புதுகட்சி அறிவிப்பு: இம்மாதம் வெளியிடுவாரா ஆந்திர முதல்வர்?

Updated : டிச 02, 2013 | Added : டிச 02, 2013 | கருத்துகள் (23)
Advertisement
புதுகட்சி அறிவிப்பு: இம்மாதம் வெளியிடுவாரா ஆந்திர முதல்வர்?

ஐதராபாத்:தொடர்ந்து தனி தெலுங்கானாவை எதிர்த்து வரும் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, புதுகட்சி துவங்க உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பை இம்மாதம் (டிசம்பர்) 8 ஆம் தேதி வெளியிடுவார் என ஆந்திர வட்டார தகவல்கள் தெரிவி்க்கின்றன.


மோதல் போக்கு:


காங்கிரஸ் மேலிடம் தனி தெலுங்கானா அமைப்பதற்கு எல்லா நடவடிக்கையும் எடுத்து அமல்படுத்த முடிவும் செய்துவிட்டது. ஆனால் முதல்வராக இருக்கும் கிரண்குமார் ரெட்டி தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம் மீது மோதல் போக்கையே கொண்டுள்ளார்.


புலிசிந்தலா அணை திட்டம்:


ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள புலிசிந்தலா அணை திட்டம் துவக்கவிழா இம்மாதம் 8 ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள முதல்வர் கிரண்குமார் ரெட்டி, இந்த அணை திட்டத்தால் கிருஷ்ணா, மேற்கு கோதாவரி குண்டூர் மற்றும் பிராகாசம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல லட்சம் விவசாயிகளும் அவர்களின் 10லட்சம் ஏக்கர் நிலத்திற்கு இந்த அணை திட்டம் மிக்க உதவியாக இருக்கும் என்பதால் இதனை பயன்படுத்தி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை இவ்விழாவில் பங்கேற்க வைக்க முடிவு செய்துள்ளார்.


விவசாயிகள் நலன்:


தனி தெலுங்காவினால் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் நலன் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்த இந்த விழாவை பயன்படுத்தி விரும்புகிறார் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி. இந்நிலையில் விஜயவாடா தொகுதி எம்.பி. லகடபாடி ராஜகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த விழாவிலே ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி புதுகட்சி அறிவிப்பை வெளியிடுவார் என நம்பப்படுகிறது..

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
desadasan - mumbai,இந்தியா
02-டிச-201321:43:19 IST Report Abuse
desadasan மாநிலக்கட்சிகள் அதிகமாவது நாட்டுக்கும் நல்லதில்லை மாநிலத்திற்கும் நல்லதில்லை..காங்கிரஸின் இந்த மாதிரி சதி தான் அதை இத்தனை நாள் ஆட்சியில் வைத்திருக்கிறது வீடு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள்..அதிக மாநிலக்கட்சிகள் என்றால் இழுத்த இழுப்புக்கு வருவார்கள்..யாரோடும் கூட்டு வைத்துக்கொள்ளலாம்....தெலுங்கனாவை கொண்டுவருவதே அந்த எண்ணம் தானே
Rate this:
Share this comment
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
02-டிச-201320:36:07 IST Report Abuse
GUNAVENDHAN ஆந்திர முதல்வர் தனியே கட்சி தொடங்குவது நல்லது தான் , அப்போது தான் காங்கிரசின் வோட்டுக்கள் பிரியும் , காங்கிரசும் , இவரும் வோட்டுக்களை பங்கிட்டுக்கொண்டு, காங்கிரசை அடியோடு ஆந்திராவிலும் வீழ்த்தமுடியும் , அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் , ஜெகன் மோகனுக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். ஜெகன் மோகன் தனியே கட்சி தொடங்கியதால், அவரை பிடித்து ஜெயிலில் போட்டு , வாட்டி , வதைத்தாரே சோனியா, இப்போது கிரண் குமார் ரெட்டி தனியாக கட்சி தொடங்கினால் அவருக்கும் அதே கதி தானா ?> கட்சி தொடங்கியதாக அறிவித்தவுடன் அவர் மீது சி.பி.ஐ பாயுமா ?.
Rate this:
Share this comment
Cancel
mohankumar - Trichy,இந்தியா
02-டிச-201319:59:55 IST Report Abuse
mohankumar ரொம்ப சந்தொஷப்படதீங்க சரத்பவார் ,மூப்பனார் ,சிதம்பரம் ,இவர்களெல்லாம் இப்படித்தான் .நமக்கு வாலையும் சோனியாவுக்கு தலையையும் காட்டுவானுங்க . வோட்ட வாங்கிட்டு நல்ல பிள்ளை போலே மறுபடியும் கூடிக்குவானுங்க .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X