ஊழல்களை மிகைப்படுத்தி நாட்டை கீழ்தரமாக கொண்டு செல்கின்றனர்: மீடியா,நீதித்துறை மீது நாராயணசாமி தாக்கு

Updated : டிச 11, 2013 | Added : டிச 11, 2013 | கருத்துகள் (248)
Share
Advertisement
புதுடில்லி : மீடியாக்கள், ஊழல்களை மிகைப்படுத்தி கூறி நாட்டை கீழ்தரமான இடத்திற்கு கொண்டு செல்வதாக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நாராயணசாமி, மீடியா, சிபிஐ மற்றும் நீதித்துறை ஆகியவற்றை கடுமையாக விமர்சித்தார். நாராயணசாமி தாக்கு : நாராயணசாமி பேசுகையில், மீடியாக்கள் ஊழல்களை
PMO minister V Narayanasamy blames media, CBI, judiciary for country's woes,ஊழல்களை மிகைப்படுத்தி நாட்டை கீழ்தரமாக கொண்டு செல்கின்றனர்: மீடியா,நீதித்துறை மீது நாராயணசாமி தாக்கு

புதுடில்லி : மீடியாக்கள், ஊழல்களை மிகைப்படுத்தி கூறி நாட்டை கீழ்தரமான இடத்திற்கு கொண்டு செல்வதாக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நாராயணசாமி, மீடியா, சிபிஐ மற்றும் நீதித்துறை ஆகியவற்றை கடுமையாக விமர்சித்தார்.


நாராயணசாமி தாக்கு :

நாராயணசாமி பேசுகையில், மீடியாக்கள் ஊழல்களை மிகைப்படுத்தி கூறி நாட்டை கீழ்தர நிலைக்கு கொண்டு செல்கின்றன; மீடியாக்களில் ஊழல் இல்லை என்று கூற முடியுமா; சிபிஐ.,க்கு நிறுவனங்கள் குறித்த எந்தவொரு அறிவும் கிடையாது; அதனால் தான் நேர்மையான நிறுவனங்களையும் அவர்கள் துரத்தி துரத்தி குற்றம்சாட்டுகின்றனர்; மீடியாக்களின் விசாரணை அறிக்கை அடிப்படையிலேயே நீதித்துறை இயங்கிக் கொண்டுள்ளது; அதனாலேயே மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாது அதற்கு எதிராக செயல்படுகிறது; மீடியாக்கள் தங்களுக்கென ஒரு சட்டதிட்டங்களை வைத்து தன்னிச்சையாக இயங்கி வருகின்றன; ஆனால் அதை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது; இதே முறையை மீடியாக்கள் தொடர்ந்து மேற்கொண்டால் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக வேண்டி இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


நீதித்துறை மீது தாக்கு :

மீடியாக்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் தொழில்நுட்ப விவகாரங்களை தவறாக புரிந்து கொண்டு நீதித்துறையால் தீர்ப்புகள் வழங்கப்படுவதாலும், முடிவுகள் எடுக்கப்படுவதாலும் இந்திய தொழில்துறை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன; இதனால் தொழில்துறை நிறுவனங்களில் நேர்மையான முறையில் மக்கள் முதலீடு செய்திருக்கும் பணமும், அவர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்; இது அரசின் தவறு கிடையாது; நீதித்துறை செயல்பாடுகளே காரணம். மீடியாக்களிலும், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூகவலை தளங்களிலும் அனைத்து தவறான தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன; சிலரின் தனிப்பட்ட நலனுக்காக நேர்மையான நிறுவனங்கள் மீது சுமத்தப்படும் தவறான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தீர்ப்புக்கள் வழங்கப்படுகின்றன.


சிஏஜி.,க்கு சவால் :

நாராயணசாமி தனது பேச்சில் சிஏஜி.,யை மறைமுகமாக தாக்கி பேசினார். அவர் கூறியதாவது : சில அமைப்புக்கள் பல அமைச்சர்களின் உதவியுடன் முதலீட்டாளர்களின் உணர்வுகளை சீரழித்ததுடன், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கின்றன; 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையும் தவறாக கணித்துள்ளன; அவர்களால் 2ஜி ஊழலால் ஏற்பட்ட இழப்பு சரியாக கணக்கிட்டு கூற முடியுமா; 122 க்கும் அதிகமான சுற்றுக்கள் மூலம் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்பட்டது; இதன் மூலம் அரசுக்கு ரூ.20,000 கோடி மட்டுமே கிடைத்தது; ஆனால் அதனை ரூ.1.76 லட்சம் கோடி என உலகமே கூறுகிறது; இதற்கு யார் காரணம்? நீதித்துறையில் நடைபெறுவதை கூறினால் நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்; உண்மையை கூறினால் யாராவது எனக்கு எதிராக மனு தாக்கல் செய்வர்; நல்லவேளையாக இவர்கள் யாருக்கும் நிர்வாக பொறுப்பு அளிக்கப்படவில்லை; இவர்கள் மக்களாலும் தேர்தெடுக்கப்படவில்லை; அதனால் இவர்கள் குற்றச்சாட்டுக்களுக்கு அப்பாற்பட்டு உள்ளனர்; ஆனால் இவர்களை போன்றவர்களால் நாடு கீழ்தரத்திற்கு சென்று கொண்டுள்ளது; மீடியாக்கள் வீதிக்கு வந்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதால் அரசின் உரிமைகள் செயலற்று போகிறது; மீடியாக்களில் ஊழல்கள் நடக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டியது அவர்களின் கடமை; அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (248)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
16-டிச-201302:44:00 IST Report Abuse
Rajesh இவராளையும், இவர் போன்ற அறிவாளிகளின் கருத்துக்களால் காங்கிரஸ்'க்கு பின்னடைவே. பாவம் பேசட்டும், பாவம் பழுக்கட்டும்.
Rate this:
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
13-டிச-201305:01:42 IST Report Abuse
P. Kannan உண்மை ரெம்போ சுட்டுடுச்சோ , அதான் ரெம்போ கொதிக்கிறார்.
Rate this:
Cancel
கனல் கங்கு - Dallas,யூ.எஸ்.ஏ
13-டிச-201303:05:18 IST Report Abuse
கனல் கங்கு ஒன்றரை இலட்சம் தமிழர்களையே கொலை பண்ணிட்டோம், ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி பணத்தை போயி இவளோ பெரிசா எடுத்துகிரங்கலேன்னு நாராயணனுக்கு ஒரு ஆதங்கம், அவ்ளோதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X