பதவி விலக மாட்டேன் கங்குலி அறிவிப்பு

Updated : டிச 11, 2013 | Added : டிச 11, 2013 | கருத்துகள் (20)
Share
Advertisement
Ganguly will not quit notice

புதுடில்லி : கற்பழிப்பு புகாரில் சிக்கியுள்ள முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதபதி கங்குலி தற்போது தான் வகி்த்து வரும் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என கூறியுள்ளார்.


பெண் வக்கீல் புகார்:

சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக இளம் பெண் வக்கீல் ஒருவர் புகார் செய்தார். இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் இப்புகாரை விசாரிக்க 3 நீதிபதிகளை கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தினார். இதி்ல் முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி கங்குலி என விசாரணையி்ல் தெரிய வந்தது.

இதனையடுத்து கருத்து தெரிவித்தத சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் புகாரின் அடிப்படையில் கங்குலி மீதான புகார் உண்மை என கூறிய போதும் அவர் தற்போது ஓய்வு பெற்ற காரணத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க விரும் ப வில்லை என தெரிவித்தார்.


மம்தா , சுவராஜ் எதிர்ப்பு:

இந்நிலையில் புகாரில் சிக்கிய முன்னாள் நீதிபதி கங்குலி மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணையராக பதவி வகித்து வருகிறார். அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பார்லி., எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் உட்பட பலர் வலியுறுத்தி வந்தனர்.

இதனை நிராகரித்து வந்த கங்குலி தன் மீதான விசாரணை அறிக்கை வெளியான தினத்தில் இருந்து மாநில உரிமை ஆணைய அலுவலகத்திற்கு வருகை தராமல் இருந்து வந்துள்ளார் இந்நிலையி்ல் இன்று நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கங்குலி பங்கு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதே விழாவி்ல் சிறப்பு விருந்தினராக பங்கேற்க மம்தா பானர்ஜிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் நிராகரி்த்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NVRAMANAN - london,யுனைடெட் கிங்டம்
12-டிச-201301:04:40 IST Report Abuse
NVRAMANAN விலக மாட்டார் விலக மாட்டார் ,எதுக்கு விலகனும், யாராவது பார்த்தீங்களா , இவர் பண்ணாத , இந்தியாவின் மிக தன்னம்பிக்கை கொண்டவர் , யார் எது சொன்னாலும், பதவியை மட்டும் விட்டு கொடுக்கமாட்டார் , மற்ற மந்திரிங்களை போல, உதரணத்துக்கு, நமது பிரதம மந்த்ரி எது நடந்தாலும், கவலையோ, வருத்தமோ, மன சாட்சி என்று இருக்கா என்று கேடக்க தோணுதே இல்ல, அதை போல ஆளுங்க இருக்கையில், இவர் என்ன அப்படி பண்ணிட்டாரு, கொஞ்சம் குடிச்சுபுட்டு, அப்படி இப்படின்னு தான் நடந்துட்டறு, பாவம்,கொஞ்ச நாளாவது சுழலும் சிகப்பு விளக்கை மாடி கொண்டு சுற்ற விடுங்க
Rate this:
Cancel
திருமகள்கேள்வன் - chennai,இந்தியா
11-டிச-201322:22:17 IST Report Abuse
திருமகள்கேள்வன் நம்ம கங்கூலி பேட்டிங்...அந்த மாணவி பீல்டிங... நோ கவர், நோ எக்ஸ்ட்ரா கவர், ரெண்டு பாயிண்ட்...ஒரு கல்லி... இவர் மிட் விக்கேட்ல பால தட்டிட்டு ஓடினார் ஆனா ரன் அவுட் ஆயிட்டார்...பாவம்... செகண்ட் இன்னின்க்ஸ்ல பாத்துக்கலாம் விடுங்க பாஸ்...
Rate this:
Cancel
Dharmalingam Singaravel - tamilnadu,இந்தியா
11-டிச-201320:43:05 IST Report Abuse
Dharmalingam Singaravel நீதிபதி கங்குலி மட்டும் மாணவியை கற்பழிக்க லைசன்ஸ் வாங்கியிருக்காரோ என்னவோ உச்சநீதி மன்றம் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. அடுத்தவர்க்கெல்லாம் நீதியை நிலை நாட்டும் நீதிபதிகள் ஏன் ஓரவஞ்சனை செய்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X