பொது செய்தி

தமிழ்நாடு

துண்டு காகிதத்தில் 140 அடி உயர வள்ளுவர் ஓவியம்: 1,147 மாணவர்கள் சாதனை

Added : டிச 09, 2013 | கருத்துகள் (3)
Advertisement
துண்டு காகிதத்தில் 140 அடி உயர வள்ளுவர் ஓவியம்: 1,147 மாணவர்கள் சாதனை

காரைக்குடி: "லிம்கா' சாதனைக்காக, துண்டு வண்ண காகிதம் மூலம், 140 அடி உயர, திருவள்ளுவர் ஓவியத்தை, காரைக்குடி லீடர்ஸ் பள்ளி மாணவர்கள் செய்துள்ளனர். காரைக்குடி, லீடர்ஸ் பள்ளியைச் சேர்ந்த, 1,147 மாணவர்கள், 140 அடி உயரம், 50 அடி அகலம் கொண்ட, கன்னியாகுமரி ஆளுயர திருவள்ளுவர் சிலை ஓவியத்தை, துண்டு காகிதங்களை கொண்டு செய்தனர். இதற்காக, தலா, 200 கிராம் கொண்ட, 1,450 பெவிக்கால் பாட்டில்கள், 1,750 வரைபட அட்டை, 50 ஆயிரம் வார்னிஷ் காகிதம் பயன்படுத்தப்பட்டன.
ஆறு மணி நேரத்தை இலக்காக கொண்டு, காலை, 9:30 மணிக்கு துவங்கி, மாலை, 3:00 மணிக்குள், ஓவியத்தை நிறைவு செய்தனர். 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என, மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. லிம்கா குழு ஒருங்கிணைப்பாளர் தலைமையில், குழுவினர் ஓவியத்தை பதிவு செய்தனர்.

பள்ளி இயக்குனர் ஞானகுரு கூறுகையில், ""மாணவர்களிடையே ஒற்றுமையையும், படைப்பாற்றலையும், தமிழ்ப் பற்றையும் வளர்க்கும் விதமாக, இந்நிகழ்வு நடத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MRSaminathan - Thirumangalam - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10-டிச-201317:28:58 IST Report Abuse
MRSaminathan - Thirumangalam நல்ல விஷயம். பாராட்டுகள்.
Rate this:
Share this comment
Cancel
agasthiyan - riyadh,சவுதி அரேபியா
10-டிச-201314:14:49 IST Report Abuse
agasthiyan எங்கள் தமிழகத்தின் பிஞ்சு நல் உள்ளங்களின் செயல்பாட்டிற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் இதை வெளியிட்ட தினமலருக்கு நன்றிகள்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
10-டிச-201313:43:10 IST Report Abuse
ஆரூர் ரங பிட் அடிக்கும் வயதில் பிட் ஓவியமா/
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X