சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேன் மோதியதில் இருவர் பலி: ஆனைமலை அருகே பரபரப்பு

Added : டிச 06, 2013
Share
Advertisement
ஆனைமலை: தற்கொலைக்கு முயன்றவரின் உயிரை காப்பாற்றச்சென்ற ஆம்னி வேன் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.கேரளா - தமிழகம் எல்லையில் உள்ளது மீனாட்சிபுரம் பாரதி நகர். இப்பகுதியைச்சேர்ந்தவர் வெங்கடேஷ்,39. இவர் குடும்ப பிரச்னையால் நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரை மீட்ட உறவினர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வேனில் (கே.எல்.9 டபிள்யு 2777) அழைத்து
வேன் மோதியதில் இருவர் பலி: ஆனைமலை அருகே பரபரப்பு

ஆனைமலை: தற்கொலைக்கு முயன்றவரின் உயிரை காப்பாற்றச்சென்ற ஆம்னி வேன் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
கேரளா - தமிழகம் எல்லையில் உள்ளது மீனாட்சிபுரம் பாரதி நகர். இப்பகுதியைச்சேர்ந்தவர் வெங்கடேஷ்,39. இவர் குடும்ப பிரச்னையால் நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரை மீட்ட உறவினர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வேனில் (கே.எல்.9 டபிள்யு 2777) அழைத்து சென்றுள்ளனர். டிரைவர் சாகுல் அமீது ஓட்டினார். வேன், வளந்தாயமரம் அருகே வந்த போது, முன்னால் சென்ற லாரியை கடக்க முயன்றுபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டின் அருகில் நின்றிருந்த ஜீப்பின் மீது மோதியது, அதையடுத்து, ரோட்டில் நடந்து சென்ற தொழிலாளிகள் மீதும் மோதியது. இச்சம்பவத்தில், ஆறுமுகம்,45, சம்பவ இடத்திலேயே இறந்தார். மணிகண்டன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இரு சக்கர வாகனத்தில் வந்த எல்லைகாட்டை சேர்ந்த ஆறுச்சாமி, 59, இவரின் அண்ணன் மகன் மருதநாயகம்,35, ஆகியோரும், வேனில் அழைத்த வரப்பட்ட வெங்கடேஷ் மற்றும் இவரது உறவினர்கள் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X