ஊழல்,அரசியல் தலையீட்டால் தேர்தல் முறைக்கு பாதிப்பு: பத்திரிக்கை ஆசிரியர்கள் கருத்து

Updated : டிச 02, 2013 | Added : டிச 02, 2013 | கருத்துகள் (12)
Share
Advertisement
கோல்கட்டா : ஊழல், அரசியல் தலையீடுகள் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் நடைமுறைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பத்திரிக்கை ஆசிரியர்கள் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியைப் போன்று இந்தியாவிலும் அனைத்து அரசியல் கட்சிகளின் நிதி தொடர்பான விபரங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என கோல்கட்டாவில் நடைபெற்ற தேர்தல் பத்திரிக்கை ஆசிரியர்கள் கூட்டத்தில்
EC took steps to bring poll process purity, ஊழல்,அரசியல் தலையீட்டால் தேர்தல் முறைக்கு பாதிப்பு: பத்திரிக்கையாளர் கூட்டத்தில் கருத்து

கோல்கட்டா : ஊழல், அரசியல் தலையீடுகள் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் நடைமுறைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பத்திரிக்கை ஆசிரியர்கள் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியைப் போன்று இந்தியாவிலும் அனைத்து அரசியல் கட்சிகளின் நிதி தொடர்பான விபரங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என கோல்கட்டாவில் நடைபெற்ற தேர்தல் பத்திரிக்கை ஆசிரியர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சிகளின் நிதி தொடர்பான அனைத்து விபரங்களும் கோப்புகளாக தொகுக்கப்பட்டு, வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


பத்திரிக்கையாளர் கூட்டம் :

ஐந்தாவது பத்திரிக்கை ஆசிரியர்கள் கூட்டம் தேர்தல்களும் ஊடகங்களும் என்ற தலைப்பில் கோல்கட்டாவில் சமீபத்தில் நடைபெற்றது. சி.ஆர்.இரானி அறக்கட்டளை கழகம், கோன்ராட் அடினயர் ஸ்டிவ்டங் என்ற ஜெர்மன் நிறுவனத்துடன் இணைந்து இந்த கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு, இந்திய தேர்தல் மற்றும் தேர்தல் ஆணைய நடைமுறைகள் குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஜெர்மன் நிர்வாக அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியரும், ஜெர்மன் ரேடியோவின் முன்னாள் தலைவருமான டாக்டர்.பீட்டர் ஸிச்வி, ஜெர்மனியில் உள்ளது போன்ற இந்தியாவிலும் அனைத்து அரசியல் கட்சிகளின் நிதி தொடர்பான விபரங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


தலைவர்களுக்கு நெருக்கடி :

டாக்டர் பீட்டர் ஸிச்வி பேசுகையில் இந்தியாவில் அரசியல் தலைவர்கள் எப்போதும் ஊடகங்களின் பிடிக்குள்ளேயே உள்ளதாக தெரிவித்துள்ளார். ஜெர்மனி வரலாற்றில் ஊடகங்கள் மிகப் பெரிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இம்பால் ப்ரீ பிரஸ் ஆசிரியர் பிரதீப் பஞ்சோபம் கூறுகையில், இந்தியாவில் மற்ற பகுதிகளை விட வடகிழக்கு மாநிலங்களில் வித்தியாசமான தேர்தல் முறைகளே கடைபிடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், வங்கதேசம் போன்று இல்லாமல் இந்தியாவில் அரசியல் சிக்கல்களை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், ஒரே மாதியான இனத்தவர்கள் இல்லாததால் இந்தியாவில் தனிப்பட்டதொரு தேர்தல் முறைகள் கடைபிடிக்கப்படுவதாகவும் மூத்த பத்திரிக்கையாளர் அஜோய் போஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகங்கள் தேர்தல் குறித்த விபரங்களை சுதந்திரமாகவும், நியாயமான முறையிலும் தருவதாகவும், இது சிறப்பானதொரு ஜனநாயக முறை உருவாக காரணமாக அமைகிறது எனவும் முன்னாள் துணை தேர்தல் கமிஷனர் சயான் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகள் குறித்த செயல்பாடு விபரங்களை அளிப்பதில் ஊடகங்கள் குறிப்பாக பத்திரிக்கைகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகங்களின் விபர சேகரிப்பு வேட்பாளர்கள் பற்றியதாக உள்ளதாகவும் தேர்தல் செயல்பாடுகள் குறித்தது அல்ல என மூத்த பத்திரிக்கையாளர் சித்தார்த் பாட்டியா தெரிவித்துள்ளார். முன்னதாக நீதித்துறை அறிவியல் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டேட்ஸ்மேன் அச்சு பதிப்பு பத்திரிக்கையாளர் பள்ளி மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.


