பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஆலோசனை

Added : டிச 07, 2013
Share
Advertisement
உடுமலை : உடுமலையில், தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒன்றிய தலைவர் பாபு தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மணி முன்னிலை வகித்தார். மாவட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் வரவேற்றார். கூட்டத்தில், ஆறாவது ஊதியக்குழுவில், மத்திய அரசு

உடுமலை : உடுமலையில், தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒன்றிய தலைவர் பாபு தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மணி முன்னிலை வகித்தார். மாவட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் வரவேற்றார். கூட்டத்தில், ஆறாவது ஊதியக்குழுவில், மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநில அரசு வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். ஆறாவது ஊதியக்குழுவில், தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கு தனியாக ஊதிய விகிதமும், தர ஊதியமும் நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்து, வேலைவாய்ப்பக முன்னுரிமைப்படி, ஆசிரியர் நியமனங்களை அமல்படுத்த வேண்டும். இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி தொடக்க கல்வியில் தமிழ்வழி கல்வி முறையை தொடர வேண்டும் உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அமைப்பு எடுக்கும் முடிவிற்கு ஆசிரியர்களிடம் ஆதரவு திரட்ட தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி உட்பட அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற் றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X