திருச்சி: திருச்சியில் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.,) சார்பில், கேரேஜ் மற்றும் வேகன் மெக்கானிக்கல் கேட்டகிரி கவுன்சில் மாநாடு நேற்று நடந்தது. சங்க புதிய கோட்ட அலுவலகத்தில் நடந்த மாநாட்டில், துரைரெங்கன் வரவேற்றார். மார்டின் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் ராஜாஸ்ரீதர் பேசியதாவது: புதிய பென்ஷன் திட்டத்தால் பெரிய ஆபத்து உள்ளது. இதை மத்திய கமிட்டி சார்பில் தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பதவி மாற்றியமைத்ததில் முரண்பாடு உள்ளது. மெம்பர் ஆஃப் ஸ்டாஃப் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. அது போட்ட உடன் பதவி மறுசீரமைப்பு சரி செய்யப்படும்.கோட்ட உதவி மேலாளர், கோட்ட மெக்கானிக்கல் இன்ஜினியர் இருவரும் தங்களது தொழிலாளர் விரோத போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் நடத்தப்படும். உதிரி பாகங்களை உடனடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.வேலை பளுவுக்கு தகுந்த ஆட்கள் வழங்க வேண்டும். உதிரிபாகம், சோப்பு, பிரஸ், கூட்டுமாறு, வேலைக்கு தேவையான பொருட்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும். ரயில்வேயில் தொழிலாளரின் ஒரு வாரிசுக்காவது வேலை வழங்க வேண்டும். ரிஸ்க் அலவன்ஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட 36 கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.எஸ்.ஆர்.எம்.யூ., கோட்டச் செயலாளர் பழனிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.