லுத்தரன் திருச்சபை நிர்வாகக்குழு கலைத்து பிஷப் அதிரடி நடவடிக்கை| Dinamalar

லுத்தரன் திருச்சபை நிர்வாகக்குழு கலைத்து பிஷப் அதிரடி நடவடிக்கை

Added : செப் 16, 2010 | |
திருச்சி: மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, திருச்சியை தலைமையகமாக கொண்டு இயங்கும், தமிழ் சுவிஷேக லுத்தரன் திருச்சபை (டி.இ.எல்.சி.,) நிர்வாகக்குழுவை, அதன் பிஷப் கலைத்தார். இதற்கு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் டி.இ.எல்.சி., தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இந்த சபையில் கேரளா, தமிழகம், கர்நாடகா,

திருச்சி: மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, திருச்சியை தலைமையகமாக கொண்டு இயங்கும், தமிழ் சுவிஷேக லுத்தரன் திருச்சபை (டி.இ.எல்.சி.,) நிர்வாகக்குழுவை, அதன் பிஷப் கலைத்தார். இதற்கு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் டி.இ.எல்.சி., தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இந்த சபையில் கேரளா, தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த 3 லட்சம் கிறிஸ்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சபைக்கு சொந்தமாக மேற்கண்ட மாநிலங்களில் 500 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளது.இதில், 240க்கும் மேற்பட்ட பள்ளிகள், ஒரு கலை அறிவியல் கல்லூரி, இரண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளி, ஒரு ஐ.டி.ஐ., பார்வையற்றோர் பள்ளி என பல்வேறு கல்வி நிறுவனங்கள் அடங்கும். திருச்சபையையும், அதன் சொத்துக்களையும் நிர்வகிக்க பிஷப் தலைமையில் நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, திருச்சபையின் பிஷப்பாக மார்ட்டின் இருந்து வருகிறார். திருச்சபையின் நிர்வாகக்குழுவில் செயலாளர் சார்லஸ், பொருளாளர் ஞானராஜ் உள்ளிட்ட எட்டு பேர் உள்ளனர். இவர்கள் கடந்த மே மாதம் தேர்தல் மூலம் பதவிக்கு வந்தனர். இந்த நிர்வாகக்குழுவை திருச்சபையின் சட்டவிதிமுறை 194ன் படி, நேற்று முன்தினம், பிஷப் மார்ட்டின் கலைத்து விட்டதாக அறிவித்துள்ளார்.பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, பிஷப் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். நேற்று காலை அவர் மாவட்ட கலெக்டர் சவுண்டையா வீட்டுக்கு சென்று திருச்சபையை கலைத்து விட்டதால், "நிர்வாகக்குழு உறுப்பினர்களிடமிருந்து மிரட்டல் வருகிறது. என் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்' என, மனு அளித்தார்.பின்னர், நிருபர்களிடம் மார்ட்டின் கூறியதாவது:சபைக்கு சொந்தமான 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். இதற்கு சபையின் ஆலோசனைக்குழு அனுமதி அளித்திருந்தாலும், விற்பனையில் மோசடி நடந்துள்ளது. சபைக்கு சொந்தமான பள்ளிகளில் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதல் ஆகியவையும், பிடிக்காதவர்களை பழிவாங்கும் நோக்கிலும், குருமார்களை மரியாதை குறைவாக நடத்தியும் வருகின்றனர்.எனவே, நிர்வாகக்குழுவை கலைத்து விட்டேன். சபையின் அலுவலகத்தையும் பூட்டி விடுமுறை விட்டு விட்டேன். ஏற்கனவே நிர்வாகக்குழு, பல இடங்களை மோசடியாக விற்றுள்ளதாக புகார் உள்ளது. எனக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் கலெக்டரிடமும், போலீஸிலும் புகார் செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.டி.இ.எல்.சி.,யின் நிர்வாகக்குழுவை கலைத்து பிஷப் மார்ட்டின் உத்தரவிட்டிருந்தாலும், நேற்று காலை வழக்கம் போல் சபையின் அலுவலகத்தை திறந்து நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பணிகளை கவனித்தனர். பிரச்னையால் அங்கு பாலக்கரை போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X