தேர்தல் நடத்தை விதி என்ற பெயரால், பேச்சுரிமையை பறிக்கிறதா தேர்தல் கமிஷன்?

Updated : டிச 12, 2013 | Added : டிச 12, 2013 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி : தேர்தல் பிரசாரங்களின் போது அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசி வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பிரசாரங்களின் போதும் பயன்படுத்தப்படும் தனிநபர் விமர்சனம், கடுமையான வார்த்தை தாக்குதல்கள் ஆகியவற்றை தடுக்க, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்காதது ஏன் என நிபுணர்கள் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதே சமயம் தேர்தல் கமிஷனின் விதிமுறைகள்
EC role in curbing speech questioned, பேச்சுரிமைகளை பறிக்கிறது: தேர்தல் கமிஷன் மீது புகார்

புதுடில்லி : தேர்தல் பிரசாரங்களின் போது அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசி வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பிரசாரங்களின் போதும் பயன்படுத்தப்படும் தனிநபர் விமர்சனம், கடுமையான வார்த்தை தாக்குதல்கள் ஆகியவற்றை தடுக்க, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்காதது ஏன் என நிபுணர்கள் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதே சமயம் தேர்தல் கமிஷனின் விதிமுறைகள் பேச்சுரிமையை பறிக்கும் விதமாக இருப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மதவாதத்தை தூண்டும் வகையிலும், தனி நபரை இழிபடுத்தும் வகையிலும் பிரசார பேச்சுக்களும், அறிக்கைகளும் வெளியிடப்படுவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், அதனை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளும் சட்டங்களும் தேவை என ஒருமித்த கருத்து சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து முன்னாள் தேர்தல் கமிஷன் தலைவர் என்.கோபாலசுவாமி கூறுகையில், இத்தகைய கடுமையான பேச்சுக்களை தடுக்க தேர்தல் கமிஷன் தான் நடுநிலையாக இருந்து செயல்பட வேண்டும் எனவும், இத்தகைய பேச்சுக்கள் தொடர்பாக வரும் புகார்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து விழுங்கி விட்டதாகவோ அல்லது பிரிவினை வாதத்திற்கும் ஆளும் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாகவோ செய்யப்படும் பிரசாரம், மக்களிடையே போராட்ட உணர்வை ஏற்படுத்தாமல் இருக்க அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை கட்டுப்படுத்தும் விதமான நடைமுறைகளை தேர்தல் கமிஷன் நெறிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரமற்ற தகவல்கள்:

தனிப்பட்ட தலைவர் ஒருவரை மதவாத கலவரத்துடன் தொடர்புபடுத்தியோ அல்லது அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியோ ஆதாரமற்ற தகவல்களை பிரச்சாரத்தின் போது தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபால்சுவாமி தெரிவித்துள்ளார். இது போன்ற தேர்தல் பிரசார வரையறைகளை ஏற்படுத்துவதற்கு முன் அப்பகுதி தொடர்பான உள்ளூர் நிலவரத்தையும் தேர்தல் கமிஷன் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கோபாலசுவாமி அறிவுறுத்தி உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ராஜஸ்தான் மற்றம் மத்திய பிரதேசத்தில் மோடி கூறிய ரத்தகறை படிந்த கரங்கள் மற்றும் ராகுலின் மதவாதம் தொடர்பான பேச்சுக்கள் ஆகியவற்றிற்கு தேர்தல் கமிஷன் கண்டனம் தெரிவித்ததுடன் இருவரையும் கண்டித்தது பாராட்டுக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய பேச்சுக்கள் மீது அது தொடர்பான கட்சியோ அல்லத எதிர்கட்சியோ புகார் அளிக்கும் வரை காத்திருக்காமல், முன்னதாகவே அரசியல் கட்சிகளுக்கு பொதுவான எச்சரிக்கையை தேர்தல் கமிஷன் தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலாவதியான தேர்தல் நடைமுறைகள்:

சமூக ஆர்வலர் தீபன்கர் குப்தா கூறுகையில், பழங்கால தேர்தல் விதிமுறைகளை இன்னும் பின்பற்றுவது பயனில்லை எனவும், பொது மக்கள் முன்னிலையில் டீக்கடைக்காரர் பிரதமர் ஆக முடியாது போன்ற விமர்சனங்கள் செய்ய கூடாது எனவும், சோனியாவிற்கு பிரசாரத்தின் போது உடல்நிலை சரியில்லை என கூறி அனுதாபங்கள் பெற விரும்புவது சரியில்லை என தேர்தல் கமிஷன் கூறுகிறது எனவும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளை குறை கூற கூடாது, புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது, கோர்ட்டில் இருக்கும் வழக்கு தொடர்பாக பேச கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் விதிப்பது பேச்சுரிமையை கட்டுப்படுத்தும் விதமாக இருப்பதாகவும் குப்தா தெரிவித்துள்ளார். விளம்பர நிறுவன உரிமையாளர் சந்தோஷ் தேசாய் பேசுகையில், நாட்டில் சட்டத்திற்கு உட்பட்டு தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான புகார்களை விசாரித்து தீர்வு காணும் அமைப்புக்களில் தேர்தல் கமிஷனும் ஒன்று; அதேசமயம் சில நேரங்களில் வரம்பு மீறிய கட்டுப்பாடுகளையும் அது விதித்து வருகிறது; அப்படியானால் பிரசாரத்தின் போது எவற்றை பேச வேண்டும், எவற்றை பேச கூடாது என்பதை தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தலாமே என தெரிவித்துள்ளார்.

