பப்பாளியில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்த "அட்வைஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பப்பாளியில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்த "அட்வைஸ்'

Added : டிச 07, 2013
Share
ராசிபுரம்: "பாப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, வேம்பு மருந்து தெளித்து பயன்பெறலாம்' என, வெண்ணந்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:வெண்ணந்தூர் வட்டாரத்தில், தற்போது பப்பாளி மாவுப்பூச்சியின் தாக்குதல் தொடங்கியுள்ளது. விவசாயிகள், பொருளாதார சேதாரத்திற்கு முன், இப்பூச்சியைக் கட்டுப்படுத்த,

ராசிபுரம்: "பாப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, வேம்பு மருந்து தெளித்து பயன்பெறலாம்' என, வெண்ணந்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:வெண்ணந்தூர் வட்டாரத்தில், தற்போது பப்பாளி மாவுப்பூச்சியின் தாக்குதல் தொடங்கியுள்ளது. விவசாயிகள், பொருளாதார சேதாரத்திற்கு முன், இப்பூச்சியைக் கட்டுப்படுத்த, அசாடிராக்டின், மூன்று சதவீதம் (வேம்பு மருந்து) மருந்தை, 25 மி.லி., ஒரு வாளி நீரில் கலந்து, காலை அல்லது மாலையில், இலை, தழை, தண்டுப் பகுதிகள் நன்கு நனையும்படி தெளிக்கலாம். இவ்வேம்பு மருந்து, வெண்ணந்தூர் வேளாண் விரிவாக்க மையம் மற்றும் அத்தனூர் துணை வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி மானியத்துடன் அசாடிராக்டின் பெற்று, விவசாயிகள் பயன் பெறலாம். தற்போதைய சூழ்நிலையில், பப்பாளி மாவுப்பூச்சியின் தாக்கம் தென்படுகிறது.
மேலும், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது, பூச்சியின் எண்ணிக்கை அதிகரித்து, பயிரினை பாதிக்கும். எனவே, தற்போதே அசாடிராக்டின், மூன்று சதவீதம் தெளித்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X