தேர்தல் கமிஷன் செயல்பாடு:

தேர்தல் கமிஷன், நேர்மையான முறையில் தேர்தலை நடத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சாயன் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியது இந்திய தேர்தல் முறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும், தேர்தல் முடிவுகள் குழப்பமின்றி விரைவில் கிடைக்க இது பெரிதும் உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் நடத்தி வரும் டிவி சானல்கள் தேர்தல் பற்றிய செய்திகளை ஒளிபரப்புவதில் முக்கிய பங்கு வகித்தாலும், தேர்தல் நடைமுறைகளை பாதிக்கும் வகையிலும் செயல்படுகின்றன என சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். தேர்தல் நடைமுறைகள் பார்லி.,யில் மக்களின் விருப்பப்படி அமைக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனியில் அரசியல் கட்சிகளின் குறுக்கீடுகளுக்கு இடமில்லை என ஜெர்மன் பல்கலைக்கழக பேராசிரியர் பீட்டர் ஸிச்வி தெரிவித்துள்ளார். ஊழல் உள்ளிட்ட பிரச்னைகள் தேர்தல் முறைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இது போன்ற பிரச்னைகள் பிற நாடுகளில் இருப்பதில்லை எனவும் நிகழ்ச்சியில் கலந்த கொண்ட மூத்த பத்திரிக்கையாளர் கல்யாணி சங்கர் தெரிவித்துள்ளார்.


தேர்தல் முறை குறைபாடு :

குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற முறை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளதாகவும், அதே சமயம் அவர்கள் தடையை எதிர்த்து எந்த முயற்சியும் செய்யாமல் கண்காணிப்பது அவசியம் எனவும் கல்யாணி சங்கர் தெரிவித்துள்ளார். அடியாள் பலமும், பண பலமும் தேர்தலில் ஓங்கி இருப்பதால் தேர்தல் மீதான நன்மதிப்பை மக்கள் இழந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் முறைகளில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான சட்ட வரைவு மசோதா பார்லி.,யில் கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைமுறையில் மாற்றம் கொண்டு வருவதை பார்லி., தள்ளிப் போட்டுக் கொண்டு வருவதாகவும், அதனால் சுப்ரீம் கோர்ட் தேர்தல் முறைகளில் தலையிட வேண்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நோட்டோ பட்டனை பயன்படுத்தி வாக்காளர்கள் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் முறையை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் வலியுறுத்த வேண்டும் என ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கை பள்ளியின் நிர்வாக இயக்குனர் சாம் ராஜப்பா தெரிவித்துள்ளார். ஒரு கிராமத்தில் மக்கள் வேட்பாளர்கள் யாரையும் தேர்வு செய்யவில்லை எனில் என்ன செய்வதென்று அரசு சிந்திக்காதது ஏன் என வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான உஷா ராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் அரசாலும். அரசியல் கட்சிகளாலும் கட்டுப்படுத்தப்படுவதாகவும், சுதந்திரமாக அவைகளால் செயல்பட முடிவதில்லை எனவும் அஜோய் போஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் முறைகளை பலப்படுத்த அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும் என சித்தார்த் பாட்டியா தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201314:29:36 IST Report Abuse
Sundar As 'Trial' basis Election process should be handed over to the military instead of deping on the local authorities of Civil administration who are influenced by Political power, money power and bureaucratic Power. The military will be unbiased and they can not be influenced since they are unfamiliar with these Power Elements.
Rate this:
Cancel
VEZHAVENDHAN.Ka - Pudukkottai,இந்தியா
03-டிச-201312:11:32 IST Report Abuse
VEZHAVENDHAN.Ka இந்தியாவில் அதிகம் படித்தவர்கள் இல்லாதபோது அரசியலில் நேர்மை,ஒழுக்கம் மிகுந்திருந்தது. தற்போதோ,நேர்மை,ஒழுக்கம் ஆகியவை என்ன விலை எனக்கேட்கும் மெத்தப்படித்த கயவர்கள் நிறைந்து இன்றைய அரசியல் உள்ளது.இவர்களுடன் சில சமுதாய நோக்கமற்ற-சுயநலமிக்க ஊடகங்களும் கைகோர்த்து திரிவதால் நேர்மையானவர்கள் அரசியலில் நிலைக்க முடியவில்லை பணபலம் , வன்முறையாளர்கள் பலம்/ஆதரவு இல்லாதவர்களுக்கு இன்றைய அரசியலில் இடமில்லை
Rate this:
Cancel
Alani Adana - hanilton,கனடா
02-டிச-201319:49:09 IST Report Abuse
Alani Adana இது சரிதான் ஆனால் இதை டெல்ஹியில் நடத்த வேண்டும் ,ஒட்டு மொத்த இந்தியாவில் காங் பத்திரிகைகளை மிரட்டுகிறது .அப்புறம் பத்திரிகைகள் மிரட்டுகின்றன.பத்திரிகைகள் தவறு செய்கின்றன ,காங் ஜால்ரா .அப்போது ஆட்சி மாறும் போது ஒரே இரவின் மீடியா complete மாறபோகின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X