ஜனவரியில் இடைக்கால பட்ஜெட்: ஏப்ரலில் தேர்தலுக்கு வாய்ப்பு

Updated : டிச 11, 2013 | Added : டிச 11, 2013 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி : 2014ம் ஆண்டு மே மாதத்துடன் தற்போது அரசின் ஆட்சிகாலம் நிறைவடைய உள்ளது. மார்ச் மாதத்தில் லோக்சபா தேர்தலுக்கான பணிகள் துவங்க உள்ளதால், ஜனவரி 13 முதல் 17ம் தேதி வரை நடைபெற உள்ள பார்லி., கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இடைக்கால பட்ஜெட் : 2ஜி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்,
Vote on account in January, polls may be in March-April,ஜனவரியில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது மத்திய அரசு

புதுடில்லி : 2014ம் ஆண்டு மே மாதத்துடன் தற்போது அரசின் ஆட்சிகாலம் நிறைவடைய உள்ளது. மார்ச் மாதத்தில் லோக்சபா தேர்தலுக்கான பணிகள் துவங்க உள்ளதால், ஜனவரி 13 முதல் 17ம் தேதி வரை நடைபெற உள்ள பார்லி., கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இடைக்கால பட்ஜெட் :

2ஜி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் உள்ளிட்ட ஊழல் விவகாரங்களால் பல்வேறு நெருக்கடிகளை மத்திய அரசு சந்தித்து வரும் வேளையில் நடப்பு அரசின் கடைசி பார்லிமென்ட் கூட்டம் ஜனவரி 13 ம் தேதி துவங்கி 17 தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரின் போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு அவையை செயல்படாமல் முடக்கி வருகின்றன. சபாநயகருக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.,க்கள் 6 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். மழைக்கால கூட்டத்தொடரைத் தொடர்ந்து குளிர்க்கால கூட்டத் தொடரும் முடங்கி வரும் வேளையில், அடுத்த மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.


லோக்சபா தேர்தல் :

2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் ஏப்ரல் மற்றும் மே மாத மத்தியிலேயே லோக்சபா தேர்தல் நடைபெற்றது. ஆனால் தற்போதுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக 2014ல் மார்ச் அல்லது ஏப்ரல் மாத மத்தியில் லோக்சபா தேர்தல் நடைபெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கமல்நாத், மே மாதத்திலேயே தேர்தல் வரும் எனவும், அதற்கு முன் வர வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


அரசுக்கு நெருக்கடி :

4 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்றுள்ள தோல்வி, தெலுங்கானா விவகாரம் தொடர்பாக சீமந்திரா பகுதி எம்.பி.,க்கள் அரசுக்கு எதிராக உயர்த்தி உள்ள போக்கொடி, லோக்சபா சபாநாயகர் மீராக்குமாருக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.,க்கள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், ஊழல் வழக்குகள் என பல்வேறு வகைகளிலும் மத்திய அரசுக்கு நெருக்கடி முற்றி வருகிறது. மீராகுமாருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மம்தாவின் திரிணாமுல் காங்கிரசும், பிஜூ ஜனதா தளத்தின் 14 எம்.பி.,க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தீர்மானம் நிறைவேறாமல் இருக்க 50 எம்.பி.,க்களின் ஆதரவு தேவை. ஆனால் காங்கிரஸ் எம்.பி.,க்கள் மட்டுமின்றி, தெலுங்கு தேச கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் என நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தருபவர்களின் எண்ணிக்கையே அதிகரித்து வருகிறது.


தேர்தல் பணிகள் :

நடப்பு அரசின் பதவி காலம் மே மாதத்துடன் முடிவடைவதால் அதற்கு முன் தேர்தல் நடத்தி புதிய அரசு பதவியேற்க வேண்டும். மே மாதத்தில் தேர்தல் நடக்கும் பட்சத்தில் அதற்கு 2 மாதங்களுக்கு முன்னரே தேர்தல் பணிகள் துவங்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்ய இயலாது என்பதால் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி மாத துவக்கத்தில் நடப்பு அரசின் பதவி காலம் முடிவடையும் வரை தேவைப்படும் நிதிக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தே தீர வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் எந்நேரமும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் லோக்சபா தேர்தலுக்கான பணிகளை தேர்தல் கமிஷனும், அரசியல் கட்சிகளும் இப்போதே துவக்கி உள்ளன. இதன் முதல்படியாக தமிழகத்தில் அதிமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர் டிசம்பர் 15 முதல் 27ம் தேதி வரை அதிமுக தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். இதனால் தேசிய அளவில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumalai Bhuvaraghavan - Chennai,இந்தியா
12-டிச-201308:40:50 IST Report Abuse
Thirumalai Bhuvaraghavan மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கும் அளவிற்கே பயனளிக்கும். இந்த நிதி நிலைக்கு ஆடம்பரமான அறிக்கை தேவையில்லை.
Rate this:
Cancel
Nanban - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-டிச-201318:58:49 IST Report Abuse
Nanban தேர்தல் வந்தாலே... கொண்டாட்டம் தான்.. இதில் எந்த கட்சியும் .. வேறுபாடு கொள்வதில்லை.. மக்களிடையே.. அரசியல் வியாதிகளின் பாசம் பொங்கும்.. அன்பு உருகும்.. ஓடோடி வருவார்கள்.. வாங்க பார்க்கலாம்..
Rate this:
Cancel
Nanban - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-டிச-201318:56:56 IST Report Abuse
Nanban எல்லாம் போச்சா? கடைசி காலம்.. பார்த்து பொறுமையா நடந்துக்கோங்க ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X