வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள்: ஜனநாயகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?| Voter list errors: cause for concern or nothing to worry about? | Dinamalar

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள்: ஜனநாயகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?

Updated : டிச 12, 2013 | Added : டிச 11, 2013 | கருத்துகள் (7)
Share
புதுடில்லி : உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வருவது நாட்டின் தேர்தல் முறைகளையும், ஜனநாயகத்தையும் நேரடியாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் டில்லியின் நகர்புறங்களில் தேர்தல் நடைமுறைகள் குறித்த நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. குளறுபடியால் ஏற்படும் பிரச்னை : ஒரே மாதிரியான
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள்: ஜனநாயகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?

புதுடில்லி : உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வருவது நாட்டின் தேர்தல் முறைகளையும், ஜனநாயகத்தையும் நேரடியாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் டில்லியின் நகர்புறங்களில் தேர்தல் நடைமுறைகள் குறித்த நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.


குளறுபடியால் ஏற்படும் பிரச்னை :

ஒரே மாதிரியான வாக்காளர் பட்டியலில் இல்லாதது நகர்புறங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இயந்திரமயமாகி விட்ட நகரங்களில் வீடுகளை அடிக்கடி மக்கள் மாற்றி வருவதால் அவர்களின் முகவரிகள் வாக்காளர் பட்டியலில் சரியானதாக இருப்பதில்லை. முகவரிகள் மாறுவதால் வாக்காளர்கள் குறித்த விபரங்களை தொடர்ந்து சரிபார்க்க முடிவதில்லை. இத்தகைய பல்வேறு குறைபாடுகளால் தேர்தல் சமயங்களில் தெளிவான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதில்லை. வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பலரின் பெயர் விடுபட்டு போவதால் பலரால் ஓட்டு போட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஓட்டுப்பதிவின் எண்ணிக்கையும் வெகுவாக குறைகிறது.


வழிகாட்டும் பெங்களூரு :

பெங்களூருவில் ஜனாகிரகா என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு 2004ம் ஆண்டு முதல் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் சரிபார்க்கும் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய தேர்தல் கமிஷனால் இந்த அமைப்பு அங்கீகரிக்கப்பட்டு, பெங்களூருவின் 27 தொகுதிகளில் தெளிவான வாக்காளர் பட்டியல் பேணப்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தேர்தல் சமயத்தில் ஏற்படும் வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை தவிர்க்க பல்வேறு யோசனைகளை கூறி வருகிறது. அதன்படி சராசரியாக ஒரு ஓட்டுச்சாவடிக்கு 1500 வாக்காளர்களும், 400 குடும்பங்களும் 15 தெருக்களும் இருக்க வேண்டும் என கூறுகிறது. இதனால் வாக்காளர்கள் குறித்த விபரங்களை பேரணுவது எளிமையாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் டில்லியல் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பின் மூலம் 1.4 மில்லியன் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர் பட்டியலில் ஏற்படும் தவறுகள் பெருமளவில் குறைக்கப்பட்டது. இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையை விடு வீடாக சென்று தொகுதி வாரியாக கணக்கெடுத்ததில் பைலாட் தொகுதியில் மட்டும் வாக்காளர் பட்டியல் குளறுபடி விகிதம் 53 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக குறைந்துள்ளது.


தேர்தல் கமிஷன் நடைமுறைகள் :

நகரங்களில் தேர்தல் கமிஷன் நடைமுறைகள் மூலம் முந்தைய வாக்காளர் பட்டியலை கொண்டு சரிபார்ப்பதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றது. இது போன்ற சமயங்களில் தேர்தல் கமிஷன் மாநில அரசின் உதவியை நாட வேண்டி உள்ளது. தேர்தல் கமிஷனால் நியமிக்கப்படும் ஓட்டுச்சாவடி அதிகாரிகளைக் கொண்டு விடு வீடாக சென்று பட்டியலை சரிபார்ப்பதன் மூலம் வாக்காளர் பட்டியலை சரியான முறையில் கையாள முடியும். இப்பணிக்காக ஆசிரியர்கள், தபால் ஊழியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களை தேர்தல் கமிஷன் பயன்படுத்தி வருகிறது. ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை இத்தகைய சரிபார்ப்பு பணிகள் நடத்தப்படுவதால் தேர்தல் சமயங்களில் ஏற்படும் குளறுபடிகள் தவிர்க்கப்படுகிறது.


பட்டியல் குளறுபடிகள் :

ஒரு தொகுதியில் சராசரியாக 2000 பேரைக் கொண்டு வாக்காளர் பட்டியல் விபரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் வாக்காளர் பட்டியலில் பேர் சேர்ப்பதற்கு பதிவு செய்யாத 23 சதவீதம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பெயர் சேர்க்க விண்ணப்பித்த 58 சதவீதம் பேரின் பெயர்கள் இடம்பெறாமலும் உள்ளன. 2009-10ம் ஆண்டில் ஜனகிரகா அமைப்பின் செயல்பாட்டிற்கு முன் பைலட் தொகுதியில் புதிதாக வாக்காளர் பட்டியலில் ஆள் சேர்ப்பதற்கு 910 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 2010-11ம் ஆண்டில் ஜனகிரகா செயல்பட துவங்கிய பிறகு தேர்தல் கமிஷனுக்கு 44,218 விண்ணங்கள் வந்துள்ளன. ஓட்டுப்பதிவு முறையை கண்காணிக்கவும், பதியப்படாத ஓட்டுக்களை கணக்கிடவும் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால் பதிவாகாத ஓட்டுக்களையும் எளிதில் கணக்கிட முடியும். நோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் கள்ள ஓட்டுக்களின் எண்ணிக்கை தவிர்க்கப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X