சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கவுன்சிலர் மனைவி மர்ம சாவு?

Added : மே 29, 2010
Advertisement

மரக்காணம் : மரக்காணம் அருகே ஊராட்சி மன்ற கவுன்சிலர் மனைவி மர்மமான முறை யில் தூக்குப் போட்டு இறந் தார். தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது தாய் புகார் செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு ஊராட்சி மன்ற கவுன்சிலர் மோகன். இவரது மனைவி சரசு (28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணமான சில ஆண்டுகளில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால் சரசு கடலூர் முதுநகர் சோனாங் குப்பத்தில் உள்ள தாய் வீட் டிற்கு சென்று விடுவார். பின்னர் அவரது தாய் வீட் டில் சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கம். இந்நிலையில் மோகன் இரண் டாவதாக புனிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சரசு நேற்று அதிகாலை மர்மமான முறையில் கூனிமேடுகுப்பத்தில் உள்ள கணவர் வீட்டில் தூக்கு போட்டு இறந்து கிடந்தார். தகவலறிந்த அவரது தாய் வைஜெயந்தி விரைந்து வந்து மகளின் உடலை பார்த்தவுடன் நெற்றியில் காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அடித்து கொலை செய்யப் பட்டுள்ளார் என மரக்காணம் போலீசாரில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து, பிரேதத்தை கைப் பற்றி கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X