அரசியல் சட்டம் என்ன கூறுகிறது:

சட்டப்பிரிவு 19ன்படி அனைவருக்கும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. இதற்கு சில வரையறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. இந்த உரிமை மற்றவர்களை புண்படுத்தாத வகையில், அடிப்படை ஜனநாயக உரிமையை நிலைநாட்டும் விதமாக இருக்க வேண்டும் எனவும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் களத்தில் தேர்தல் கமிஷன் விதித்துள்ள கட்டுப்பாடுகள் ஒருவரின் அடிப்படை உரிமையான பேச்சுரிமையை கட்டுப்படுத்துவதாகவும் பறிப்பதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரசாரத்தின் போது புதிய திட்டங்களை அறிவித்ததாக அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எதிர்கட்சிகளையும் விமர்சிக்க கூடாது; மக்களுக்கு என்ன செய்வோம் என்றும் அறிவிக்கக் கூடாது என்றால், தேர்தல் பிரசாரம் எப்படி இருக்க வேண்டு்ம் என்று தேர்தல் கமிஷன்கருதுகிறது?

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
14-டிச-201308:10:28 IST Report Abuse
JALRA JAYRAMAN தேர்தல் ஆணயம் இந்த பேச்சை கண்டனம் செய்கிறது, இனி பார்த்து பேசவும் என்று சொல்வதை தவிர வேறு என்ன செய்கிறது, தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுப்பதை தவிர்க்க முடியவில்லை, தேத்தல் சமயத்தில் புது திட்டங்கள் அறிவிப்பதை தடுக்க முடியவில்லை, எதோ தேர்தல் ஆணயம் மூலம் சிலருக்கு வேலை கிடைக்கிறது என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டியது தான்
Rate this:
Cancel
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
13-டிச-201321:57:45 IST Report Abuse
எல்.கே.மதி தேர்தல் பிரசாரத்தின் பொழுது புதிய திட்டங்களை அறிவிக்கக்கூடாது என்பது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்... இதையே தேர்தல் ஆணயம் நடைமுறைக்கு கொண்டு வர இயலவில்லையே? சமீபத்திய ஏற்காடு இடைத்தேர்தலில் இந்த அவல நிலையைப் பார்த்தோமே 32 அமைச்சர்கள், அனைத்து மாநகர மேயர்கள், நகராட்சி மன்றத்தலைவர்கள், என்று ஊர்மக்கள் ஜனத்தொகையைவிட ஆளுங்கட்சி தனது கட்சிக்காரகளை பிரசாரத்துக்கும் பணப்பட்டுவாடாவுக்கும் ஒரு மாதமுன்பே அனுப்பி,ஊரை சந்தி சிரிக்கவைத்து விடவில்லையா?இவர்களையும் நம்பாமல், முதலமைச்சரே ஒருநாள் முகாமிட்டு,எவ்வளவு உறுதி மொழிகளை வாரி வழங்கினார்? தேர்தல் ஆணயமும்,மாவட்ட ஆட்சியரும் பார்த்துக்கொண்டு மெளனமாக இருந்ததின்,கைம்மாறுதானே இன்று சேலம் மாவட்ட ஆட்சியருக்கு சிறப்பாக பதவியாற்றியதற்கான சிறப்பு விருந்துகேவலமான அரசியல் உடந்தை போகும் அதிகாரரிகளுக்கு அரசின் சிறப்பு விருந்து ஏன் அரசுத்துறை நாறாது? எந்த குடிமகனுக்கு அரசின் மீது நல்லெண்ணமும்,நம்பிக்கையும் வளரும்?
Rate this:
Cancel
V Nath - PCMC,இந்தியா
13-டிச-201321:41:54 IST Report Abuse
V Nath தேர்தல் நன்னடத்தை விதிகளை நடைமுறைப்படுத்தி மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டு (அதுவும் தி மு க மனு கொடுத்தபின்னர்தான், ) பதிலில் சொன்னவையை ஏற்காது வெறும் எச்சரிக்கை செய்து விட்டுவிடுவது எவ்வகையில் நியாயம்? தேர்தல் ஆணையமா அல்லது தேறுதல் ஆணையமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X