தேர்தலையொட்டி சட்ட விரோத பண பரிமாற்றமா? மூலதன சந்தைகள் மீது செபி கண்காணிப்பு தீவிரம்

Updated : நவ 25, 2013 | Added : நவ 25, 2013 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி:தேர்தலையொட்டி, பங்குச்சந்தை உட்பட மூலதன சந்தைகளில், சட்ட விரோத பண பரிமாற்றம் மூலம் முதலீடு செய்யப்படுகிறதா என்பதை, 'செபி' என்ற இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியம், தீவிரமாக கண்காணித்து வருகிறது.இந்தியாவில், அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல், அடுத்த மாதத்திற்குள்
தேர்தலையொட்டி சட்ட விரோத பண பரிமாற்றமா?  மூலதன சந்தைகள் மீது செபி கண்காணிப்பு தீவிரம்

புதுடில்லி:தேர்தலையொட்டி, பங்குச்சந்தை உட்பட மூலதன சந்தைகளில், சட்ட விரோத பண பரிமாற்றம் மூலம் முதலீடு செய்யப்படுகிறதா என்பதை, 'செபி' என்ற இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியம், தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்தியாவில், அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல், அடுத்த மாதத்திற்குள் முடிவடைகிறது.தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் செலவுகளுக்காக, எங்கிருந்து பணம் வருகிறது என்பதை, தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கண்காணிக்கிறது.இதனால், தேர்தல் செலவுகளுக்காக, அரசியல் கட்சிகளுக்கு வேறு வழிகளில், குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து, பணம், சட்ட விரோத பண பரிமாற்றத்தின் மூலம் வர வாய்ப்புஉள்ளதாக கருதப்படுகிறது.
இவ்வாறு சட்ட விரோதமாக வரும் பணம், நேரடியாக ஒருவரையோ, அரசியல் கட்சிகளையோ சென்றடை வதற்கு பதில், கம்பெனிகள், கூட்டாக தொழில் நடத்துபவர்கள், அறக்கட்டளைகள் வழியாக வருவது உண்டு.பங்குச்சந்தை உட்பட மூலதனச் சந்தைகளில் செய்யப்படும் முதலீடுகள் மறைமுகமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு போய் சேர்கிறது. சட்ட விரோத பண பரிமாற்றம், தேர்தல் சமயத்தில் அதிகளவில் நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதன் காரணமாக, சமீபத்திய ஐந்து மாநில தேர்தலையொட்டியும், லோக்சபா தேர்தலை யொட்டியும், மூலதன சந்தைக்கு வரும் முதலீடுகளை கண்காணிக்க, செபி திட்டமிட்டு உள்ளது.வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியானது, மூலதன சந்தைகள் மூலமாகத்தான் வருகிறது. இவ்வாறு வரும் பணம், அரசியல் விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்பதை உன்னிப்பாக கண்காணிக்க, புலனாய்வு அமைப்புகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. அதற்காக நவீன கண்காணிப்பு உத்திகளை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகளை கண்காணிக்க, செபி கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. குறிப்பாக, வர்த்தக ரீதியாக என்ன முன்னேற்றங்கள் நடந்தாலும், அதை தெரிவிக்க வேண்டும் என, உத்தர விடப்பட்டு உள்ளது. கம்பெனிகள், தங்கள் முதலீட்டில் இருந்து, குறிப்பிட்ட நிதியை, முதலீட்டாளர்களுக்கு தெரியாமல் மாற்றியிருக்கிறதா, யாரிடமிருந்து நிதி வந்திருக்கிறது போன்ற விவரங்கள் கண்காணிக்கப்படுகின்றன.
புரோக்கர்கள், இடைத்தரகர்கள், ஆகியோர் வாடிக்கையாளர்களின் பணத்தை அவர்களது அனுமதியின்றி மாற்ற கூடாது. முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்படும் முதலீடு, முழுக்க முழுக்க, வர்த்தக நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.முதலீட்டாளர்களுக்கு சேர வேண்டிய பணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்குவது, முதலீட்டாளர் களை வகைப்படுத்துவது என, பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தேர்தல் சமயத்தில், பங்குச்சந்தை, பரஸ்பர நிதி உட்பட, அனைத்து வகையான முதலீட்டு சந்தைகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அனைத்தும், கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanban - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-நவ-201316:36:51 IST Report Abuse
Nanban எண்ணைய கண்ணுல ஊற்றி பார்த்தாலும் சரி, என்னத்த பண்ணுனாலும் சரிதான், எங்க கண்ணுல தப்பமுடியாது என்று நீங்க தான் நினைச்சுகிட்டு இருக்கனும். அட போங்கையா .. நீங்களும் உங்க கண்காணிப்பும்.. எண்களுக்க வழிதெரியாது.. என்று அவர்கள் செய்வதை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டியது தான்.. உங்களால..ஒன்னும் செய்ய முடியாது. ஏனா அவங்க சொல்றதத்தான் நீங்க செய்யணும்.
Rate this:
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
25-நவ-201308:19:59 IST Report Abuse
K Sanckar நாட்டில் மூன்று பொருளாதார நிபுணர்கள் ஆட்சி புரிகிறார்கள். டாக்டர் மன்மோகன் சிங்க் திருவாளர் ப சிதம்பரம் மேதகு அலுவாலியா ஆகியோர் பதவிய விட்டு போகும் முன்னர் நாட்டை சுரண்டி விட்டே போக போகிறார்கள். கள்ள பணம் கோடிகணக்கில் புரளுகிறது. நாட்டில் பொருளாதாரம் தலை கீழே போய் விட்டது. உற்பத்தி இருந்தும் விலை வாசிகள் ஆகாயத்தில் பறக்கின்றன. பண வீக்கம் வெடித்து போகும் அளவிற்கு வீங்கியே போய் விட்டது. வெளி நாட்டு வங்கிகளில் இந்திய பணம் கோடிகணக்கில் தேங்கியுள்ளன. செபி என்பது நிதி அமைச்சருக்கு ஜூஜி பி போல. இதுதான் இன்றைய நிலை
Rate this:
P.GOWRI - Chennai,இந்தியா
25-நவ-201311:34:06 IST Report Abuse
P.GOWRIசங்கர்ஜி சொல்லி உள்ளது முற்றிலும் உண்மை ....
Rate this:
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
25-நவ-201307:55:51 IST Report Abuse
JALRA JAYRAMAN எல்லா அரசியல்வாதிக்கும் பங்கு என்றால் யார் வாய் திறப்பார்கள். இது தான் சோசியலிசம், அரசியல்வாதிகள் தங்கள் சலுகைகளை பற்றி யாராவது கேட்டால் ஒன்று சேர்ந்து அதற்கு சப்பை கட்டுவார்கள் அல்லது அந்த செய்தி வராத மாதிரி பார்த்து கொள்வார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X