பொது செய்தி

தமிழ்நாடு

கமிஷனரிடம் வைஷ்ணவி புகார்

Added : நவ 26, 2013
Advertisement

மதுரை : மதுரை ஆதீன மடத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி. மடத்திற்கு சொந்தமான கடைகளின் வாடகை உட்பட நிர்வாக பணிகளை கவனிக்கிறார். மேலகோபுரத்தெருவில், மடத்தின் கடை வாடகை தொடர்பாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், ஒருதரப்பின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், சாட்சியாக வைஷ்ணவி சேர்க்கப்பட்டார். இந்நிலையில், "சாட்சி சொல்லக்கூடாது' என தனக்கு மிரட்டல் வருவதாகவும், பாதுகாப்பு அளிக்கும்படியும், நிறைமாத கர்ப்பிணியான அவர், நேற்று போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூரிடம் புகார் செய்தார். வக்கீல் சண்முகசுந்தரம் உடன் இருந்தார். இதுகுறித்து, விசாரிக்கும்படி விளக்குத்தூண் இன்ஸ்பெக்டர் ஜெயகுமாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X