சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்உற்பத்தி பற்றாக்குறையை சமாளிக்க இன்று முதல் சென்னையில் 2மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் நகர்பகுதியினர் கடும் சிரமத்தை எதிர்நோக்கவுள்ளனர்.இந்நிலையில் மதியம் முதல்வர் ஜெ., மின்நிலைமை குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் தி.மு.க, ஆட்சி காலம் முதல் துவங்கிய மின்தடை அ.தி.மு.க., ஆட்சியிலும் தொடர்கிறது. மின்வெட்டுக்கு யார் காரணம் என தி.மு.க.,வும் , அ.தி.மு.க.,வும் மாறி மாறி காரணம் ஏதேனும் சொல்லி வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது 8 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று முதல் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுழற்சி முறையில் மின் தடை அமலாக்கப்படும். எப்போதும் பரபரப்பாக இருந்து வரும் சென்னையில் 2 மணி நேர மின்வெட்டு காரணமாக பல பணிகள் ஸ்தம்பிக்கும். தொழில்கள் முடங்கும்.
கடந்த தி.மு.க., ஆட்சியில் தமிழகம் முழுவதும் மின் தடை இருந்தபோதும், சென்னையில் மட்டும் மின்தடை வராமல் பார்த்து, மக்களிடம் தி.மு.க.,நல்ல பெயர் வாங்கி வந்தது நினைவிருக்கலாம்.
நிலக்கரி பற்றாக்குறை மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக தமிழகத்தில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. இந்த ஆண்டும், காற்றாலை மின் உற்பத்தியும் போதிய அளவு கை கொடுக்கவில்லை. தமிழகத்தில் 2 ஆயிரம் மெகாவாட்டுக்கும் மேல் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், மின் பற்றாக்குறையைச் சமாளிக்க சென்னையில் மீண்டும் 2 மணி நேர மின்வெட்டு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE