பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.175 கோடி வரி செலுத்த வேண்டும்: மொபைல் போன் நிறுவனத்துக்கு அரசு "கிடுக்கிப்பிடி'

Updated : டிச 12, 2013 | Added : டிச 11, 2013 | கருத்துகள் (14)
Share
Advertisement
"ஏர்செல்' நிறுவனம், தன் மொபைல் போன் டவர்களை மற்ற நிறுவனத்திற்கு விற்ற வகையில், 175 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும்' என, வணிக வரித்துறை "கிடுக்கிப்பிடி' போட்டுள்ளது.தமிழகத்தில், "ஏர்செல்' நிறுவனம், சந்தாதாரர்களுக்காக, மொபைல் போன் கோபுரங்களை பல இடங்களிலும் அமைத்தது. இந்த நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த கோபுரங்களை, மற்றொரு நிறுவனத்திற்கு விற்றதாக
ரூ.175 கோடி வரி செலுத்த வேண்டும்: மொபைல் போன் நிறுவனத்துக்கு அரசு "கிடுக்கிப்பிடி'

"ஏர்செல்' நிறுவனம், தன் மொபைல் போன் டவர்களை மற்ற நிறுவனத்திற்கு விற்ற வகையில், 175 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும்' என, வணிக வரித்துறை "கிடுக்கிப்பிடி' போட்டுள்ளது.
தமிழகத்தில், "ஏர்செல்' நிறுவனம், சந்தாதாரர்களுக்காக, மொபைல் போன் கோபுரங்களை பல இடங்களிலும் அமைத்தது. இந்த நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த கோபுரங்களை, மற்றொரு நிறுவனத்திற்கு விற்றதாக கூறப்படுகிறது. இந்த வகையில், தமிழக அரசுக்கு, 175 கோடிரூபாய் வரி செலுத்த வேண்டும் என, வணிக வரி"த்துறை கண்டுபிடித்துள்ளது. இந்த வரியை, நிறுவனத்திடம் பெறும் வகையில், வணிக வரித்துறை, 'கிடுக்கிப்பிடி' நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து, துறை சார்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிறுவனம் ஒன்றை மொத்தமாக விற்கும்போது, அதற்காக வணிக வரி செலுத்த வேண்டியதில்லை. ஆனால், குறித்த பகுதிகளை விற்கும்போது, அதற்கான வணிக வரி செலுத்த வேண்டும். அதன்படி, "ஏர்செல்' நிறுவனம், 2010 11ல், தன், டவர்களை விற்றுள்ளது. இந்த வகையில், 175 கோடி ரூபாய் வரியை, தமிழக அரசுக்கு செலுத்தி இருக்க வேண்டும்; ஆனால், அதன்படி செலுத்தவில்லை. இதைக் கண்டறிந்து, 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றால், குறித்த தொகையைச் செலுத்த வேண்டும். அதன்படி, 17 கோடி ரூபாயை செலுத்தியுள்ளது. அரசின் நடவடிக்கைளுக்கு எதிராக, நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சென்றது. இதில், அரசுக்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. நிலுவைத் தொகையை வசூலிக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennaipr.com - chennai,இந்தியா
12-டிச-201323:28:38 IST Report Abuse
chennaipr.com வாடிக்கையாளர்கள் தலைல கைய வைச்சுடுவாங்க..
Rate this:
Cancel
cpothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-டிச-201318:30:24 IST Report Abuse
cpothiraj இத்தகைய வழக்குகலை இராணுவத்திடம் ஒப்படைப்பது நல்லது.ஏனென்றால் நேர்மையானவர்களுக்கு கொலைதான் பரிசு.இந்த நாட்டைசீர் அமைக்க வேண்டுமானால் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் சிலவற்றுக்கு இராணுவத்தை பயன்படுத்துங்கள்.தனி மனிதன் இந்த சட்ட திட்டங்களை வைத்து வெல்வது என்பது கனவுதான்.ஒவ்வொரு வழக்குகலையும் நாம் பார்க்கிறோம் வருடக்கணக்கில் நீதிமன்றத்திற்கு அலைந்து இருக்கிற செல்வத்தையும் இழந்து சில பல நேரங்களில் குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள்.இது சரிப்பட்டு வராது என்று நினைத்து தானேகுற்றவாளிகளுக்கு தண்டனை கொடுததால் ,காவல்துறை,நீதித்துறை இருக்கிறது என்று சொல்லி அவருக்கு தண்டனை கொடுப்பார்கள்.நீதியைப் பெறவேண்டுமானால் இளமையை,செல்வத்தை இழந்து பிச்சைக்காரர்களாக ஆகவேண்டும்.இந்த நிலையை மாற்ற சில குற்றங்களை இராணுவத்திடம் கொடுத்து நிறைவேற்றுங்கள்.இல்லையேல் மக்கள்தான் நிறைவேற்றவேண்டி வரும்.இந்த சூழ்நிலையை உருவாக்காதீர்கள்.இலவசத்தை ஒழுங்குமுறைப் படுத்துங்கள்,இதன்பெயரில் களவு செய்வது,பின் பெரும்பான்மை,சிறுபான்மை என்ற வார்த்தையை அகற்றுங்கள் .
Rate this:
Cancel
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
12-டிச-201315:57:12 IST Report Abuse
Angry ஜெய் எப்போ ரோமிங் சார்ஜை எடுத்துவிட போறீங்க ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X