புதுடில்லி:நக்சல் அச்சுறுத்தல் உள்ள பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில், 1,315 இடங்களில், மொபைல் கோபுரங்களை அமைக்க, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அமைக்கப்படும் கோபுரங்களின் கட்டுமானம், நிர்வாகம், செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றை, ஐந்தாண்டுக்கு கவனிக்க, தனியாரிடம் இருந்து, கடந்த ஆகஸ்ட் மாதம், டெண்டர் கோரப்பட்டு இருந்தது.இந்த டெண்டர்களை பரிசீலனை செய்து, யாருக்கு ஒதுக்கீடு செய்வது என்பதை, இன்னும், 10 - 12 நாட்களுக்குள் முடிவு செய்யப்பட உள்ளது.
தற்போதுள்ள விதிமுறைப்படி, 30 சதவீத பணிகள், மத்திய அரசுக்கு சொந்தமான, ஐ.டி.ஐ., நிறுவனம் கவனிக்கும், மீதமுள்ள பணிகள் தான் இரண்டு நிறுவனத்திற்கு ஒதுக்கப்படும்.அந்த வகையில், 11 நிறுவனங்கள் டெண்டர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றன. இறுதியில், மூன்று நிறுவனங்கள் விண்ணப்பித்தன. இதில், வி.என்.எல்., மறறும் எச்.எப்.சி.எல்., நிறுவனத்திற்கு கோபுரங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.