புதுடில்லி: அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள இந்த சூழ்நிலையில், 80 லோக்சபா தொகுதிகளை உள்ளடக்கிய 4 மாநிலங்களுக்கு தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த முடிவுகள் லோக்சபா தேர்தலிலும் பிரதிபலித்தால், லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
சட்டீஸ்கர் :
சட்டீஸ்கர் மாநிலத்தில் 2008 சட்டசபை தேர்தலில், பா.ஜ., 50 இடங்களையும் காங்கிரஸ் 38 இடங்களையும் பிடித்தன. அடுத்து 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு 11 இடங்களும் காங்கிரசுக்கு 10 இடங்களும் கிடைத்தன. தற்போதைய தேர்தலில் பா.ஜ., 5 இடங்களை இழந்துள்ளது; காங்கிரஸ் 5 இடங்களை கூடுதலாக பிடித்துள்ளது. இதன் அடிப்படையில் பா.ஜ., 10 லோக்சபா தொகுதிகளையும் காங்கிரஸ் 11 தொகுதிகளையும் கைப்பற்றக்கூடும்.
டில்லி:
டில்லி மாநிலத்தில் 2008 சட்டசபை தேர்தலில், பா.ஜ., 23 இடங்களையும் காங்கிரஸ் 43 இடங்களையும் பிடித்தன. அடுத்து 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு 7 இடங்கள் கிடைத்தன; பா.ஜ., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தற்போதைய தேர்தலில் பா.ஜ., 10 இடங்களை கூ்டுதலாக பிடித்துள்ளது; காங்கிரஸ் 35 இடங்களை இழந்துள்ளது.ஆம் ஆத்மி கட்சிக்கு 27 இடங்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் பா.ஜ., 4 லோக்சபா தொகுதிகளையும் ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளையும் காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றக்கூடும்.
மத்திய பிரதேசம்:
மத்திய பிரதேச மாநிலத்தில் 2008 சட்டசபை தேர்தலில், பா.ஜ., 143 இடங்களையும் காங்கிரஸ் 71 இடங்களையும் பிடித்தன. அடுத்து 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு 16 இடங்களும் காங்கிரசுக்கு 12 இடங்களும் கிடைத்தன. தற்போதைய தேர்தலில் பா.ஜ., 18 இடங்களை கூடுதலாக பிடித்துள்ளது; காங்கிரஸ் 11 இடங்களை இழந்துள்ளது. இதன் அடிப்படையில் பா.ஜ., 19 லோக்சபா தொகுதிகளையும் காங்கிரஸ் 9 தொகுதிகளையும் கைப்பற்றக்கூடும்.
ராஜஸ்தான்:
ராஜஸ்தான் மாநிலத்தில் 2008 சட்டசபை தேர்தலில், பா.ஜ., 78 இடங்களையும் காங்கிரஸ் 96 இடங்களையும் பிடித்தன. அடுத்து 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு 4 இடங்களும் காங்கிரசுக்கு 20 இடங்களும் கிடைத்தன. தற்போதைய தேர்தலில் பா.ஜ., 82 இடங்களை கூடுதலாக பிடித்துள்ளது. காங்கிரஸ் 74 இடங்களை இழந்துள்ளது. இதன் அடிப்படையில் பா.ஜ., 17 லோக்சபா தொகுதிகளையும் காங்கிரஸ் 7 தொகுதிகளையும் கைப்பற்றக்கூடும்.
ஆக மொத்தத்தில் இந்த 4 மாநிலங்களில் உள்ள 80 இடங்களில் 50 லோக்சபா தொகுதிகளை பா.ஜ.,வும் 28 தொகுதிகளை காங்கிரசும் 2 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சியும் கைப்பற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதாவது பா.ஜ., 19 இடங்களை கூடதலாக பெறுகிறது; காங்கிரஸ் 21 இடங்களை இழக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE