தஞ்சை 1,000வது ஆண்டு விழா பணி:எம்.பி., - அமைச்சர் நேரில் பார்வை

Added : செப் 17, 2010 | கருத்துகள் (5) | |
Advertisement
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலின் 1,000வது ஆண்டு விழா பணிகளை, கனிமொழி எம்.பி., பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர், நேற்று பார்வையிட்டனர்.தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் 26ம் தேதி, விழா நிறைவாக நடக்க உள்ள அஞ்சல் தலை மற்றும் நாணயம் வெளியீடு விழாவில், முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார். இதற்காக, பெரிய கோவில் வடிவில், விழா மேடை அமைக்கப்படுகிறது.மேடை அமைப்பை, நேற்று
தஞ்சை 1,000வது ஆண்டு விழா பணி:எம்.பி., - அமைச்சர் நேரில் பார்வை

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலின் 1,000வது ஆண்டு விழா பணிகளை, கனிமொழி எம்.பி., பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர், நேற்று பார்வையிட்டனர்.தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் 26ம் தேதி, விழா நிறைவாக நடக்க உள்ள அஞ்சல் தலை மற்றும் நாணயம் வெளியீடு விழாவில், முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார். இதற்காக, பெரிய கோவில் வடிவில், விழா மேடை அமைக்கப்படுகிறது.மேடை அமைப்பை, நேற்று பார்வையிட்ட கனிமொழி எம்.பி., மேடை சற்று குறுகலாக இருப்பதாகவும், மேடையின் இரு புறங்களிலும் உள்ள தூண்களை அகற்றி, இரு புறமும் சில அடி அகலமாக்கும்படி தெரிவித்தார். மேலும், பல திருத்தங்களையும் அவர் கூறினார்.


நிருபர்களிடம் கனிமொழி எம்.பி., கூறியதாவது: தஞ்சை பெரிய கோவில் 1,000வது ஆண்டு விழா, வரும் 25, 26ம் தேதியில் நடக்கிறது. நிறைவு நிகழ்ச்சி, மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டுள்ளோம். விழா மேடையில் சில மாற்றங்களை மட்டும் செய்யும்படி கூறியுள்ளேன். கண்காட்சி 24ம் தேதியும், சங்கமம் நிகழ்ச்சி 22ம் தேதியும் துவங்குகிறது. சங்கமம் நிகழ்ச்சி, பெரிய கோவிலிலும், வேறு ஐந்து இடங்களிலும் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு கனிமொழி கூறினார்.


பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:முதல்வர் உத்தரவு மற்றும் ஆலோசனைப்படி, சோழர் கால பெருமையை விளக்கும் கண்காட்சி அமைக்கப்படுகிறது. அக்கண்காட்சியில் சோழர்கால கட்டடக்கலை, ஓவியம், சிற்பம், செப்பு படிமம், செப்பு பட்டயம் போன்றவை காட்சிக்கு வைக்கப்படும்.குஜராத் சாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ள ராஜராஜசோழன் சிலையை பெறுவது குறித்து நானும், சுற்றுலாத்துறை செயலர் இறையன்பு, தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி, தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம் ஆகியோர் சென்றிருந்தோம். அருங்காட்சியக அறங்காவலர்கள் குழு கூடி முடிவு செய்வர். அச்சிலை, ராஜராஜசோழன் சிலை என்பதற்கான ஆதாரங்களை கொடுத்துள்ளோம். சிலையை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு தங்கம் தென்னரசு கூறினார்.


அரண்மனை வளாகத்தில் அமைய உள்ள கண்காட்சித் திடலை பார்வையிட்டனர். பந்தல் அமைப்பாளர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, சில யோசனை தெரிவித்தார்.பிறகு, தஞ்சை பெரிய கோவிலில் நடக்க உள்ள பொது அரங்கப்பணி, 1,000 கலைஞர் நடனமாடும் இடவசதியை பார்வையிட்டனர். தஞ்சை தமிழ் பல்கலையில், கனிமொழி எம்.பி.,யின் எம்.பி., நிதி, ஒரு கோடி ரூபாய் மூலம் அமைக்கப்படும் கூத்துக்களரி கட்டுமானப் பணியையும் பார்வையிட்டனர். அங்கிருந்து திருச்சிக்கு காரில் புறப்பட்டுச் சென்றனர்.சுற்றுலாத்துறை செயலர் இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், கலெக்டர் சண்முகம் உட்பட பலர் உடனிருந்தனர்.


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KS - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-செப்-201015:35:36 IST Report Abuse
KS It is very unfortunate that Karunanidhi is deputing Kanimozhi to this historic temple. Really unimaginable to see each one visiting one after another to the districts of tamilnadu. Karunanidhi - Coimbatore,Kanimozhi - Tanjore, Azhagiri - Madurai, Stallin - Salem.The way it is going on in Tamilnadu it gives an impression that the whole family is working so hard to save their position and power for next 5 years. What will happen if they lose the election after doing so much ? Better to lose because if they continue to remain in power Tamilnadu will be sold out by 2015. BEWARE!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Rate this:
Cancel
rajasji - chennai,இந்தியா
18-செப்-201010:26:19 IST Report Abuse
rajasji கருணாநிதிக்கு தஞ்சை பெரிய கோவிலின் அருகில் வர ஆன்மீக ரீதியிலும் தகுதி கிடையாது !...சமூக ரீதியிலும் கொஞ்சம் கூட தகுதி கிடையாது !! ஒரு மைனாரிட்டி அரசாக சிறுத்துப் போய் ஆட்சி செய்யும் நிலையில்..அரசியல் ரீதியிலும் தகுதி கிடையாது ! வரலாற்றில் திருக்குவளை தீயசக்தி என்று அழைக்கப் படும் ஊழல் பெருச்சாளி கருணாநிதி ....வரலாற்றில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி புகழுடன் ஒளி வீசக்கூடிய ராஜராஜனுக்கு விழா எடுப்பது துரதிஷ்டவசமானது ! எங்களுக்கே கருணாநிதி குடும்பத்தின் அத்து மீறல்கள் கொஞ்சம் கூட பிடிக்காத போது....புகழுக்கும் பெருமைகளுக்கும் உரிய பெரிய கோவிலில் இருந்து இவ்வுலகத்தை ஆட்சி செய்யும் தெய்வத்திற்கு கருணாநிதியின் அட்டூழியம் கபட நாடகம் தெரியாமல் இருக்காது ! எப்படியோ நல்லது நடந்தால் சரிதான் !!! @ rajasji
Rate this:
Cancel
V.Subbarao - Singapore,இந்தியா
18-செப்-201006:03:52 IST Report Abuse
V.Subbarao இந்துக்களின் இறைவன் மீதும் கோயில்களின் மீதும் நம்பிக்கையற்ற இந்தக்கட்சியினர் தஞ்சை கோயிலின் ஆயிரமாண்டு விழ கொண்டாடுவது என்ன பகுத்தறிவு; அல்லது அப்படி ஒரு அறிவே கிடையாதா அல்லது பேசுவதற்கும், எழுதுவதற்கும், மக்களை முட்டாளாக்க மட்டுமேவா. அல்லது உண்மையில் ராஜ ராஜ மன்னனின் ஆயிரமாண்டினை கொண்டாடுவதென்றால் அவன் வாழ்ந்த கோட்டையினை கண்டுபிடித்து அங்கு விழா நடத்தட்டும். ஒரு .......... நினைத்தால் இந்துக்களின் கோவிலின் சுவர்கள் இடிக்கப்படும். இந்துமத மக்களின் மத நம்பிக்கையினை மட்டும் மதிக்காத இவர்கள் ஆட்சிசெய்ய ஓட்டளித்த வாக்களர்களின் அறிவே பேரறிவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X