கசாப் குடும்ப பின்னணி| Dinamalar

கசாப் குடும்ப பின்னணி

Updated : டிச 16, 2013 | Added : டிச 10, 2013 | கருத்துகள் (9)
Advertisement
கசாப் குடும்ப பின்னணி

1987 செப்டம்பர் 13ம் தேதி, முகம்மது அஜ்மல் முகமது அமீர் கசாப் என்பவரின் மகனாக கசாப் பிறந்தான். பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலம், ஒகாரா மாவட்டம், திபால்பூர் தாலுகா பரீத்கோட் கிராமமே இவனது முகவரி. 4வது வகுப்பு வரை உருது பயிற்சி மொழியில் படித்துள்ளான். தாய், தந்தை, தம்பி முனீர், தங்கை சுரையாவுடன் இங்கு பிறந்து, வளர்ந்து, 4வது வகுப்புவரை கல்வி கற்றுள்ளான். இவனுக்கு ஒரு அண்ணனும், அக்காவும் உண்டு. இவர்களுக்குத் திருமணமாகிவிட்டது. அக்காவும் அவள் கணவரும் ஒகாரா மாவட்டத்தில் பதன்கோட் அருகில் ஒரு கிராமத்தில் வசிக்கிறார்கள். அண்ணன் அவர் மனைவியுடன் லாகூரில் வசித்துவருகிறார். அண்ணன், அண்ணி, அக்கா, அவரது கணவர் பெயர்களையும் கசாப் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.
மேலும் தனது தந்தையின் 3 மூத்த சகோதரர்கள், அவர்களது பிள்ளைகள், அவர்களது முகவரி, தாய்வழி மாமன்கள், சித்தி, பெரியம்மா, அவரது கணவர், குடும்ப விவரம், அத்தைகள், அவர்களது குடும்ப விபரம், முகவரிகளையும் கசாப் விளக்கமாகக் கூறியுள்ளான்.
வண்டி ஓட்டியின் மகன்:

கசாப்பின் தந்தை வண்டி ஓட்டுவதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். கசாப்புக்கு டி.வி. பார்ப்பது மற்றும் இந்தி சினிமா மீது மிகவும் ஆசை. இவனுக்கு புகையிலைப் பழக்கம் உண்டு. பரீத்கோட் பஸ் நிலையம் அருகே மருத்துவமனை நடத்தும் ஒரு டாக்டருடன் இவன் நட்புடன் பழகிவந்தான்.

2006ம் ஆண்டு முதல் கசாப் பள்ளி செல்வதை நிறுத்திக்கொண்டான். இவனும் இவனது நண்பன்தித்து இருவரும் பரீத்கோட்டில் தொழிலாளர்களாக வேலை செய்யத் தொடங்கினார்கள். அவன் தந்தை வேலை தேடி லாகூர் செல்லவே இவனும் அவருடன் கூடச்சென்றான். இவன் ஒரு வாடகை வீட்டில் தனது தந்தைமற்றும் மாமன் குலாம் ரசூலுடன் வசித்துவந்தான். இங்கு ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக 5 ஆண்டுகள் வேலைசெய்தான். அவனது தந்தை பின்னர் கிராமத்துக்கே திரும்பிவிட்டாலும் கசாப் லாகூரிலேயே தங்கிவிட்டான். அவ்வப்போது கிராமத்துக்கு வந்து செல்வான். ஒருமுறை அவன் சம்பாதித்த பணம் பற்றி அவனுக்கும் அவன் தந்தைக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, வீட்டை விட்டு வெளியேறி, லாகூரில் அலிஹஜ்வேரி தர்காவில் தங்கி இருந்தான். அவனது நண்பன் ஹபீக் வெல்கம் டென்ட் சர்வீஸ் என்ற இடத்தில் வேலை வாங்கிக்கொடுத்தான். அந்த உரிமையாளர் அவனை பால்கா என்று அழைத்தார். இங்கு கசாப் முசாபர்லால் கான் என்பவரை சந்தித்தான். லஷ்கர்-இ-தோய்பா சேர்க்கை, மூளைச்சலவை மற்றும் பயிற்சிகள் இங்குதான் கருக்கொள்ளத் தொடங்கியது.வாக்குமூலம் பெற்ற நேர்மைவழி:

கசாப் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க விரும்பியபோது, மும்பை முதன்மை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட், அவனை 2009 பிப்ரவரி 17ம் தேதி கூடுதல் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் சாவந்த் வாகுலே (மும்பை, எஸ்ப்ளனேட் 3வது நீதிமன்றம்)யிடம் ஒப்புதல் வாக்குமூலப் பதிவுக்கு அனுப்பிவைத்தார். ( அதாவது இந்தியா மீது படையெடுக்க வந்த பயங்கரவாதிகள் மீது தொடுக்கப்பட்ட 12 வழக்குகளில் இது ஒரு ஆவணம்)

கசாப்பிடம் வாக்குமூலத்தைப் பெற சாவந்த் வாகுலே மெதுவாகவே செயல்பட்டார். (வாக்குமூலம் மனப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக) போலீசிடமிருந்து கசாப்புக்குப் பாதுகாப்பளித்தார். அவன் அவரது பாதுகாப்பில் இருப்பதாகவும் போலீஸ் பாதுகாப்பில் இல்லை என்றும் உறுதியளித்தார். போலீசார் அவனைக் கொடுமையாக நடத்தினார்களா, அவர்கள் பாதுகாப்பில் இருக்கும்போது மோசமாக நடத்தினார்களா என்ற கேள்விக்கு கசாப் இல்லை என்று பதிலளித்தான். தன்னிச்சையாகவே அவன் ஒப்புதல் வாக்குமூலம் தர விரும்புகிறான் என்பதை உறுதிசெய்துகொண்ட மாஜிஸ்திரேட், பின்னரும் அதை உறுதிசெய்துகொள்ள விரும்பி, ""அவன் தற்போது நீதிமன்றக் காவலில் இருப்பதாகவும், எனவே மேலும் 24 மணி நேரம் எடுத்துக்கொண்டு வாக்குமூலம் தர வருமாறும் மாஜிஸ்திரேட் அவனிடம் கூறினார். நீதிமன்றக் காவலில் இருக்கும்போது, போலீசார் அவனுக்கு நிர்ப்பந்தம் ஏதும் செய்யமுடியாது.
மீண்டும் மீண்டும் வாக்குறுதி:

பிப்ரவரி 18, 2009 காலை 11 மணிக்கு, கசாப் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டான். இந்தி பேசுவதில் அவனுக்குக் கஷ்டம் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட மாஜிஸ்திரேட் கேள்வி-பதில் பாணியில் வாக்குமூலப் பதிவைத் தொடங்கினார். மேலும் அவன் தன்னிச்சையாகத்தான் வாக்குமூலம் அளிக்கிறான் என்பதை அறிய, அவன் வாக்குமூலம் அளித்தாலும் அளிக்காவிட்டாலும் அவன் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட மாட்டான் என்றும், நீதிமன்றக் காவலில்தான் இருப்பான் என்றும் மாஜிஸ்திரேட் அவனுக்கு மீண்டும் உறுதியளித்தார்.

இந்த வாக்குமூலப் பதிவில், ஒரு குற்றவாளிக்குரிய சலுகை / உரிமைகள் எதுவும் குறையின்றி மிகவும் நேர்மையான முறையில் மாஜிஸ்திரேட் சாவந்த் வகுலா பணியாற்றியுள்ளார் என்பதை பாரத உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரம்: தேடியது வேலை; மாறியதோ பயங்கரவாதியாக
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyamoorthy - Bangalore,இந்தியா
16-டிச-201312:11:24 IST Report Abuse
Sathyamoorthy ஏன்டா இப்படி மூளை சலவை செய்யறீங்க... ஒரு மனுஷனை நிம்மதியா வாழ விடவே மாட்டீங்களா?? கசாப் பாட்டுக்கு அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இருந்திருப்பான். அவனை தீவிரவாததுக்குள்ள இழுத்து கொன்னுட்டீங்களே??
Rate this:
Share this comment
Cancel
D.V.நன்றுடையான் - mumbai,இந்தியா
15-டிச-201315:20:55 IST Report Abuse
D.V.நன்றுடையான் அப்பறம் என்ன பாகிஸ்தான் திட்டம்மிட்டு செய்யப்பட்ட சதி வேலை என்று ஊர்ஜிதமாகியது கசாபின் குடும்ப பின்னணியும் தெளிவாகிவிட்டது இவன் பாகிஸ்தான் கரன் என்றும் உறுதி.
Rate this:
Share this comment
Cancel
வீர தமிழ் மங்கை - தமிழகம் ,இந்தியா
13-டிச-201312:23:33 IST Report Abuse
வீர தமிழ் மங்கை  திரு கார்த்திகேயன் அவர்களே நான் சொன்னது அப்போதைய நிலைமைக்குத் தான் ,எனது கருத்தில் ஏதேனும் தவறு இருப்பின் மன்னிக்கவும் ..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X