அரசியல் பேச்சுக்களை கண்காணிக்க தவறியதா தேர்தல் கமிஷன்?

Updated : டிச 11, 2013 | Added : டிச 11, 2013 | கருத்துகள் (14)
Share
Advertisement
பொதுவாக இந்திய தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் பெருமைப்படும் படியே உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டு போடுதல் உள்ளிட்ட தேர்தல் முறைகேடுகள் தேர்தல் கமிஷனின் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் வெகுவாக குறைந்துள்ளது. தேர்தல் நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டிருந்தாலும், பல பகுதிகளில் ஏராளமான இந்திய அரசியல் சார்ந்த
EC cannot hope to entirely sanitise election campaigns,அரசியல் பேச்சுக்களை கண்காணிக்க தவறியதா தேர்தல் கமிஷன்

பொதுவாக இந்திய தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் பெருமைப்படும் படியே உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டு போடுதல் உள்ளிட்ட தேர்தல் முறைகேடுகள் தேர்தல் கமிஷனின் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் வெகுவாக குறைந்துள்ளது. தேர்தல் நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டிருந்தாலும், பல பகுதிகளில் ஏராளமான இந்திய அரசியல் சார்ந்த அமைப்புக்களுக்கு எண்ணற்ற சலுகைகளை தேர்தல் கமிஷன் வழங்கி உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


கருத்து கணிப்புக்கு தடை:

தேர்தல் கருத்துக் கணிப்புக்களை வெளியிடுவது தொடர்பாக மீடியாக்களுக்கு சில வழிகாட்டுதல்களுடன் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. ஜனநாயக விதிமுறைகளை மீறக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக தேர்தல் கமிஷன் விதித்த இந்த தடையை அமல்படுத்த முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள் மீடியாக்களின் தேர்தல் ஒளிபரப்புக்களை கட்டுப்படுத்தும் விதமாக இருக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட் நினைவூட்டி இருந்தது.கருத்துக் கணிப்பிற்கு எதிரான தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடு ஜனநாயக நடைமுறைகளை பாதிப்பதாக இருப்பதாகவும், வாக்காளர்களுக்கு தேவையான விபரங்களை அளிப்பது மீடியாக்களின் கடமை எனவும் கூறப்பட்டது.


தேர்தல் கமிஷனின் பணி :

வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டுவது தான் தேர்தல் கமிஷனின் பணி. ஆனால் தேர்தல் கமிஷன் தற்போது மீடியாக்களுக்கு வழிகாட்டி வருகிறது. துவக்கத்தில் மீடியாக்கள், தேர்தல் கமிஷனுக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது போன்ற சில வழிகாட்டுதல்களை அளித்து வந்தது. ஆனால் தற்போது அது மாறி உள்ளது. தடையற்ற, அதேசமயம் ஒரு எல்லைக்கு உட்பட்டு ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் விதமாக தேர்தல் கமிஷன் அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் பேச்சுக்களை ஒழுங்குபடுத்தி இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அவர்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் விதமான பேச்சுக்கள் எல்லையில்லாமல் போய் கொண்டுள்ளது. நாகரிகம், நல்லொழுக்கம் மற்றும் மரியாதைக்குரிய விதமாக தேர்தல் பிரசாரங்கள் அல்லத தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அரசியல் கட்சிகளை வலியுறுத்தவில்லை. இதனால் அரசியலில் நம்பிக்கை தரும் வகையில் வளர்ச்சி ஏதும் ஏற்படவில்லை.


அபத்தமான புகார்கள் :

தேர்தல் கமிஷன், அரசியல் கட்சிகளை முறையாக வழிகாட்டாததால் அரசியல் கட்சியினர் கூறும் அபத்தமான புகார்கள் அதிகரித்துக் கொண்டுள்ளன. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தங்களின் பலத்தை காட்ட இத்தகைய ஆதாரமில்லாத புகார்களை தேர்தல் கமிஷனிடம் அளித்து வருகின்றன. இதனால் பா.ஜ.,வினர், காங்கிரஸ் விஷத்தன்மை உள்ள கட்சி எனவும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், பா.ஜ.,வை கொள்ளைக்காரர்கள் இருக்கும் கட்சி எனவும் விமர்சித்து, அதன் தொடர்ச்சியாக தேர்தல் கமிஷனிடம் புகார்களை அளித்தன. புகார்கள் அதிகரித்த போதும் அது தொடர்பாக தேர்தல் கமிஷன் எவ்வித நடவடிக்கையிலும் இறங்காதது ஜனநாயக உரிமையை வெளிப்படுத்துவதில் சிக்கலையும், மிகப் பெரிய கேள்விக்குறியையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilar Neethi - Chennai,இந்தியா
12-டிச-201303:02:28 IST Report Abuse
Tamilar Neethi இடை தேர்தல் சமயம் ஆளும் கட்சி ஆடி வாகு வாங்கும் விதம் தேர்தல் அதிகாரிகள் அரசியல் கட்சி முதல்வரால் பணி அமர்தபாடல் அவரும் குனிந்து பூ கொடுத்து ஆசி பெறுவது இது எல்லாம் தேர்தல் கமிசன் மீது பொதுமக்கள் மீது ஏகப்பட்ட மரியாதை ஏற்பட வைத்துள்ளது தமிழகத்தில் . ஏற்காடு இடைதேர்தல் நேரத்தில் எல்லா MLA களும் அமைச்சர்களும் அங்கு போயி பட்டுவாடா செய்து வாக்கு வாங்கியது யாருக்கும் தெரியாது குறிப்பாக தேர்தல் கமிசன் அறியாதது . சும்மா தேர்தல் நடத்திட ஒரு கூலி கார கூட்டம் . இவர்கள் தேர்தல் தில்லுமுல்லு களைந்திட முடியாத பட்சத்தில் வங்கிகள் தனியார் நிருவனம்கள் வாசல் காத்திட கூலி கார காவலர்கள் வைத்திருபதுபோல இந்த தேர்தல் பணிகளிகூட யாரரவது ஒரு பாசை தெரியாத நாட்டினருக்கு குத்தகை விடலாம் . அதாவது வாகுகள் வாங்கிடும் அரசியல் கட்சி விற்கும் வாக்காளர்கள் இருவரையும் காசு பரிமாறும் போது சுட உத்தரவு கொடுத்து தேர்தல் நடத்திடல் வேண்டும் . இந்த தேர்தல் வியாபாரம் நடத்திட ஒரு தேர்தல் கமிசன் ??????
Rate this:
Cancel
shyam - ALLENTOWN PA,யூ.எஸ்.ஏ
11-டிச-201323:03:34 IST Report Abuse
shyam யாராவது புகார் அளித்தால் மட்டுமே விளக்கம் கேட்டு பிறகு எச்சரிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் உள்ள இந்த தேர்தல் ஆணையம் தானாகவே முன்வந்து விளக்கம் கேட்க்கவோ விசாரணை செய்யவோ எப்போது முர்ப்படுமோ தெரியவில்லை. தேர்தல் ஆணையம் சி பி ஐ போன்றவற்றுக்கு அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் போன்ற கச்சிகளிடத்தில் உள்ளவரை இப்படித்தான் அதனதன் செயல்பாடுகள் இருக்கும்.
Rate this:
Cancel
Thirumalai Bhuvaraghavan - Chennai,இந்தியா
11-டிச-201317:52:00 IST Report Abuse
Thirumalai Bhuvaraghavan மக்களின் நம்பிக்கை மரத்துப்போய் இன்றுடன் அறுபத்தியேழு வருடம் ஆகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X