வாஷிங்டன்: வரும் 2014 ம் ஆண்டில் ஜூன் 1 ம் தேதிக்கு முன்னதாக புதிய பார்லி., அமைக்கப்பட்டு விடும் என தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் லோக்சபாவுக்கு பலக்கட்ட தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்காவில் இந்திய அமெரிக்க வர்த்தக கவுன்சில் சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
ஜூன் 1 க்கு முன்னாடி புதிய பார்லி., வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கான பணிகளை துவக்கி விட்டோம். உரிய நேரத்தில் தேர்தலை நடத்தி முடிக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. 6 முதல் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடத்தப்படும். 780 மில்லியன்(78 கோடி) மக்கள் ஓட்டளிக்க உள்ளனர். சுமார் 8 லட்சம் ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்படும். 1.18 மில்லியன் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
நடப்பு பார்லி., அதிகாரம் வரும் மே மாதம் 31 ம் தேதிக்குள் முடிவு பெறுகிறது. அடுத்த பார்லி., வரும் ஜூன் 1 க்கு முன்னதாக புதிய பார்லி., அமைக்கப்பட்டு விடும். முதல் ஓட்டுப்பதிவு நடக்கும் நாளுக்கு 6 வார காலம் முன்னதாக தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும். நாடு முழுவதும் தேர்தலுக்கான ஆயத்த பணியில் இறங்கவுள்ளோம். இதன்படி பூத்துகள், பணியில் ஆட்களை அமர்த்துதல், வாகனம் மற்றும் தளவாடங்கள் வாங்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகிய பணி துவங்கப்படவிருக்கிறது.
மார்ச் மாதம் தேர்தல் தேதி : தேர்தல் தேதி எதையும் கூறாமல் மார்ச் 1ம் தேதிக்கு மேல் தேர்தல் நடைமுறைகள் வந்து விடும் என்றும் , தேர்வு செய்யப்படவிருக்கும் பார்லி., 16 வது தேர்தல் என்றும், 543 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம் மே மாதம் 10ம் தேதிக்கு மேல் தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE