காங்கிரஸ் அரசின் மீதான நடுத்தர மக்களின் கோபம்; மோடிக்கு ஆதரவாக மாறுமா?

Updated : நவ 29, 2013 | Added : நவ 29, 2013 | கருத்துகள் (64)
Share
Advertisement
புதுடில்லி : 2014 லோக்சபா தேர்தலில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் மோடியை பிரதமராக ஆதரிப்பார்களா? குஜராத்தில் மோடியால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிகள் நாடு முழுவதும் ஏற்படுமா? ஆகியன பெரும்பாலான மக்களின் கேள்வியாக உள்ளது. பதில் கூறும் குஜராத் : நாடு முழுவதிலும் உள்ள நடுத்தர மக்கள் மோடியை ஆதரிப்பார்களா என்ற கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்
Will the middle class, tilt, towards Modi,நடுத்தர மக்கள், மோடியை, பிரதமராக, ஆதரிப்பார்களா

புதுடில்லி : 2014 லோக்சபா தேர்தலில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் மோடியை பிரதமராக ஆதரிப்பார்களா? குஜராத்தில் மோடியால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிகள் நாடு முழுவதும் ஏற்படுமா? ஆகியன பெரும்பாலான மக்களின் கேள்வியாக உள்ளது.


பதில் கூறும் குஜராத் :

நாடு முழுவதிலும் உள்ள நடுத்தர மக்கள் மோடியை ஆதரிப்பார்களா என்ற கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன் குஜராத்தில் நடுத்தர மக்கள் மோடியை எவ்வாறு ஆதரிக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். குஜராத்தில் மோடியால் கொண்டு வரப்பட்ட பொருளாதார வளர்ச்சி, நிர்வாகத்திறன் ஆகியன அவர் மீதான நம்பிக்கையை அதிகரிக்க வைத்து நடுத்தர மக்களை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையான காரணமா என ஆராய்ந்தால், ஆம் பதிலே கிடைக்கிறது. மோடி முதல்வராக வருவதற்கு முன் குஜராத்தில் பா.ஜ., வின் செல்வாக்கு பின்தங்கியே இருந்துள்ளது. குஜராத்தின் கிராமம் மற்றும் நகர்புறங்களில் மோடி காலத்திலேயே பா.ஜ.,வின் ஆதிக்கம் உயர்ந்துள்ளது.


மோடியின் செல்வாக்கு :

சட்டமன்ற அல்லது லோக்சபா தேர்தலில் குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது 1984-85 ம் ஆண்டில் ராஜீவ் புகழ் ஓங்கி இருந்தது. இருந்த போதும் அதற்கு பின்னர், குறிப்பாக பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு குஜராத்தில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ., தோல்வி அடையவில்லை. குஜராத்தில் பட்டேல் இனத்தவர்களின் பெரும் அளவிலான ஆதரவு பா.ஜ.,விற்கு இருந்தது. இது குஜராத்தில் பா.ஜ.,வை தொடர்ந்து பலம் மிக்க கட்சியாக உருவாக்க காரணமாக அமைந்தது. ஆரம்பத்தில் ஜாதி அடிப்படையில் பா.ஜ.,வின் ஆதிக்கம் குஜராத்தில் அதிகரித்தாலும், பின்னர் படிப்படியாக மோடியின் செயல்பாடுகள் மக்களின் மனதில் ஜாதி பேதங்களை கடந்த மதிப்பை மோடி மீது ஏற்படுத்தியது. இதுவே குஜராத்தில் பா.ஜ., வெல்ல முடியாத மிகப் பெரிய கட்சியாக உருவாக்கியது. குஜராத்தில் நடுத்தர மக்கள் மோடியை ஆதரிக்க ஜாதி கட்சிகளுடனான கூட்டணியா அல்லது பா.ஜ.,மீதும் மோடி மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையா என்று பார்த்தால் ஜாதி கட்சிகளின் கூட்டணி என்பது தற்போதைய காலகட்டத்தில் சாத்தியமற்றதாகும்.


பயனளிக்காத ஜாதி கட்சிகள் :

நாடு முழுவதும் நடுத்தர மக்கள் மோடியை ஆதரிப்பதற்கும் ஜாதி கட்சிகளுடனான கூட்டணி பயனளிக்காது. இது நாட்டின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் போது மக்களின் மனநிலையை மாற்றாது. உத்திர பிரதேசத்தில் யாதவர்களே அதிகம், ஆந்திராவில் ரெட்டி இனத்தவர்களே அதிகம். அவர்கள் ஜாதி அடிப்படையில் ஓட்டளித்தாலும், பிற உள்ளூர் ஜாதி கட்சிகளின் ஆதரவு தேவை. இது 2014 தேர்தலின் போக்கை மாற்றாது. ஆனால் மோடி மீதான தனிப்பட்ட நம்பிக்கை மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதேசமயம் சென்னை மற்றும் கோல்கத்தா போன்ற நகரங்கள் இதற்கு விதிவிலக்காகவே இருக்கும். தமிழகம் மற்றும் மேற்குவங்கத்தில் பா.ஜ.,விற்கு பெரிதாக கூறும் அளவிற்கு செல்வாக்கு இல்லை என்பதால் அங்கு மோடியின் செல்வாக்கு பலிக்குமா என்பது சந்தேகமே. தமிழகத்தில் திராவிட கட்சிகளும், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும் ஆதிக்கம் பெற்றுள்ளதால் பா.ஜ.,விற்கு அது பின்னடைவாகவே இருக்கும்.


பெருநகர ஆதரவு :

நாட்டின் பிற பகுதிகளில் மத்திய அரசின் மீது மக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் கொண்டுள்ள வெறுப்பு, கோபம் ஆகியன நிச்சயம் மோடி மீதான ஆதரவை பல மடங்கு அதிகரிக்க செய்யும். டில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் மோடியின் செல்வாக்கே ஓங்கி நிற்கும். இருப்பினும் பெருநகரங்களை மட்டும் கணக்கிட்டால் பா.ஜ.,விற்கு 24 இடங்களுக்கும் குறைவாகவே கிடைக்கலாம். ஆனால் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மக்களின் மனநிலையை சரியாக கணிக்க முடியாமல் இருப்பதால் தெளிவற்ற நிலையே காணப்படுகிறது. பொதுவாக ஜாதி அடிப்படையிலான ஓட்டுக்கள் அதிகளவில் பதிலாகும் என்றாலும் தற்போது நடுத்தர மக்களிடையே அதிகரித்து வரும் அரசியல் விழிப்புணர்வால், தற்போதைய விலைவாசி உயர்வு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

மக்களிடையே ஏற்பட்டு வரும் அரசியல் விழிப்புணர்வு மிக விரைவிலோ அல்லது படிப்படியாகவோ இந்திய அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்றே கூறலாம். இந்த அரசியல் மாற்றம் 2014 தேர்தலில் நரேந்திர மோடியால் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravanakumar - srivilliputtur,இந்தியா
30-நவ-201303:44:27 IST Report Abuse
saravanakumar மோடி பிரதமர் ஆவது உறுதி .தமிழகத்தில் மொடிஜி ஒரு தொகுதியில் போட்டியிட்டால் தமிழக ப ஜ க மேலும் வலுபெறும் .மோடி போட்டியிட விரும்பும் இரு தொகுதிகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யலாம்.
Rate this:
Cancel
k.nazar - jeddah,சவுதி அரேபியா
30-நவ-201302:43:08 IST Report Abuse
k.nazar சிறுபான்மை மக்கள் கொஞ்சம் கவனமாக இருக்கணும் காரணம் ஓட்டு வாங்க எந்த வித்தையையும், தோற்கும் பயத்தில் செய்து, பெரும்பான்மை மக்களின் நன்மதிப்பை பெற, மனிதநேயம் அற்ற முறையில் முயற்சி செய்வார்கள் பெரும்பான்மை சகோதர மக்களும் இதை அறிவார்கள் அரசியல் வாதிகள் வருவார்கள் போவார்கள் பாதிக்கபடுவது பொது ஏழை ஜனம் தான் இதை பொதுமக்கள் புரிந்து கொள்ளவேண்டும் வீட்டுக்கு வீடு கணக்கு எடுத்தாலே போதும் தன் எந்த பிரயோசனமும் இல்லாமல் வெட்டியாய் இவர்கள் பின்னால் சுத்தியது விளங்கும் இந்த பிள்ளைகளை பெற்றோர்கள் ஆக்கபூர்வமான தொழில்களில் ஈடுபடுத்த வேண்டும்
Rate this:
Cancel
அன்வர்-ஹல்வானி - திருவாரூர்.,,இந்தியா
29-நவ-201320:23:59 IST Report Abuse
அன்வர்-ஹல்வானி ஆன்லைன் பத்திரிகைகள் பிரதமரை தேர்ந்தெடுக்க முடியாது,, நீங்கள் காட்டு கத்து கத்தினாலும் ஒரு போதும் மோடி பிரதமர் ஆக முடியாது,, இதற்க்கு நிறைய காரணம் உள்ளது... உங்கள் பாஷையில் நடுத்தர மக்கள், அடித்தள மக்கள், கிராமத்து மக்கள், நகரத்து மக்கள் என்று என்ன மாதிரி கூவினாலும் பலன் இல்லை.. விலைக்கு வாங்கப்பட்ட மீடியாக்கள்,, வாங்கிய காசிற்கு கூவத்தான் வேண்டும்.. ஆதரவு காட்டத்தான் வேண்டும்.. பத்திரிகைகள்,, நெருப்பை போர்வை போட்டு போர்த்தி வைக்க பார்க்கிறது.. அது ஒரு போதும் முடியாது...
Rate this:
James Elango - Chennai,இந்தியா
30-நவ-201300:41:39 IST Report Abuse
James Elangoஇத்தனை வருடங்கள் காங்கிரசை ஆதரித்து என்ன நன்மை கண்டீர்கள்? ஒரு மாற்றத்திற்கு முயற்சி செய்து பார்த்தால் தான் என்ன? கோடி கோடியாக நம் பணத்தை சுவீடன் நாட்டில் பதுக்கி வைத்துள்ள காங்கிரெஸ் சரி என்போமானால் நம்மை போன்ற 'அறிவாளிகள் ' யாருமில்லை. கண்ணை திறந்து கொண்டு கிணற்றில் தான் குதிப்பேன் என்று சொன்னால் யார் தடுக்க முடியும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X