இடத்தில் இருக்கிறது. இது போல் குறைந்த வளர்ச்சி, என்ற விவரத்தில் பாகிஸ்தான் 6 வது இடத்தில் இருக்கிறது. வியட்னாம் முதலிடத்தில் உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SenthilKumar Modi - Auckland CBD,நியூ சிலாந்து
25-நவ-201309:31:58 IST Report Abuse
SenthilKumar Modi முதல இந்தியாவின் ( மத்திய உளவுத்துறை ) IB டைரக்டர் ஒரு முஸ்லிமா? நினைத்து பார்க்க முடியவில்லை. இது ஒட்டு வங்கிக்காக இந்தியாவின் இறையாண்மையை அடகு வைக்கும் காங்கிரஸின் நடவடிக்கை. இரண்டாவது பாரதீய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர் மோடிக்கு சமுக தளம் மூலமாக நெறைய ஆதரவு பெருகி வருகிறது. அதை தடுக்கும் காங்கிரஸின் மெகா திட்டம் இது.
Rate this:
Cancel
S.S .Krishnan - chennai,இந்தியா
25-நவ-201306:43:47 IST Report Abuse
S.S .Krishnan இது மக்களின் கருத்து குரல்வலையை நெரிக்கும் முயற்சி. இணைத்தளம் முலம் தவறு செய்பவர்களை தண்டிக்கலாம் . ஆனால் மக்களது கருத்துகள் நசுக்கபடகூடாது. மக்கள் சக்தி, மகேசன் சக்தி.
Rate this:
Cancel
Thiru Gautham - Chennai,இந்தியா
25-நவ-201305:18:09 IST Report Abuse
Thiru Gautham நல்ல செய்தி இதை விரைவில் செய்வது மிகவும் நல்லது, அப்போதுதான் சில ஒழுக்கமற்றவர்களின் செயல்களால் தவறான ஆபாசமான படங்களை இணையதலத்தில் பரப்பி அதனால் சில பெண் குழந்தைகள் இறப்பு குடும்பங்கள் தற்கொலை போன்றவற்றை தடுக்க முடியும், இது போன்ற பல தவறான குற்றங்கள் எளிதில் நடக்கின்றன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X