சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் பஸ் கண்ணாடி உடைப்பு

Added : டிச 06, 2013
Share
Advertisement
திருப்பூர்: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, மத்திய அரசை வலியுறுத்தி, திருப்பூரில் இந்து முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதை, முஸ்லிம் அமைப்பை சேர்ந்த இருவர் போட்டோ எடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, எச்சரித்து அனுப்பினர்.கோர்ட் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும்
திருப்பூரில் பஸ் கண்ணாடி உடைப்பு

திருப்பூர்: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, மத்திய அரசை வலியுறுத்தி, திருப்பூரில் இந்து முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதை, முஸ்லிம் அமைப்பை சேர்ந்த இருவர் போட்டோ எடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, எச்சரித்து அனுப்பினர்.
கோர்ட் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. காலை 10.30 மணியளவில், இந்து முன்னணியினர் ஏராளமானோர் கூடியிருந்தனர். பைக்கில் வந்த இருவர், கூட்டத்தினரை படம் எடுத்தனர். அவர்களிடம் இந்து முன்னணி நிர்வாகிகளும், போலீசாரும் விசாரித்தனர். அவர்கள் இருவரும் "பிரஸ்' என கூறியதும், எந்த பத்திரிகை என கேட்டபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். அவர்களிடம் இருந்த மொபைல் போன், கேமரா மற்றும் பைக்கை பறிமுதல் செய்து, சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மங்கலத்தை சேர்ந்த, "பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா' அமைப்பு நிர்வாகிகள் அபுபக்கர் சித்திக், பாரூக் என தெரிந்தது. அவர்களிடம் துணை கமிஷனர் திருநாவுக்கரசு விசாரணை நடத்தினார். தகவலறிந்து அவர்களது ஆதரவாளர்கள் சிலர் ஸ்டேஷனுக்கு முன் திரண்டனர். அவர்களிடம் நடத்திய பேச்சு முடிவில், இதுபோன்ற தேவையற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு, எந்தப் பிரச்னையும் ஏற்படுத்தக் கூடாது என போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.


பஸ் கண்ணாடி உடைப்பு:

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து அழைத்துச் செல்ல, போலீசார், சில பஸ்களை தயார் நிலையில் நிறுத்தியிருந்தனர். இந்து முன்னணியினர் அமர்ந்திருந்த ஒரு பஸ்சில் பின்புற கண்ணாடி கற்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டது. இதில், இருவருக்கு கைகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X